Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » “நான் தாலி வாங்கிட்டு இருந்தப்ப, அவளை அங்க கொன்னுட்டாங்க!’’ – ஆணவக்கொலையால் கதறும் ராணுவ வீரர்
    வன்கொடுமைப் பதிவுகள்

    “நான் தாலி வாங்கிட்டு இருந்தப்ப, அவளை அங்க கொன்னுட்டாங்க!’’ – ஆணவக்கொலையால் கதறும் ராணுவ வீரர்

    Sridhar KannanBy Sridhar KannanMarch 26, 2018No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ்.  உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதில், `திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக மணமகள் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி. அடுத்த வரியில் `கொல்லப்பட்டவரின் பெயர் ஆதிரா ராஜன்’ எனக் கூறப்பட, திருமண வீட்டில் இருந்தவர்களுக்குக் கடும் அதிர்ச்சி. `மணப்பெண் ஆதிரா, குத்திக் கொலைசெய்யப்பட்டார்.  தந்தை ராஜனே ஆதிராவைக் கொன்றார்’ என்ற கொடூரச் செய்தியை மாப்பிள்ளை பிரிஜேஷிடம் உறவினர்கள் பதறியபடி கூறினர். அலறித் துடித்த பிரிஜேஷ், சம்பவ இடத்துக்கு ஓடினார். ரத்த வெள்ளத்தில் ஆதிரா உயிரற்றுக் கிடக்க, பிரிஜேஷின் கல்யாணக் கனவு கலைந்தது. கடந்த வாரத்தில் கேரளாவை அதிரவைத்த ஆணவக்கொலை இது.

    ஆணவக் கொலையால் காதலியை பறிகொடுத்த ப்ரீஜேஷ்
    photo courtesy : indian express

    ராணுவ வீரரான பிரிஜேஷுக்கும் ஆதிராவுக்கும் மூன்று ஆண்டு காதல். கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் ஆதிரா டெக்னீஷியனாகப் பணிபுரிந்தார். பிரிஜேஷின் தாயார் வள்ளிக்கு, சிறுநீரகக் கோளாறு இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மெட்ராஸ் இன்ஜினீயர் பிரிவில் பணியில் இருந்த பிரிஜேஷ், அவரது தாயாரை ஆதிரா பணிபுரிந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பிரிஜேஷின் தாயாரை ஆதிரா அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொண்டார். அந்தச் சமயத்தில்தான் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. மார்ச் 23-ம் தேதி பிரிஜேஷுக்கும் ஆதிராவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது. திருமணத்துக்காக 45 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரிஜேஷ் சொந்த ஊரான கொயிலாண்டிக்கு வந்தார். பிரிஜேஷ், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிரா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாயார் சுனிதா, ஆதிராவுக்கு ஆதரவாக இருந்தாலும் தந்தை ராஜனை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. “பிரிஜேஷைத் திருமணம் செய்தால் இருவரையும் கொலை செய்துவிடுவேன்” என்று ஆதிராவை அடிக்கடி மிரட்டிவந்தார் ராஜன். ஆதிராவோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

    ராஜனின் மிரட்டல் குறித்து போலீஸுக்குத் தகவல் அளித்தார் பிரிஜேஷ். மணமகன் ராணுவ வீரர் என்பதால், போலீஸ் ஆதரவும் பிரிஜேஷுக்கு இருந்தது. உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மணப்பெண்ணின் தந்தை ராஜனை அழைத்து, “திருமணத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது. இருவரும் மேஜர். அதனால், அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்ய இருவருக்கும் உரிமை உண்டு. நீங்கள் தவறாக ஏதாவது செய்தால், உங்களை கைதுசெய்யவேண்டியதிருக்கும்” என்று எச்சரித்தனர். இருதரப்பிலும் சமாதானம் பேசப்பட்டது. ஆதிராவின் பெற்றோரும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். முதலில் பிரிஜேஷ் வீட்டில் வைத்து திருமணம் நடப்பதாக இருந்தது. ஆதிராவுக்கோ தன் சொந்த ஊரான அரிக்கூடு கிராமத்தில் திருமணம் நடைபெறவேண்டும் என விருப்பம். ஆதிராவின் பெற்றோரும் சமாதானமடைந்ததால் மணமகளின் சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. மணப்பெண்ணின் தந்தை ராஜனிடம், திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததாக எழுத்துபூர்வமாகவும் போலீஸார் எழுதி வாங்கினர். `அப்பாடா பிரச்னை முடிந்தது!’ என்று ஆதிரா சந்தோஷக் கனவுகள் சூழ, பெற்றோருடன் வீட்டுக்குச் சென்றார்.

    ஆணவக்கொலை செய்யப்பட்ட ஆதிரா

    ஆனால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, மகளை மீண்டும் `டார்ச்சர்’ செய்ய ஆரம்பித்தார் ராஜன். `எந்தக் காரணத்தைக்கொண்டும் இந்தத் திருமணம் நடக்காது’ என்றவாரே… ஆதிராவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டினார். ராஜன் வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள், வெளியே உள்ளவர்களுக்கும் தெரியவில்லை.

    விடிந்தால் திருமணம் என்ற நிலையில் 22-ம் தேதி இரவு குடித்துவிட்டு வந்த ராஜன், மகளுடன் தகராறில் ஈடுபட்டார்.  ஆதிராவோ தன் நிலையிலிருந்து மாறவே இல்லை. கோபத்தின் உச்சிக்குச் சென்ற ராஜன், “நீ உயிரோடு இருந்தால்தானே இந்தக் கல்யாணம் நடக்கும்…” என்று கூச்சலிட்டிருக்கிறார். மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல் குத்தியிருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே ஓடி, பக்கத்து வீட்டுக்குள் புகுந்தார் ஆதிரா. ஆத்திரம் தணியாத ராஜன், அங்கும் சென்று ஆதிராவை மீண்டும் மீண்டும் குத்த, ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஆதிரா, உயிர் பிரிந்தார். காதலித்த மகளை ஆணவக்கொலை செய்த ராஜனும் காதல் திருமணம் செய்தவர் என்பதுதான் இதில் கொடுமையிலும் கொடுமை.

    கல்யாணக் கனவுடன் கிராமத்துக்கு வந்த பிரிஜேஷ், இப்போது செய்வதறியாது திரிகிறார். காதல் மனைவிக்காக வாங்கிய தாலியையும் பட்டுப்புடவையையும் கட்டிக்கொண்டு கதறும் அவரைத் தேற்ற முடியாமல் நண்பர்கள் தவிக்கின்றனர். “என்னைப் போன்ற நிலை இனி யாருக்கும் வரக் கூடாது. தலித் என்றால் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளக்கூட உரிமை இல்லையா?” என்று பரிதாபத்துடன் கேட்கும் அவருக்குச் சரியான பதில் சொல்ல யாரும் இல்லை.

     

    Courtesy : Vikatan

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஎஸ்சி, எஸ்டி சட்டம் குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய கோரி ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம்
    Next Article JNU முத்துகிருஷ்ணன் குடும்பம் தற்போது…
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    How Tinder Became the App That Defines Online Dating

    January 14, 2021

    ‘Hardas aided Ambedkar in uplift of Dalit’

    November 17, 2017

    அறிவாற்றல் இல்லையெனில் அரசியல் அதிகாரம் இல்லை

    September 17, 2016

    காதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் – கவிதை – மாரி செல்வராஜ்

    June 12, 2016
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d