Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»வன்கொடுமைப் பதிவுகள்»சமூக வன்கொடுமைகள்»சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!
    சமூக வன்கொடுமைகள்

    சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

    யாக்கன்By யாக்கன்June 30, 2020No Comments9 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுரையின், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் 30.6.1997 அன்று மாலை 5 மணிக்கு, மேலவளவு கள்ளர்ளுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, மதுரை மேலூரிலிருந்து இரவு 11 மணி பேருந்தில் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 50 பேர் கொண்ட கள்ளர் சாதிக்கொலை வெறிக்கும்பல், நள்ளிரவில் மேலூர் – நத்தம் சாலையில், சென்னகரம்பட்டி வளைவில் மறைந்திருந்து, ஓடும் பேருந்தை வழிமறித்து மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட தலித் சமூகத்தவர் ஏழு பேரை வெட்டிக்கொன்றது,

    இப்போது நினைத்தாலும் பழிவாங்கும் உணர்வை உசுப்பி விடும் அந்த கொடிய படுகொலை நடந்து இன்றோடு இருபத்தி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தலித் மக்களுக்கென ஒதுக்கப் பட்ட மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டதற்காக அந்தப் படுகொலையை நிகழ்த்தினர். முருகேசனை பேருந்திற்குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தலையை எடுத்துக் கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு ‘பர்லாங்’ தொலைவிலிருந்த கிணற்றில் வீசினர்.

    நாட்டில் உள்ள அனைத்து சமூகநலச் சிந்தனையாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்தனர். மேலவளவு கிராமத்தில் வசித்த வந்த அத்தனை தலித் மக்களும் கொலை பீதியில் ஊரைவிட்டே வெளியேறினர். ‘இடைநிலை சாதியச் சமூகநீதிக்குப் பெயர்போன திராவிடக் கொம்பன்’ கருணாநிதியின் ஆட்சி அப்போது நடந்துகொண்டிருந்தது. மதுரை காவல்துறையினர், கொலை வழக்கை சாதாரண பழிவாங்கும் நடவடிக்கை என்று பதிவு செய்தனர். படுகொலையின் பினனால் இருக்கும் இடைநிலை சாதிய வன்மத்தை, கொலை வெறியை, மறைத்து குற்றவாளிகளைத் தப்புவிக்க நடந்த முயற்சிகள் சொல்லி மாளதவை. அனேகமாக அப்போது தமிழகத்தில் இயங்கிய அனைத்து தலித் இயக்கங்களும் கருணா நிதிக்கு எதிராகவும் இடைநிலைச் சாதி ஆதிக்கம் மிகுந்த மதுரை காவல்துறைக்கு எதிராகவும் தீவிரமாகப் போராடின. இப்போது எண்ணிப் பார்த்தாலும் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் உருவாக்கும் மேலவளவு படுகொலை வழக்கை தமிழக ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் நீதிபதிகளும் கையாண்ட விதத்தை அறிந்தவர்கள் வேதனையில் துடித்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டும். படுகொலையைவிட வழக்கு கையாளப்பட்ட விதம் பெரும் கொடுமையானது. கொந்தளிப்பை உருவாக்கக் கூடியது.

    41 கள்ளர் சாதி இந்துக்கள் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய நிபந்தனையற்ற பிணையில் வெளிவந்து சுதந்திரமாக சுற்றித்திரிந்தனர். பலர் மேலவளவு கிராமத்திலேயே தங்கினர். பிணையை ரத்து செய்ய வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 75 வழக்கறிஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து முறையிட்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருந்தனர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் வழக்கறிஞர்கள். உயர்நீதி மன்ற நீதிபதிகளின் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்தது. குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூறுகிறது. ஆனாலும் உச்சநீதிமன்றம் பிணையை ரத்து செய்யவில்லை. பிணையை ரத்து செய்யவே உச்சநீதிமன்றம் வரை செல்ல வேண்டிய நிலையை பின்னாளில் தலித் தலைவர் ஒருவரால் ‘வாழும் அம்பேத்கர்’ என்று புகழப்பட்ட கருணாநிதி உருவாக்கினார்.

