Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » தலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை! வன்முறை பலி குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு
    Atrocities

    தலித்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மும்பை! வன்முறை பலி குறித்து சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

    Sridhar KannanBy Sridhar KannanJanuary 2, 2018No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற தலித்களின் நிகழ்வில் மோதல் வெடித்ததில் ஒருவர் பலியானார். இதுகுறித்து சி.ஐ.டி விசாரணைக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

    மும்பை

    818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவை ஆண்ட பேஷ்வா அரச பரம்பரைக்கு எதிரான போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். புனே அருகே நடந்த  இந்தப் போரில் தலித்கள் ஆங்கிலேயப் படைக்கு உதவி செய்தனர். இந்தப் போரின் நினைவாக அந்தப் பகுதியில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. இந்தப் போரை ‘சாதிக்கு எதிரான போர் ‘ என்று அம்பேத்கர் வர்ணித்தார். அதன்பிறகு, ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி தலித் மக்கள் நினைவுத்தூண் அருகே இந்தப் போரின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

    இந்தப் போர் நடந்து இந்த ஆண்டுடன் 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகவே, இதை சிறப்பாக நினைவுகூர தலித் மக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆங்கிலேயர் வெற்றி பெற்ற போரைக் கொண்டாடுவது தேச விரோதம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர் சிலர்.

    இந்நிலையில், நேற்று போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் புனே நோக்கி சென்று கொண்டிருந்த தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதலைக் கண்டித்து மும்பையில் இன்று தலித் இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தால் மும்பை ஸ்தம்பித்தது.

    மும்பை

    மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அத்துடன் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி நீதி விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleதலித்துகள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறி தாக்குதல்
    Next Article Maharashtra: Dalit politics on the boil after violence in Mumbai, Pune
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024

    சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

    April 27, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022

    இந்தியப் பண்பாட்டிற்கு புத்த சமயம் அளித்த கொடை

    December 10, 2016

    எரிமலை எழும்புயல் அம்பேட்கர் வாழ்க…! பாரதிதாசன்

    December 12, 2021

    Dr.B.R.அம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 1

    April 20, 2017
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d