சாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை தமது சார்பாகவும், எதிரி மன்னரின் சார்பாகவும் கொல்லப்பட்டதைக் கண்டு அப்போது அவர் மனம் பதைக்கவில்லை, ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளதை ஒரு பௌத்த பிக்கு அவருக்கு உணர்த்தினார். இந்திய வரலாற்றில் சாம்ராட் எனறு அழைக்கப்படும் ஒரே மன்னர் அசோகர் மட்டும்தான், அவ்வளவு புகழ் வாய்ந்த மாமன்னர் தமது வெற்றியை கொண்டாடுவதற்கு பதில் பௌத்த பிக்குவின் போதனையில் மனம் மாறினார், வெற்றியை வன்முறையினால் தக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்தார். உலகில் அவரது பணி நிலைக்க வேண்டுமானால் ஆயிர நாமத்தாழியன் புத்தரின் அறநெறிதான் சிறந்தது என்பதை உணர்ந்தவராய் தமது போர் வெற்றிக்குக் காரணமான ஆயுதங்களைத் துறந்து அன்பின் கீழ் மக்களை அரவணைக்கத் தொடங்கினார். இனி தமது நாட்டில் போர்களே நடைபெறாது என்று அறிவித்தார்.
கலிங்கத்தின் மீது அவர் நிலைநாட்டிய வெற்றியைவிட மிகக்கடினமானதாக கருதப்பட்ட அகிம்சையை அவர் நிலைநிறுத்தியதுதான் அவரது மாபெரும் வெற்றியாக வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதற்காக அவர் முடிவெடுத்து அறிவித்த நாள்தான் விஜயதசமி நாளாகும். போருக்குப் பிறகு பத்தாவது நாளில் அவர் அறிவித்ததைத்தான் (விஜய என்றால் வெற்றி என்றும், தசமி என்றால் பத்து என்றும் பொருள்) அப்படி குறிப்பிடுகிறார்கள். இந்து நாள்காட்டியில் தசமி என்பதற்கு தர்மராஜாவின் நாள் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தர்மத்தை நிலைநாட்ட வந்த ராஜாவின் என்று பொருள், அந்த ராஜா அசோகர் என்பதை யார் மறுக்க முடியும்.
எனவே உலகில் அமைதியினை நிலைநாட்ட போரினைத் துறந்து அன்பின் வெற்றியாளராக திகழ்ந்த அசோகரின் வெற்றி நாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பழைய பொருட்களுக்கு குங்குமம் மஞ்சள் வைத்து, பூசனிகளை உடைத்து வீணாக்கும் கேடுகெட்டப் பழக்கத்தை உண்டாக்கி உங்களை முட்டாளாக்கிய இந்து பயங்கரவாதத்திலிருந்து நீங்கள் வெளியே வந்தால் நீங்களும் வெற்றியாளர்தான்.
விஜயதசமி வாழ்துக்கள்….
கௌதம சன்னா