    இந்நிலையில் நேர்மையாக வழக்கு விசாரணை நடைபெறாது என்பதை அறிந்த வழக்கறிஞர்கள், வழக்கை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் நீதிபதிகள் வழக்கை சேலத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். பல்வேறு கொலை மிரட்டல்களைச் சந்தித்த வழக்கறிஞர்களும் சாட்சிகளும், மன உறுதியோடு நின்றனர். பிரபலமான தலித் கட்சி ஒன்றின் மதுரைப் பகுதி நிர்வாகிகள் கொலையாளிகளுடன் சமரசம் செய்துகொள்ளும்படி பாதிக்கப்பட்ட மேலவளவு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவதாக செய்திகள் வெளியாகின. வழக்கறிஞர் ரத்தினம் ஆவேசத்துடன் போராடினர். இறுதியில், சேலம் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம் 26.7.2001 அன்று 17 பேருக்கு ஆயுட்காலச் சிறைதண்டனையும், 23 பேரை விடுதலை செய்தும், தீர்ப்பளித்தார். மேலவளவுப் படுகொலை வழக்கிலும்கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி கூறினார். “நள்ளிரவில் பறை நாய்களே என்று கள்ளர்கள் பேசியது, வேறு எவருக்கும் கேட்டிருக்காது; பொதுமக்கள் முன்னிலையில் அது நடக்கவில்லை, எனவே அவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தும் குற்றத்தைச் செய்யவில்லை.” என்றெல்லாம்கூட நீதிபதி இராமலிங்கம் தீர்ப்பெழுதினார். இப்போது அந்த ஏ.ஆர்.ராமலிங்கம் பணி ஓய்வு பெற்று எங்காவது நிம்மதியாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை விசாரணை நீதிமன்றங்களும் உயர்நீதிமன்றங்களும் எடுத்த எடுப்பிலேயே படுகொலை செய்யத் தொடங்கிவிட்டன என்பதை கடந்த கால் நூற்றாண்டு காலமாக தலித் வன்கொடுமை வழக்குகளை கூர்ந்து கவனிக்கும் எவரும் அறிவார்கள். ஆனால் தலித் மக்கள் ‘எவனுக்கு என்ன நடந்தால் என்ன என்று அமைதி காத்து வருகிறார்கள்!

    வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை விசாரணை நீதிமன்றங்களும் உயர்நீதிமன்றங்களும் எடுத்த எடுப்பிலேயே படுகொலை செய்யத் தொடங்கிவிட்டன என்பதை கடந்த கால் நூற்றாண்டு காலமாக தலித் வன்கொடுமை வழக்குகளை கூர்ந்து கவனிக்கும் எவரும் அறிவார்கள். ஆனால் தலித் மக்கள் ‘எவனுக்கு என்ன நடந்தால் என்ன என்று அமைதி காத்து வருகிறார்கள்!

    ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். அதற்காகவே காத்திருந்ததுபோல, சென்னை உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் 17 பேருக்கும் உடனடியாகப் பிணைப் வழங்கியது. இன்று வரையிலும் தலித் மக்கள் வரிசை வரிசையாக நின்று ஆரவாரத்துடன் வாக்களித்துவரும் ‘இரட்டை இலை’ சின்னத்தின் ஆட்சி, ‘தமிழகத்தின் புரட்சித் தலைவி’ ஜெயலலிதாவின் ஆட்சி அப்போது நடந்துகொண்டிருந்தது. கள்ளர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியின் ஆட்சி அது என்பதால், அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் நீதிபதிளும் கொலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களை மிக பயங்கரமான முறையில் படுகொலை செய்த கள்ளர் சாதி வெறியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நெறிகெட்ட முறையில் பிணை வழங்கியபோது, தமிழக அரசு வழக்கறிஞர் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஜெயலலிதா, தனது அரசு வழக்கறிஞர்களிடம் ‘பிணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்று சொல்லியிருப்பார்’ என்பதை இங்கு எழுதத் தேவையில்லை. வழக்கறிஞர் பெ.இரத்தினம் தலைமையிலான சமூக நீதி வழக்கறிஞர்கள், பிணையை ரத்து செய்ய உச்சநீதி மன்றத்தில் முறை யிட்டனர். கடுமையான கொலை மிரட்டல்கள் வந்த போதும் மனம் தளராமல் வழக்கை நடத்தினர். உச்சநீதி மன்றம் பிணையை ரத்து செய்து 17 ஆயுட் சிறை குற்றவாளிகளை சிறையிலடைக்க உத்தரவிட்டது.

    தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றதனாலேயே மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சேலம் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்த 23 பேர்களைத் தண்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. கருணாநிதியோ ‘கள்ள’ மவுனம் சாதித்து வந்தார். தண்டிக்கப்பட்ட 17 குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தண்டனையை உறுதி செய்து கடந்த 19.4.2006 அன்று தீர்ப்பளித்தனர். விடுதலை செய்யப்பட்ட 23 பேர்கள் மீதும் குற்ற ஆதாரங்கள் இருந்தாலும் தமிழக அரசு மேல் முறையீடு செய்யாததால் நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறி கை கழுவினர் நீதிபதிகள். மேலவளவு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க செய்ய அனைத்து முயற்சிகளையும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரு சேர முயற்சித்தனர். கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருபெரும் தலித் மக்கள் விரோதிகளின் வாரீசுகள்தான் இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார்கள். இதைவிட ‘மானங்கெட்ட தரக்குறைவு’ தலித் மக்களுக்கு வேறு என்ன நேர்ந்துவிடப் போகிறது.

    ஆனால், படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதை எத்தனை நாட்களுக்குச் சகித்துக்கொண்டிருக்கப் போகிறோம். அவ்வளவு பாடுபட்டு, வழக்கை நடத்தி, மேலவளவுப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த போதிலும், தண்டனைக் காலம் முடியுமுன்னே அந்தத் தண்டனையை இரத்து செய்து, கடந்த 2019 ஆம் அண்டு நவம்பர் 9 ஆம் தேதி, மேலவளவு குற்றவாளிகள் அனை வரையும் மதுரை சிறையிலிருந்து அ.தி.மு.க. அரசு விடுவித்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை யொட்டி, ‘சிறையில் நன்னடத்தை’ என்ற காரணத்தை கூறி அந்த கொடிய குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டனர்.

    வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டணைகளை வேறு எந்த சட்டத்தின் படியும் விதிகளின் படியும் இரத்து செய்ய முடியாது என்று அச்சட்டத்தின் பிரிவுகள் 19, 20 தெளிவாகக் கூறுகின்றன. ஆனாலும் சட்டவிரோதமாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுதலை ஆணையில் கையெழுத்திட்டார். பன்வாரி லாலுக்கு எதிராகவோ, பழனிச்சாமிக்கு எதிராகவோ நாம் என்ன செய்தோம்! எத்தகைய தலித் விரோத நடவடிக்கைளுக்கும் தமிழகத்தில் எதுவும் நடக்காது என்று ஆட்சியாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, நீதிபதிகள், காவல்துறையினர், ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகமும் இதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.

    எனவேதான், பட்டப் பகலில் கூலிப் படையினரால் வெட்டிக் கொல்லப்பட்ட உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில், முதன்மைக் குற்றவாளியான சங்கர் திருமணம் செய்துகொண்ட கள்ளர் சாதியைச் சார்ந்த கௌசல்யாவின் தந்தை பழனிச்சாமிக்கு, மாவட்ட நீதிமன்றம் வழங்கிய மரண தண்டணையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் சத்திய நாராயணன், நிர்மல்குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வினால் ரத்து செய்து தீர்ப்பெழுத முடிகிறது. அவரை மட்டுமல்ல பழனிச்சாமியின் மனைவி அன்னலட்சுமி, கௌசல்யாவின் தாய்மாமன் பாண்டித்துரை மூவரையும் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளிக்க முடிகிறது. கூலிக்குப் படுகொலை செய்த கொலையாளிகளுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையையும் இரத்து செய்து, ஆயுள்தண்டனையாகக் குறைத்துள்ளனர். தமிழக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் எண்ணற்ற வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சங்கர் கொலை வழக்கில்தான் குற்றவாளிகளுக்கு மரண வழங்கப்பட்டது. அப்படியொரு தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை. அதையும்கூட உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரத்து செய்துவிட்டனர். கொடிய சாதிவெறி கொண்ட சாதி இந்துகளுக்கு பாடம் கற்பிக்கும் எதையும் நமது நீதித்துறை செய்வதில்லை. சட்டத்தின் பால் நின்று அல்ல, சாதி இந்து சமூகத்தின் பிரதிநிதிகளாகவே நீதிபதிகள் செயல்படுகின்றனர் என்பதை உயர்நீதி மன்றங்கள் வழகியுள்ள பல தீர்ப்புகள் நமக்கு வெளிச்சமிடுகின்றன.

