Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»Dr.அம்பேத்கர்»புத்தர் கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு
    Dr.அம்பேத்கர்

    புத்தர் கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு

    Sridhar KannanBy Sridhar KannanOctober 3, 2022No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    மார்க்ஸியக் கோட்பாட்டில் மிஞ்சியிருக்கும் அம்சங்களை எடுத்துக் கொண்டு புத்தரையும் கார்ல் மார்க்ஸையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    முதல் அம்சத்தில் புத்தருக்கும் கார்ல் மார்க்ஸுக்கும் இடையே முழுமையான கருத்தொற்றுமை உள்ளது. இந்தக் கருத்தொற்றுமை எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டுவதற்குப் புத்தருக்கும் போத்தபாதா என்ற பிராமணருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கீழே மேற்கோள் தருகிறேன்.

    பின்னர், அதே விதமாக, போத்தபாதா (புத்தரிடம்) பின்வரும் கேள்விகளைக் கேட்டார்:

    1. உலகம் நிரந்தரமானது அல்லவா?
    2. உலகம் அளவுக்குட்பட்டதா?
    3. உலகம் அளவற்றதா?
    4. ஆன்மாவும் உடலும் ஒன்றுதானா?

     5.ஆன்மா ஒன்றாகவும். உடல் வேறொன்றாகவும் உள்ளனவா?

    1. உண்மையை அறிந்து கொண்ட ஒருவன் மரணத்துக்குப் பின் வாழ்கின்றானா?
    2. அவன் மரணத்துக்குப் பின் மீண்டும் வாழ்வதும் இல்லை, வாழாமல் இருப்பதும் இல்லையா?

    இந்த ஒவ்வொரு கேள்விக்கும் புத்தபிரான் ஒரே விடையே தந்தார் அந்த விடை இதுதான்:

    “அதுவும் கூட , போத்தபாதா, நான் கருத்து எதுவும் தெரிவிக்காத விஷயம்”

    1. “ஆனால் அதுபற்றி புத்தபிரான் ஏன் கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை” ஏனென்றால் ” இந்தக் கேள்வி பயன் விளைவிக்கக்கூடியதாக இல்லை; அது (தம்மத்துடன் சம்பந்தப்பட்டதல்ல, அது நன்னடத்தையின் அம்சங்களுடன் கூட ஒத்துப் போகக்கூடியதல்ல; பற்றின்மைக்கோ, காமத்திலிருந்து தூய்மை பெறுவதற்கோ, அமைதியாயிருப்பதற்கோ, இதயத்தை சாந்தப்படுத்துவதற்கோ, உண்மையான ஞானத்துக்கோ, (மார்க்கத்தின் உயர் நிலைகளைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கோ, நர்வாணத்துக்கோ அது உதவாது……. “

    இரண்டாவது அம்சத்தில், புத்தருக்கும் கோசலத்தின் பசேனதி மன்னருக்கும் இடையே நடந்த உரையாடலைக் கீழே மேற்கோள் தருகிறேன்:

    “மேலும், மன்னர்களுக்கிடையிலும், பிரபுக்களுக்கிடையிலும். பிராமணர்களுக்கிடையிலும், இல்வாழ்வோருக்கிடையேயும், தாய்க்கும் மகனுக்குமிடையேயும், மகனுக்கும் தந்தைக்குமிடையேயும், சகோதரனுக்கும் சகோதரிக்குமிடையேயும், தோழனுக்கும் தோழனுக்குமிடையேயும்……. எப்போதும் போராட்டம் இருக்கிறது”

    இவை பசேனதியின் சொற்கள் என்றாலும், இவை சமூகத்தின் உண்மையான சித்திரத்தைத் தருகின்றன என்பதைப் புத்தர் மறுக்கவில்லை .

    வர்க்க முரண்பாடு பற்றிய புத்தரின் கருத்கைப் பொறுத்தமட்டில், அவரது அஷ்டாங்க மார்க்கக் கொள்கை, (எண்வகைப் பாதை) வர்க்க முரண்பாடு இருக்கிறது என்றும், முரண்பாடுதான் துக்கத்துக்குக் காரணம் என்றும் ஒப்புக்கொள்கிறது.

    மூன்றாவது அம்சத்தில், புத்தருக்கும் போத்தபாதாவுக்கும் இடையே நடந்த அதே உரையாடலிலிருந்து மேற்கோள் தருகிறேன்:

    “அப்படியானால் புத்தபிரான் முடிவு செய்திருப்பது என்ன?” “போத்தபாதா துன்பமும் துக்கமும் உள்ளன என்று நான் உரைத்திருக்கிறேன்” “துக்கத்தின் காரணம் என்ன என்பதை நான் உரைத்திருக்கிறேன். துக்கத்திற்கு நிவாரணம் என்ன என்பதை நான் உரைத்திருக்கிறேன் துக்க நிவாரணத்தை அடைவதற்கு என்ன மார்க்கம் என்பதையும் நான் உரைத்திருக்கிறேன்”

