Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » தலித் காலனியில் உள்ள பள்ளியை புறக்கணிக்கும் இதர சமூகத்தினர்!
    சமூக வன்கொடுமைகள்

    தலித் காலனியில் உள்ள பள்ளியை புறக்கணிக்கும் இதர சமூகத்தினர்!

    Sridhar KannanBy Sridhar KannanJuly 17, 2018No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் ஊராட்சி அரசுப் பள்ளி தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே, நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதன்படி, தற்போது தலித் காலனியில் பள்ளி இருக்கும் இடத்திலேயே புதிய பள்ளிக் கட்டடத்தை கட்ட வேண்டும் என ஒரு பிரிவினரும், நபார்டு வங்கி நிதியின் மூலம் புதிய இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என மற்றொரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு 3 கோடியே 77 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்நிலையில், பள்ளிக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இதர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மாணவர்கள் நான்கு நாட்களுக்கும் மேல் பள்ளிக்கு அனுப்பப்படாமல் இருந்தனர்.

    இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கடந்த புதன்கிழமை சென்று ஆய்வு நடத்தி வியாழக்கிழமை முதல் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப அறிவுறுத்தினார். இதையடுத்து, கடந்த வியாழன் அன்று, இவ்விவகாரத்தில் தீர்வு காண, ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், குரு தட்சிணாமூர்த்தி கோயில் இடம், தற்போது பள்ளி இருக்கும் இடம் ஆகிய இவ்விரு இடங்களில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், குரு தட்சிணாமூர்த்தி கோயில் இடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை நிலம். பட்டாவும் பெற வேண்டும். அதேபோல், தற்போது பள்ளி இருக்கும் இடம் ஏற்கனவே நீர்நிலை புறம்போக்கு இடமாக உள்ளதால் அதிலும் பட்டா பெற சிக்கல் நீடிக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டடம் கட்ட மூன்றாவதாக ஒரு புதிய இடத்தை அரசு காட்டியுள்ளது. இந்த மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றை, 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதற்குள் இரு பிரிவனருக்கும் பொதுவான இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட சம்மதம் தெரிவிக்க வேண்டும். மேலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையடுத்து, திங்கட்கிழமையில் இருந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம், நபார்டு நிதி எந்த வகையிலும் திரும்பிச் செல்வதற்கு முன்பே பள்ளிக் கட்டடத்தை கட்டிவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளோம் என ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

    Source : INDIAN EXPRESS, TAMIL, Jun 17, 2018

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஒரேயொரு ஒருசொல்
    Next Article மகளிரும்  எதிர்ப்புரட்சியும்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?

    March 5, 2023

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    Dalit boy beaten up by teacher for touching drinking water pot in Rajasthan school, dies

    August 13, 2022
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • 1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    Random Posts

    எல்லோரும் சமமென்கிறாய்

    July 10, 2020

    சாதி உணவான சத்துணவு!

    July 19, 2018

    Mr Dalit protest: Why Dalit men in Gujarat are posting pictures on Twitter twirling their moustaches

    October 5, 2017

    “திருமாவளவன் தலித் அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்”

    October 11, 2016
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d