    கொடிய சாதிவெறி கொண்ட சாதி இந்துகளுக்கு பாடம் கற்பிக்கும் எதையும் நமது நீதித்துறை செய்வதில்லை. சட்டத்தின் பால் நின்று அல்ல, சாதி இந்து சமூகத்தின் பிரதிநிதிகளாகவே நீதிபதிகள் செயல்படுகின்றனர் என்பதை உயர்நீதி மன்றங்கள் வழகியுள்ள பல தீர்ப்புகள் நமக்கு வெளிச்சமிடுகின்றன.

    சங்கர் படுகொலைக்கும், சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை பழனிச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் முடிவு செய்திருக்கிறார்கள் என்பது, அவர்கள் அளித்துள்ள தீர்ப்பிலிருந்து நன்கு புரிகிறது. வழக்கு விசாரணை செய்த மாவட்ட நீதிமன்றத்தில் “என் தந்தையும் தாயும் தாய்மாமனும் மூவரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, கூலிப்படையை ஏவி, எனது கணவரைக் கொலை செய்தனர்!” என்று கௌசல்யா கண்ணீர் பொங்க கூறிய நேரடி வாக்குமூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்களுக்குப்படாமல் போய்விட்டதா! அந்த வாக்குமூலத்தை அரசு நிரூபிக்க வேண்டுமா! பழனிச் சாமியும் அவரது மனைவியும் ‘போனால் போகட்டும்’ என்று சங்கரையும் கௌசல்யாவையும் வாழவிட்டுவிட்டார்களா! குற்றத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியாதவர்களா உயர்நீதிமன்ற நீதிபதிகள்! நாள்தோறும் நடந்துகொண்டிருக்கும் ஆணவக்கொலைகள் குறித்த எந்த செய்தியையும் நீதிபதிகள் வாசிக்கவில்லையா! தொலைக்காட்சிகளில் பார்க்கவில்லை! சூத்திர இடைநி¬சாதியினர் பட்டியல் வகுப்பினரோடு காதல் திருமணம் செய்து கொள்ளும் தங்களின் பிள்ளைகளை வெறி பிடித்தவர்கள் போல கொன்று புதைப்பது நீதிபதிகளுக்குத் தெரியாதா! அப்படியொரு சாதிவெறிபிடித்த தகப்பனாக – கேடுகெட்ட தனது சாதி மானத்தைக் காப்பாற்றுவதற்காக தனது மகளைக் கொல்ல கூலிப்படையை அமர்த்தியிருக்கலாம் என்று பழனிச்சாமி மீது ஒரு சிறு சங்தேகங்கூட நீதிபதிகளுக்கு ஏற்படவில்லையா! பழனிச்சாமி மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கருதியிருப்பார் களேயானால், வழக்கின் சமூக முக்கியத்துவம் கருதி, மறு விசாரணைக்குக்கூட நீதிபதிகள் ஆணை பிறப்பித்திருக்கலாம். முன்கூட்டியே முடிவுசெய்யப்பட்டது போல ‘தீர்ப்பின் தொணி’ இருப்பதை பல சட்ட வல்லுநர்களும் பத்திரிகைகளும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

    சங்கர் கொலை வழக்கை, தமிழ்நாடு முழுவதிலும் உயர்த்துடிப்போடு இயங்கிக்கொண்டிருக்கும் இடைநிலைச் சாதி வெறிபிடித்த கள்ளர் சாதி அமைப்புகள் தங்களுக்கச் சாதகமாக முடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. தன்னை மட்டுமல்ல உயர்நீதி மன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்றுள்ள கூலிக்கொலையாளிகளையும்கூட கௌசல்யாவின் தந்தை பழனிச்சாமியால் விடுதலை செய்ய முடியும். நன்னடத்தை சான்றுபெற்று தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை செய்ய, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவோ, ஜெயலலிதாவின் நூற்றாண்டு விழாவோ வராமலா போய்விடும்!

