‘என்னுடைய செய்தி போராடுங்கள், மேலும் போராடுங்கள,; தியாகம் செய்யுங்கள், மேலும் தியாகம் செய்யுங்கள். தியாகத்தையோ, சோதனைகளையோ கணக் கில் கொள்ளாமல் தொடா;ந்து போராடுங்கள். உங்கள் போராட்டம் மட்டுமே உங்களுக்கு விடுதலையை அளிக்கும் வேறு எதுவும் இல்லை.”
‘நான் பாறையை போன்றவன் பாறை உருகாது! ஆனால் நதியின் திசையை மாற்றக்கூடிய பலம் பொருந்தியது.
‘வேங்கையைப் போன்று வீறுக்கொண்டு எழுங்கள், உங்களை யாரும் நெருங்க முடியாது”
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இவை மூன்றும் என் சமூக தத்துவ கோட்பாடுகள் ஆகும்.”
நாங்கள் உங்களிடம் தானம் கேட்கவில்லை. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள், அரசாங்க வளங்களில் மற்ற இனமக்களுக்கு உள்ள உரிமை எங்களுக்கும் உண்டு.
‘கற்றவர்கள் உயா; ஆராய்ச்சி செய்வதிலும் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.”
‘உங்கள் மீட்புக்கு நீங்கள் எந்த ஒரு தனி நபா;களையும் சார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. உங்கள் மீட்சி உங்கள் கைகளில் உள்ளது. உங்கள் முயற்சியில் உள்ளது.”
‘நான் பண்பும் பெருமையும் உள்ள என்னுடைய கடமையிலிருந்து விலகி போகமாட்டேன், என்னுடைய மக்களின் நல்ல நியாயமான உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன். அதற்காக நீங்கள் அருகாமையில் உள்ள தெருவிளக்கு கம்பத்தில் என்னை தூக்கு போட்டாலும் கவலையில்லை.”
‘நாம் நம் கவனத்தை உயா;கல்வியில் செலுத்த வேண்டிய, முதலும் மிக முக்கிய தேவையும் ஆகும்.”
‘சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு எதிரான நிலையில் இருந்து காக்க வல்லது சகோதரத்துவம் மட்டுமே.”
ஒடுக்கப்பட்டவர் வாழ்வில் உயா;ந்து மேன்மை அடைய வேண்டுமானால் போராடவும், தியாகங்கள் செய்யவும் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
‘ஒரு சாதி எவ்வளவுக்கு உயா;வானதாக இருக் கின்றதோ அவ்வளவுக்கே அந்த உரிமைகளும் அதிகமாக இருக்கின்றன. ஒரு சாதி எவ்வளவுக்குக் கீழானதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கு அந்த உரிமைகளும் குறைவாக இருக்கின்றன.”
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாி ஒரு புதுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு உங்கள் மதத்தை நீங்கள் திருத்தியமைக்கவேண்டும். அந்த கொள்கை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயக தத்துவம் முதலியவைகளை விளக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
‘நாம் தமது பழைய பழக்கங்களையெல்லாம் அப்படியே அழியாமல் வைத்துக் காப்பாற்ற வேண்டுமா? அல்லது தள்ளவேண்டியவைத் தள்ளி; வேண்டியவை களைக்கொண்டு சீர்திருத்தி நமது சந்ததிகள் முன்னேற்றம் அடையும்படிச் செய்யவேண்டும்.
‘ஷெடுயு+ல்டு இனத்திற்குள்ளேயே உள்ள பிரிவினை எண்ணங்களைத் துடைத்தெறிய வேண்டியது உங்களுடைய பொறுப்பாகும். உங்களின் இந்த விடுதலைப் போராட்டத்தில் நமது சமுதாயத்துப் பெண்களும் இணைந்து போராட வேண்டும்.”