    30 ‘புத்தபிரான் இதைப்பற்றி எடுத்துரைத்திருப்பது ஏன்?” னென்றால், போத்தபாதா, அந்தக் கேள்வி பயன் விளைவிக்ககூடியதாக உள்ளது. அது தம்மத்துடன் தொடர்பு உள்ளது, நன்னடத்தைக்கும், பற்றின்மைக்கும், காமத்திலிருந்து தூய்மையடைதலுக்கும், அமைதியாயிருத்தலுக்கும், இதயத்தைச் சாந்தப்படுத்தலுக்கும், உண்மையான ஞானத்துக்கும், மார்க்கத்தின் உயர்நிலைகளைப்பற்றி அறிவதற்கும், நிர்வாணத்துக்கும் அது உதவுகிறது. அதனால்தான், போத்தபாதா அதைப்பற்றி நான் எடுத்துரைத்திருக்கிறேன்.”

    அந்த மொழி வேறுபட்டதாக உள்ளது, ஆனால் பொருள் ஒன்றே. துக்கம் என்பதற்குப் பதிலாக, சுரண்டல் என்று வைத்து வாசித்தால் புத்தர், மார்க்ஸிடமிருந்து விலகியிருக்கவில்லை.

    தனிநபர் உடைமை பற்றிய பிரச்சினையில் புத்தருக்கும் ஆனந்தாவுக்கும் இடையிலான உரையாடலில் பின்வரும் பகுதி மிகவும் பொருள் பொதிந்ததாக உள்ளது. ஆனந்தாவின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் புத்தர் கூறினார் :

    “பேராசைக்குக் காரணம் உடைமை தான் என்று கூறியிருக்கிறேன். அது எப்படி என்பதை, ஆனந்தா, பின்வரும் முறையில் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கும், எதற்கும் எந்தவிதமான உடைமையும் இல்லை என்றால், அப்போது எந்த உடைமையும் இல்லாமல் போவதால், இதனால் உடைமை அற்றுப்போகும் காரணத்தால், பேராசை தோன்றக்கூடுமா?”

    “தோன்றாது, பிரானே”.

    “காரணம் என்னவென்றால், ஆனந்தா, அதுதான் பேராசைக்கு அடித்தளமாகவும், அடிப்படையாகவும், தோற்றுவாயாகவும் உள்ளது, அதாவது, உடைமை.

    37.” விடாப்பிடியான தன்மைதான் உடைமைக்குக் காரணம் என்று நான் கூறியிருக்கிறேன். அது எப்படி என்பதை ஆனந்தா, பின்வரும் முறையில் புரிந்துகொள்ள வேண்டும். யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒன்றினிடம் எந்த விதமான விடாப்பிடித் தன்மையும் கொண்டிராவிட்டால், அப்போது எந்த விடாப்பிடித் தன்மையும் இல்லாமல் போவதால், இதனால் விடாப்பிடித்தன்மை அற்றுப் போகும் காரணத்தால், உடைமை எதுவும் தோன்றக்கூடுமா?” “தோன்றாது, பிரானே”

    “காரணம் என்னவென்றால் ஆனந்தா, அதுதான் உடைமைக்கு அடித்தளமாகவும், அடிப்படையாகவும், தோற்றுவாயாகவும் உள்ளது, அதாவது விடாப்பிடித்தனம்”. நான்காவது அம்சத்தில் சான்று எதுவும் தேவையில்லை, பிக்கு சங்கத்தின் விதிகளே இந்த விஷயத்தில் மிகச் சிறந்த சான்றாக உள்ளன.

    விதிகளின்படி ஒரு பிக்கு பின் வரும் எட்டுப் பொருள்களை மட்டுமே தனி உடைமையாகக் கொண்டிருக்கலாம், இந்த எட்டுப் பொருள்களாவன:

    12,3, தினசரி உடுப்பதற்கு மூன்று ஆடைகள் அல்லது துணிகள்

    4.இடையில் கட்டுவதற்கு ஒரு பந்தனம்.

    1. ஒரு பிச்சைப் பாத்திரம்.
    2. ஒரு சவரக்கத்தி.
    3. ஒரு ஊசி
    4. தண்ணீர் வடிகட்டி

    மேலும் ஒரு பிக்கு தங்கத்தையோ வெள்ளியையோ பெற்றுக் கொள்ளக் கூடாது என்று முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. தங்கத்தை அல்லது வெள்ளியைக் கொண்டு அவர் தமக்கு அனுமதிக்கப்பட்டுள்ள எட்டுப் பொருள்களைத் தவிர வேறு எதையேனும் வாங்கி விடலாம் என்பதற்காக இந்தத் தடை

    இந்த விதிகள், ரஷ்யாவில் கம்யூனிசத்தில் உள்ளவற்றை விட மிவும் கடுமையானவை.


    புத்தரா, கார்ல் மார்க்ஸா ? -1

    புத்தரா, கார்ல் மார்க்ஸா ? -2

    புத்தரா, கார்ல் மார்க்ஸா ? -3

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleதமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
    Next Article அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    1 June -1935 Government Law College, Mumbai- Principal Dr.Ambedkar

    June 2, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    Comments are closed.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.