    நாம் அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறோம்! இடைநிலைச் சாதியத்திற்கு எதிராகப் போராடி, படுகொலை செய்யப்பட்ட போராளிகள் சிந்திய இரத்தம் அவமானப்பட்டு கிடக்கிறது. அந்த அவமானத்தில் மீண்டும் அது கொப்பத்துக்கொண்டிருக்கிறது. வரலாற்றெங்கிலும் போராடும் குணம் கொண்டவர்களாக அறியப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், இன்று என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மக்களின் உயிருக்கு நிகரான போராட்டக் குணத்தை உருவிக்கொண்டுபோனது எது! வீதியில் இறங்கிப் போராடும் துணிச்சலை ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்து நிற்பது கண்ணீரை வரவழைக்கிறது. போராடாமல் அவர்களால் எதைப் பெற்றுவிட முடியும்.


    எத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதையும், எந்த அளவிற்கு வீரியத்துடன் போராட்டத்தை நடத்த முடியும் என்பதையும் அமெரிக்காவில் காவல்துறை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதிகேட்டு நடந்த போராட்டங்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன. மக்கள் அலையலையாக வீதியில் திரண்டு போராடும்போது, ஆயுதந் தாங்கிய காவல்துறையினர் மக்கள் முன் மண்டியிட்டு நிற்பார்கள் என்பதை அந்தப் போராட்டங்கள் நமக்கு கற்பிக்கின்றன. அந்தப் போராட்டத்தை எந்தத் தலைவரும், எந்தக் கட்சியும் தொடங்கி வைக்கவில்லை. எவருக்காகவும் மக்கள் காத்திருக்கவில்லை. எந்த ஆயுதத்தையும்
    மக்கள் கையில் எடுக்கவில்லை. அலையலையாகத் திரண்டார்கள். உலக அளவிலான போராட்டமாக மாற்றினார்கள்.

    தலித் மக்கள் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகிறார்கள், ஆனாலும் வீதியில் இறங்கிப் போராடுவதைப் பற்றி அம்மக்களால் சிந்திக்க முடியவில்லை. ஏதேனும் படுகொலையோ தாக்குதலோ நடந்துவிடுமானால் யாரேனும் ஒரு தலைவர் அறிக்கை விடமாட்டாரா என்றுதான் மக்களுக்கு எண்ணம் வருகிறது. தலைவர்கள் விடும் அந்த வலுவற்ற அறிக்கைகளினால் ஆனது என்ன! ஏற்பட்ட மாற்றங்கள் என்ன! ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் குணம் மெல்ல மெல்ல நீர்த்துப்போனதற்குக் காரணம் அவர்கள் தேர்தல் அரசியலில் வீழ்த்தப்பட்டதுதான் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும். ஆட்சி அதிகாரம் என்ற ‘மாயப் பிரச்சாரம்’ அவர்களை மௌனப்படுத்தியிருக்கிறது. ஆட்சி அதிகாரம் என்ற கனவில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மிதக்கவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை, ‘இடைநிலைச் சாதி இந்துகளின் தயவு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியாது’ என்ற உண்மை, ‘திருடப் போனவனுக்கு தேள் கொடிய’ சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. என்ன பேசினாலும் பரவாயில்லை, தேர்தல் கூட்டணிக்காக ‘கொஞ்சலாகக் கண்டிக்கும்’ உளவியலையும், தலித் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு ‘பாதுகாப்பும் வழிகாட்டுதலும் வழங்கிப் பாதுகாத்தவர்களுக்கு’ முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து போடும் கோமாளித்தனத்தையும் தேர்தல் அரசியல் வளத்தெடுத்திருக்கிறது. என்ன நடந்தாலும் சரி, பெயருக்கு ஒரு ஆர்ப்பட்டத்தை நடத்திவிட்டு சொகுசுக் கார்களில் பறந்து போகிறார்கள் தலித் தலைவர்கள். சிறைக்கு அனுப்பாமல், ‘போலீஸ் பாதுகாப்புடன்’ போராட்டம் நடத்தும் தந்திரத்தை தலித் கட்சிகளுக்கு, தேர்தல் அரசியல் நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

