Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!
    சிறப்பு கட்டுரைகள்

    சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது: கெளசல்யா பேட்டி!

    Sridhar KannanBy Sridhar KannanDecember 12, 2017No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார்.

    உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெளசல்யா,

    என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    முதன்மையாக கொலை வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை குற்றவாளிகளை சிறையிலையே வைத்திருந்தது அறிதிலும் அறிது. அந்த வகையில் என் வழக்கை தனித்துவத்தோடும், சாதிய பின்புலத்தோடும் நீதித்துறை அனுகியுள்ளதாகவே நான் கருதுகிறேன். இதுவும் இனிவரும் சாதிய கெளரவ வழக்குகளுக்கு நல்ல முன்னுதாரனமாக அமையும் என்று நம்புகிறேன். அதிலும் அதிகப்பட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை குறித்த என் கருத்து வேறாக இருந்தாலும், சாதி வெறியர்களுக்கு இனிமேல் கெளரவ கொலைகள் செய்ய மனத்தடையும்,  அச்சத்தையும் ஏற்படுத்தும்.

    இப்படிப்பட்ட வழக்குகளில் என் வழக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவிலேயே முதன்முறை என்கிற வகையில் எங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை. அதிலும் குறிப்பாக இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் போன்ற தண்டனைகள் குற்றவாளிகளை எவ்வகையிலும் தப்பிக்க இடமளிக்கக் கூடாது என்பதையே காட்டுகிறது. இப்படி எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

    சங்கர் கொலையில் முக்கியமானவர்களான அன்னலெட்சுமி, பாண்டித்துறை மற்றும் பிரசன்னா ஆகயோருக்கு விடுதலை வழங்கியிருப்பதை பொறுத்தவரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை என் சட்டப்போராட்டம் தொடரும். தண்டனை கிடைத்தவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இந்த போராட்டத்தில் ஒருபோதும் சளைக்கமாட்டேன்.

    நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே நம்பிக்கையோடு இந்த வழக்கை குறிப்பாக இம்மூவரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டப்போராட்டத்தை மேற்கொள்வேன். சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் ஒருபோதும் ஓயமாட்டேன். ஏனென்றால் சங்கருக்கான நீதி இந்த வழக்கு தீர்ப்பில் மட்டும் அடங்கியிருக்கவில்லை, சாதிய கெளரவக்கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்கான நீதியாக நான் கருதுகிறேன். அதற்கு இந்த தீர்ப்பு துணைசெய்யும் என்று நான் நம்புகிறேன்.

    தீர்ப்பு வழங்கப்பட்ட இன்று நீதிமன்ற வளாகத்திலேயே அசாதாரணச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் மூவரின் விடுதலை தீர்ப்பை கவனத்தில் கொண்டு எனக்கும், சங்கர் குடும்பத்தாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அதன் அடிப்படையில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். சங்கர் வழக்கு தீர்ப்புக்கு இது நாள் வரை உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகளுக்கும் போராட்ட இயக்கங்களுக்கும், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும், நாளிதழ்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Article“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா
    Next Article சாதியின் பேரால் இன்னொரு கொலை கூடாது இங்கே!
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    மாற்றுப்பாதை – ‘தடா’ நல்லரசன்

    August 23, 2011

    Discrimination: An unspoken chapter on most campuses

    May 10, 2021

    நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

    April 28, 2024

    அம்பேத்கரியப் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

    September 30, 2017
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d