Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»கலை இலக்கியம்»மாற்றுப்பாதை»மாற்றுப்பாதை – பாரதி நிவேதன்
    மாற்றுப்பாதை

    மாற்றுப்பாதை – பாரதி நிவேதன்

    யாழன் ஆதிBy யாழன் ஆதிMay 15, 2010No Comments4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பாரதி நிவேதன் எழுத்து குறித்து

    நவீன எழுத்தின் ஓர்மையை தன் எழுத்தில் வருவித்து, அதன் மூலம் புதிய ஆக்கவெளியினை உருவாக்கும் தன்மை பாரதி நிவேதனுடையது. பாரதி நிவேதன் தன்னுடைய கவிதைகளில் வைத்திருக்கும் பூடகமும் உட்பொருளும் – சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட “இறைச்சி’, “உள்ளுறை’, “உவமம்’ ஆகியவற்றிற்கு ஒத்த பண்புடையவை. பாரதி நிவேதனுடைய கவிதைகளும் அவருடைய ஆக்கத் திறனும் பலராலும் பாராட்டப்படுகிற ஒன்று. அவருடைய இரண்டு தொகுப்புகள் “ஏவாளின் அறிக்கை’, “வேறுகாலம் மறுத்து தாயம் போடுபவர்கள்’ ஆகியன நவீன இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டவை.

    பாரதி நிவேதன் குழந்தைகளுக்கான தனித்த உலகொன்றை உருக்கொள்ள வைத்து, அவர்களின் வாழ்வை அதில் பதியமிடுகிறார். குழந்தைகளின் மீதான அவருடைய பார்வையும், அதனை கவிதைக்காகப் பயன்படுத்தும் உத்தியும் மிகவும் சிறப்பானவை. அதிக பூடகத்தன்மையுடன் அவருடைய கவிதைகள் இருந்தாலும், அதனால் வெளிப்படும் கவித்துவமும் கவிதை உணர்வும் நம்மை மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன.

    செடிகள் அசைகின்றன
    மேகங்கள் மடியிறக்கும் கதிர்வீச்சை
    தூசுகளைப் பரப்பிய காற்று மன்றாடியிருக்கும்
    என்னால் அந்தக் குழந்தையின் சிரிப்புக்கு
    ஏதும் தர இயலவில்லை

    என்று கூறும்போதும்,

    கட்டுமரத் தடுப்புகளின் பின்னால்
    ஒளிந்து பார்க்கும்போது
    குழந்தைகள் விற்பனையாளர்களாக இருப்பதும்
    குனிந்து நிமிரும் போதும்
    குழந்தைகளின் எலும்புகளைக் கண்டு
    கடல் திகைப்பதுமாக

    என்னும்போதும், பாரதி நிவேதனின் குழந்தைகள் குறித்த பார்வையை நம்மால் உணர முடிகிறது! சமச்சீர் கல்வி குறித்தும், அனைவருக்கும் கல்வி திட்டம்குறித்தும் பேசப்படும் இந்நாட்களில், இன்னும் வீச்சாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது ஒரு கேள்விக்குறியாகவேதான் நிற்கிறது.

    ஓர் ஆக்கம் காலம் கடந்து நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், அது அந்தக் காலத்தின் சிக்கலைப் பேசி இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. பாரதி நிவேதனின் பல கவிதைகள், காலம் கடந்து, காலத்தைப் பேசியும் நிற்கக் கூடியன. பாரதி நிவேதனின் இன்னொரு சிறப்பு அவருடைய மொழியாளுமை. கவிதையில் மொழியை அழகியலோடு பயன்படுத்தும்போது, கவிதை அதற்கான அடைவுகளை அடைந்து விடுகிறது. அவருடைய கல்விப் பின்புலம் அவருடைய மொழியாளுமைக்கு பக்கபலமாக இருக்கிறது. செவ்வியல் மொழியை அவர் பயன்படுத்தும் விதம் நவீன கவிதைக் கட்டுமானத்தில் புதிய வெளிகளைத் திறக்கிறது.

    சுனை மழை போற்றுதும்
    சுயமுள்ள காற்று போற்றுதும்
    பருவமெல்லும் பச்சையம் போற்றுதும்
    அனைத்துக் கவியும் நேசம் போற்றுதும்

    என்று அவர் எழுதும்போது, இயற்கை மீதான அவருடைய அன்பும் மொழியும் புலனாகும். வண்டலாக ஓடத்துவங்கும் பகற்பாலை / தரைமட்டமாக்குகின்றன உறக்கத்தின் தாதுவளத்தை எனும் அவரது மொழியாக்கம் – அழகியலின் காரணங்களையும், தலித் கவிதையை அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்கின்றன. தலித் எழுத்து குறித்த அவருடைய பதில் : தலித் கவிதை என்பது வானம்பாடிகளின் எச்சமாக இருக்கிறது. அவர்களின் மொழியை எடுத்துக் கொண்டு நம் வலியை நாம் கூறுகிறோம். அதனால் அரசியல் இயக்க ரீதியான உந்துதல் எற்படலாம். ஆனால், இலக்கிய அரசியலை உருவாக்க முடியாது. ஆகவே “எழுத்து’, “ககடதபற’ போன்ற இதழ்களின் மொழியைப் போல, தலித் எழுத்தும் அழகியலுடையதாக இருக்க வேண்டும்.

