மூங்கில் குழாய் வழியே
கொட்டாங்குச்சியில்
தேநீர் தந்தவன்;
சானிப்பால் குடிக்கச் செய்து
சவுக்கால் அடித்தவனளல்லவா நீ,
நடவு நேரத்தில்
குழந்தைக்குப் பால் கொடுத்ததற்காய்
என் தாயின் மார்பை அறுத்தவன் நீ.
என் ஆலய நுழைவின்போது
நாயென விரட்டிக்
கொலை பாதகம் செய்ததாய்
தீட்டுக் கழித்தவன் நீ
இன்று
நீயும் நானும் ‘இந்து’ என்கிறாய்
– இராஜமுருகுபாண்டியன்