Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»News»Atrocities»விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாள் கழித்து புதைக்கப்பட்ட பட்டியலின பெண் உடல் – சுடுகாடு இல்லாத அவலம்
    Atrocities

    விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாள் கழித்து புதைக்கப்பட்ட பட்டியலின பெண் உடல் – சுடுகாடு இல்லாத அவலம்

    Sridhar KannanBy Sridhar KannanMay 21, 2022No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விக்கிரவாண்டி அருகே புதைக்க இடம் இல்லாத நிலையில், பட்டியல் சமூகத்தை சார்ந்தவரின் உடலைத் தங்கள் கோயில் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இறந்த மூன்றாம் நாளே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    பின்னர் மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இடத்தைக் கொடுத்துள்ளார். என்ன நடந்தது?

    தங்களுக்கென சுடுகாடு கூட இல்லாத பட்டியலின மக்கள்

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களும், 500க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்ற பகுதிகளில் எரிப்பதும், புதைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.

    இதனால் தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். பல முறை மனு கொடுத்தும் நிரந்தரமான சுடுகாடு அமைத்துத் தராமல் தற்காலிகமாக ஒரு சில இடங்களை அந்தந்த சூழலுக்கு ஏற்றவறு மட்டுமே அமைத்து கொடுத்தாக பட்டியல் சாதி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

    இத்தகைய சூழலில் கடந்த 18ஆம் தேதி இரவு கொட்டியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சார்ந்த 65 வயதான அமுதா என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டு வருவாய்த்துறை அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

    மே 19ஆம் தேதி அன்று விழுப்புரம் கோட்டாச்சியர் தலைமையில் ஓர் இடத்தைத் தேர்வு செய்தனர். அப்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், அரசு ஒதுக்கிய இடத்தின் அருகிலேயே தங்கள் கோயில் இருப்பதாகக் கூறி அடக்கம்‌ செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய நிரந்தரமான சுடுகாடு அமைத்துத் தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்து உயிரிழந்தவரின் உடலை வைத்து அடக்கம் செய்யாமல் போராட்டம் ஈடுபட்டனர்.

    மீண்டும் காவல்துறையினர் மற்றும் விக்கிரவாண்டி வட்டாட்சியர் நிலையான சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான இடத்தையும் தேர்வு செய்துள்ளதாகவும் கூறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நபர் ஒருவர், பட்டியல் சமூக மக்கள் நிரந்தரமாக உடல் அடக்கம் செய்வதற்கு தனது நிலத்தை வழங்க முன் வந்துள்ளார். பின்னர் அதற்கு மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, கொட்டியாம்பூண்டி கிராமத்தில் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், உயிரிழந்த அமுதாவின் உடல் நேற்று, மே 20ஆம் தேதி, மாலை எரியூட்டப்பட்டது.

    இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், “நிரந்தரமாக இடம் வழங்குவது தொடர்பாக முன்பே சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் இறுதி சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் வரும் 26ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் அந்த கிராமத்தில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டார். அவர்கள் உயிரிழந்த பிறகு புதிதாக அவர்களுக்கு இடம் கண்டறிந்து ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.”

    ”அதன்பிறகு அதே ஊரைச் சேர்ந்த வேறொரு நபர் முன்வந்து தன்னுடைய நிலம் கொடுப்பதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடம் வேண்டும் என்றும் கேட்டார். பின்னர் அந்த இடத்தை தேர்வு செய்து உயிரிழந்தவர் உடலை அங்கே எரியூட்டினர். வரும் காலங்களில் யாரேனும் உயிரிழந்தால் அந்த இடத்தில் அடக்கம் செய்ய நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.”

    ”முன்னதாக கோயில் அருகே உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வந்துள்ளனர். அதனால் கோயில் பக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். பின்னர் அவர்களுக்கென நிரந்தரமான ஓர் இடம் தேர்வு செய்து கொடுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

    ‘நாகரிக சமூகத்திற்கே வெட்கக்கேடு’ – கே.பாலகிருஷ்ணனன்

    இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனன், அரசாங்கம் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைந்து செயல்பட வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.

    Twitter பதிவை கடந்து செல்ல, 1

    Twitter பதிவின் முடிவு, 1

    “அமுதா என்ற பட்டியல் சாதி பெண்ணின் உடலை புதைக்க இடமில்லாமல் 3 நாட்கள் போராட்டம் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் இருப்பதில் 10 குடும்பங்கள் மட்டுமே பட்டியல் சாதியினர். பொது மயானம் மறுக்கப்படுவதால் ஏரி, குளம், ஓடை போன்ற இடங்களிலேயே புதைக்கவும், எரிக்கவும் வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்தக் கொடுமையை மாற்றிட அரசு அதிகாரிகளிடமும் முறையிட்டு தீர்வு ஏற்படாத நிலையில், அமுதா மரணமடைந்துள்ளார்.”

    ”அவருக்கும் சாதி ஆதிக்க சக்திகளால் மயானம் மறுக்கப்பட்டதால். செத்த உடலோடு போராடும் நிலைக்கு உறவினர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 3 நாட்கள் போராட்டத்துக்கு பின் தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கான கோரிக்கை நீடிக்கிறது.

    சுதந்திர இந்தியாவில், சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரிக சமூகத்திற்கே வெட்கக்கேடு,” என்று பதிவிட்டுள்ளார்.

    Thanks : BBC Tamil

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஅயோத்திதாச பண்டிதரின் பண்பாட்டுப் புரட்சி
    Next Article Vows of Dr. Ambedkar
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026

    Comments are closed.

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    மனு நீதி எரிப்போம் மகத் நீரைக் குடிப்போம்

    August 23, 2017

    பௌத்த நெறியேற்பு & புத்தகங்கள் வழங்கும் விழா : எழுச்சித்தலைவர் திருமா உரை

    October 19, 2010

    அயோத்திதாச பண்டிதரின் பண்பாட்டுப் புரட்சி

    May 20, 2022

    பெண்களுக்கான விடுதலையில் அம்பேத்கரின் பங்களிப்பு

    March 11, 2010
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.