Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»வன்கொடுமைப் பதிவுகள்»சமூக வன்கொடுமைகள்»சாதி உணவான சத்துணவு!
    சமூக வன்கொடுமைகள்

    சாதி உணவான சத்துணவு!

    Sridhar KannanBy Sridhar KannanJuly 19, 2018No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.

    எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளுகிற மாநில அரசு இந்த சாதி வெறியர்களை என்ன செய்யப் போகிறது? அரசு கட்டிடத்திற்குள் உள்ளே வந்து சாதி துவேசத்தை நடத்திச் சென்ற அந்த கும்பல் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த கும்பலுக்கு அடிபணிந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

    தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தீண்டாமைக்கு துணை போயிருப்பது வெட்கக்கேடானது. இதுபோன்ற கொடுமை தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.

    காவேரிபட்டிணம் அருகில் உள்ள அரசம்பட்டி – மூட்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல்காரராக இருந்தவர் மகேஸ்வரி. தலித் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் கணவர் உடல்நலம் பாதிப்படைந்து இறந்து போனார். அதனடிப்படையில் மகேஸ்வரிக்கு சமையல்காரர் வேலை கிடைத்தது. கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி வேலைக்கு சேர்ந்த மகேஸ்வரியை அந்த பகுதியைச் சேர்ந்த ஆதிக்கசாதியினர் நீ தாழ்த்தப்பட்டவள், எங்கள் குழந்தைகளுக்கு சமைக்கக்கூடாது. இந்த பள்ளியை விட்டு வெளியேறு என்று மிரட்டியிருக்கின்றனர். அந்த பெண்ணை தாக்கவும் முயற்சி செய்திருக்கின்றனர். எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அந்த பெண் சமைக்கின்ற உணவினை எந்த குழந்தைகளும் சாப்பிடவில்லை. ஒரு வாரம் பொறுத்திருந்த அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை வெளி உலகத்திற்கு சொல்ல அந்த பிரச்சனை வெரிய விஸ்வருபமெடுத்தது. மகேஸ்வரிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பார்த்தால் பாப்பாள் போன்றே மகேஸ்வரியும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    மேட்டூர், கொளத்தூர் அருகில் உள்ள கிராமம் மூலக்காடு. ஒரு கூரையின் கீழ் இரண்டு மையத்திட்டத்தின் அடிப்படையில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த சந்திராவும், தலித் சமூகத்தைச் சேர்ந்த செம்பாயியும் சத்துணவு அமைப்பாளராக இருந்தனர்.

    இரண்டு அமைப்பாளர்களுக்கும் இரண்டு நாற்காலிகள். பறச்சி எனக்கு சரி சமமாக நாற்காலியில் உட்காருவாயா? என்று கூறி செம்பாயி அமரப்போன நாற்காலியை எட்டி உதைத்தார் சந்திரா. மையத்தில் இருக்கக்கூடிய குடத்தில் தண்ணீர் குடிக்கும் போது, நீ வேறு குடம் வைத்து தண்ணீர் குடி. பொது குடத்தில் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று செம்பாயியை இழிவாக பேசியிருக்கிறார். இதில் கொடுமை என்னவென்றால் ஆதிக்கசாதி குழந்தைகள் எல்லோரும் சந்திராவிடமும் தலித் குழந்தைகள் எல்லோரும் செம்பாயியிடமும் சாதிவாரியாக பிரிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த செம்பாயி தலித் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீராளிக்காடு மாரியம்மான் கோவில் அருகில், பஞ்சாயத்து தொலைக்காட்சி அருகில் வைத்துக் கொண்டு பாடத்தை நடத்திய கொடுமையும் நடந்திருக்கிறது. மழை, குளிர் என்று பார்க்காமல் 5 மாத காலம் கடும் போராட்டத்தை நடத்தினார் செம்பாயி.
    அங்கன்வாடியில் இருக்கின்ற பாத்திரங்களை தலித் குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த ஆதிக்கசாதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து பாத்திரம் கொடுத்துவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. பெரியகுளம் அருகில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் தான் இந்த கொடுமை நடந்தது. இதுமட்டுமல்ல அங்கே குழந்தைகள் சாதிவாரியாக உட்கார வைக்கப்படுவது, சாதி வாரியாக சின்னக் குழந்தைகளை தரம் பிரித்து விளையாட வைப்பது போன்ற கொடுமையும் நடந்தது.

    பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சமையல்காரராக இருந்தவர் முருகேஸ்வரி. ஒரு கட்டத்தில் அவரது சாதி தெரிந்ததும் அந்த பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுமாறு அந்த பகுதியைச் சேர்ந்த சசி உள்ளிட்ட கும்பல் மிரட்டல் விடுத்தனர். இதற்கு அடிபணியாமல் போனதால் 3 மாத காலம் அவர் சமைத்த உணவினை குழந்தைகள் சாப்பிடவில்லை. சத்துணவு சாப்பிடுகிற 33 மாணவர்களில் சராசரியாக 5 பேர் மட்டும் தான் சாப்பிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வேதனையடைந்த முருகேஸ்வரி, குழந்தைகளிடத்தில் நான் வேறு ஊருக்கு செல்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு அழுதிருக்கிறார். புகார் கொடுக்கப்பட்டும் அரசு அதிகாரிகள் முருகேஸ்வரிக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதுபோன்ற கொடுமைகள் தமிழகத்தில் நிறைய நடந்து வருகின்றன. இத்தகைய அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிக்கூடத்தில் தலித் சமையல்காரர்களுக்கு நடக்கக்கூடிய கொடுமைகளுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் அரசு எடுத்தது கிடையாது.

    ஒரு தலித் பெண் சமைக்கின்ற உணவினை சாப்பிடக்கூடாது என்கிற அந்த குரூர புத்தி எங்கிருந்து வருகிறது? அந்த உணவை சாப்பிட்டால் தீட்டு, தங்கள் குழந்தை சாதி ரீதியான அவமானத்திற்கு உட்படுத்தப்படும் என்கிற எச்சரிக்கை உணர்வு எப்படி வருகிறது?

    மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அது சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. இன்று சத்துணவு சாதி உணவாக வளர்ந்து நிற்கிறது.

    இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, பாப்பாள் அதே பள்ளியில் பணியமர்த்தப்படுவார் என்றும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஆறுதல் தான் நீதியல்ல. சாதி உணர்வினை அடித்து நொறுக்குவதுதான் நீதி. அதைதான் பாப்பாள் எதிர்பார்க்கிறார். நாமும் எதிர்பார்க்கிறோம். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?

    – எவிடன்ஸ் கதிர்.

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமகளிரும்  எதிர்ப்புரட்சியும்
    Next Article ‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    Dr.Ambedkar watching a football match

    August 25, 2025

    சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – II

    June 28, 2020

    நாட்டிலொரு நாடகம் நடக்குது! – சிறுகதை – ஆதவன் தீட்சண்யா

    June 20, 2016

    சியாட்டில் சட்டம்: இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் சாதி

    March 14, 2023
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.