    தமிழகத்தில், தலித் மக்களின் ‘ஆட்சி அதிகாரக் கனவு’, ஒன்றிரண்டு எம்எல்ஏக்களோடு, எம்பிகளோடு முடிவடைந்து விடுகிறது என்பதைக் கூறவேண்டியதில்லை. இந்நிலை கடந்த நூறாண்டு காலமாக, நீடித்து வருகிறது என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். ஏற்கனவே சமூகத் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் இடைநிலைச்சாதி இந்துகளுக்கு, வரிசை வரிசையா நின்று, வாக்களித்து ஆட்சி அதிகாரத்தையும் வழங்கிவிட்டு பின்னர் எல்லாவற்றுக்காகவும் அவர்களிடம் கெஞ்சும் நிலையில்தான் தலித் மக்களின் ‘ஆட்சி அதிகாரக் கனவு’ அவர்களை ஆட்படுத்தியிருக்கிறது. உண்மையில், ஆட்சி அதிகாரம் என்றால் என்ன! அது எங்கே இருக்கிறது! அதை எப்படி அடைய வேண்டும்! என்ற குறைந்தபட்ச கல்விகூட தலித் மக்களிடம் கொண்டுசெல்லப்படவில்லை.

    ‘தனித்த அரசியல் சக்தியாக வளர்ந்து, தனித்தொகுதிகளிலாவது, தங்களின் நலன்களுக்காகப் போராடும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்த அளவிலாவது ஆட்சி அதிகாரத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலைத்திட்டம்’ எதுவும் தலித் மக்களிடம் பிரச்சாரமாகக்கூட எடுத்துச் செல்லப்படவில்லை. அந்தளவில் அதிகாரத்தைப் பெற்றாலே போதும், நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற உண்மைகூட தலித் மக்களுக்குத் தெரியவில்லை. இல்லையெனில் கொடிய இடைநிலைச் சாதிய சக்திகளுக்கு, ஆரவாரத்துடன் வாக்களிக்கும் பரிதாபகரமான செயலை அவர்கள் நூறாண்டுகளாகச் செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.

    தேர்தல் கூட்டணி கோசங்களும், பல கோடிகள் கைமாறும் தொகுதிப் பங்கீடு பேரங்களும் ‘ஆட்சி அதிகாரம்’ என்ற விஷம் தோய்ந்த சொற்களாக உருவெடுத்து நிற்பதையும், உணர்ச்சி வயப்பட்ட முறையில் அவை பிரச்சாரம் செய்யப்படுகின்றன என்பதையும் வளர்ந்து வரும் தலித் தலைமுறைகள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் அதிகாரமே அனைத்துத் துன்பங்களுக்குமான திறவுகோல் என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக போராடும் குணத்தை இழந்து நிற்பது எத்தனை பரிதாபகரமானது. சாதி இந்துகளின் கையிலிருந்து வீழ மறுக்கும் ஆட்சி அதிகாரத்தை, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டுமென்றால், இந்து அடையாளமற்ற, தனித்த பண்பாடுடைய சமூகமாக தங்களை வளர்த்துக்கொண்டு, அது அளிக்கும் சமூகபலத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கித் திரளும் – எதற்கும் இளகாத – உறுதியான மனம் படைத்த நீண்டகால வேலைத்திட்டத்துடன் செயல் படும் மக்களாக எழுந்து வரும் தலித் தலைமுறை உருவெடுக்க வேண்டும். இனிவரும் நூறாண்டு களுக்குள்ளாவது அந்த எழுச்சியை எழுந்துவரும் தலித் தலைமுறைகள் கண்டடைய வேண்டும். சிந்தப்பட்ட இரத்தத்திற்கும், பறிக்கப்பட்ட உயிர்களுக்கும் நீதி வழங்கும் இடம் அப்போதுதான் அவர்களுக்கு வாய்க்கும்!

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமிக மிகச் சாதாரணமானவை
    Next Article Babasaheb Ambedkar’s Mumbai house ‘Rajgruh’ vandalised, suspect held
    யாக்கன்

    தமது முல்லை அச்சகத்தின் வழியாக மாற்று சிந்தனைக்கான களத்தை உருவாக்கி வருபவர். கழகம் வெளியீட்டகம் மூலமாக 80க்கும் மேற்பட்ட சிறந்த தலித் படைப்புகளை வெளியிட்டுவருகிறார். தலித் முரசு இதழின் ஆசிரியர் குழுவிலும் முற்றுகை இதழின் நிறுவன ஆசிரியராகவும், மாற்றுப்பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் பேரவையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாவலாசிரியர்,சிறுகதையாளர், கவிஞர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.