    “அதற்கான புதிய உரையாடலை நாம் தொடங்க வேண்டும். மய்யத்தை நோக்கிய தலித் அரசியலை உருவாக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், இன்று அனைத்து சாதிகளும் இத்தகைய ஓர் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் போக்கினை தற்பொழுது பார்க்க முடிகிறது. தலித்துகள் இடஒதுக்கீடு கேட்ட சூழல் போய் இன்று அனைவரும் இடஒதுக்கீடு கேட்கின்றனர். இதனால் தலித்துகளுக்கு மட்டுமான மய்யத்தை கட்டமைக்க முடியாது. “ஆனால் அதே நேரத்தில், வட்டார வழக்கு என்று சொல்லி இலக்கிய பிதையின் இலக்கியத் தன்மையை நாம் மேலும் இழக்க முடியாது. எனவே, மய்யத்தை நோக்கிய புதிய வகைமையை உருவாக்க வேண்டும். அதற்கான உரையாடலை ஏற்படுத்தும் தளத்தை உருவாக்க வேண்டும்.”

    மாரிமுத்துவை விட்டு விடுங்கள்
    தாண்ட முடியாத முனைகள்
    எழுத விடாது
    பேச விடாது
    பேலவிடாது
    தேங்கி நிலைக்குத்தும்
    அவன் மெதுவான பெருமூச்சை
    கலைக்காத மின்விசிறியால்
    வருடப்படுதலற்று கனத்த பிடரியை
    குழல் விளக்கில் ஊற்றி
    தெருமுனையில் உடைத்துவிட்ட மாரிமுத்துவை
    விட்டுவிடுங்கள்

    என்பது “மின்விசிறி’ என்னும் தலைப்பிலான அவருடைய கவிதை. நிவேதன் கூறுவதைப் போல, தலித் கவிதை என்பது ஒற்றைச் சுவையுடையதாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் ஏதோ ஒரு சுவையைத் தரக்கூடியதாக இருந்தால் போதும். அந்தச் சுவையை வாசிப்பவரிடம் கொடுத்து அது மறைந்தால் போதும். இதுதான் பிரச்சினை என்று நான் சொல்லி, என்னுடைய ஆசிரியன் என்னும் அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். அதன் மேல் செயலாற்ற வேண்டியது வாசிப்போரின் கடமை.

    ஆக, இக்கவிதையில் மாரிமுத்துவின் வலி நம்மீது கடத்தப்படுகிறது. ஆசிரியன் பிரதியின் அதிகாரி என்னும் தளத்திலிருந்து இறங்கி வந்துவிடுகிறார். நமக்குக் கிடைப்பது, அவலங்கள் நிறைந்த மாரிமுத்துவின் வாழ்க்கை. இது நடத்துகின்ற அரசியல்தான் மய்யத்தை உடைக்கும் தன்மை வாய்ந்த இலக்கிய அரசியல். இதைத்தான் நிகழ்த்த வேண்டும் என்கிறார் பாரதி நிவேதன். காத்திரமாகவும் வெளிப்படையாகவும் எழுதுவது எல்லாம் நமக்கு கோபத்தை வரவழைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகான அரசியலை நாம் கட்டமைக்க முடியாது. ஆனால் பாரதி நிவேதனு டையதைப் போன்ற கவிதைகள், மொழியின் அழகிய லையும் கவிதையின் செம்மாந்த நிலையையும் அடையும் போது, அவை மறுவாசிப்பையோ கீழ்மேல் வாசிப்பையோ கோருகின்றன.

    இலக்கிய அரசியலையே தன் எழுத்தின் நோக்கமாக அறிவிக்கிறார் பாரதி நிவேதன். இயக்கத்தில் வேலை செய்வது, தற்போதைய சூழலில் தன்னால் ஆகாது. ஆனால், இலக்கிய அரசியலை நிகழ்த்த தன்னால் ஆகும் என்கிறார். தலித் இலக்கியத்தை பொதுத்தன்மைக்குக் கொண்டு செல்லும் ஆக்கங்களை உருவாக்குவதும், அதற்கான உரையாடல்களை நடத்துவதும் தன்னுடைய வேலையாக அவர் அறிவித்திருப்பது முக்கியமான செயல் திட்டமாகும். தலித் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இதற்கான ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்பது அவருடைய அவா. அவருடைய முதல் தொகுப்பு “ஏவாளின் அறிக்கை.’ இந்தப் பெயர் சூட்டலும் கவிதையும் புதிய தொன்மத்தினை

    தமிழுக்குத் தருகின்றன. இந்துத்துவ தொன்மங்களான கண்ணகி, சீதை போன்ற பெயர்களை விடுத்து, ஏவாள் என்னும் பெயரை தொன்மமாகப் பயன்படுத்தும் அவருடைய நுண்ணரசியல், தமிழுக்கான எல்லா இயங்களையும் பெண்ணியம் உட்பட வெளியிலிருந்துதான் பெறப்பட்டுள்ளது. அதைப் போல இந்தத் தொன்மத்தையும் தான் வைத்ததாகக் கூறுகிறார். அந்தக் கவிதையின் இறுதிப் பகுதி / நரம்பறுந்தவர்களின் அருகாமையில் / சமையலறை நிசிவழிசலில் / பிணவறைக் கொட்டகையில் / அவளின் அறிக்கைகளை விழுங்க / அருவாள்கள் ஒளியுடன் தொடர்கின்றன என்று முடியும். பெண்ணிய அரசியலின் குறியீடாக இந்துத்துவ சூழலில் ஏவாளை உருவாக்குவது என்பதே கலைத்தல் என்னும் கலகச் செயல்பாடாகத்தான் இருக்கும்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்து, அங்கேயே படித்த அவருக்கு, தன்னுடைய ஆக்கத் திறனுக்கு அந்தப் பகுதியும் ஒரு காரணம் என்கிறார். தன்னுடைய முனைவர் பட்டத்திற்காக மதுரை வந்த பிறகு தன்னுடைய எழுத்தில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறும் இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நிவேதனின் தந்தையும் ஒரு கவிஞர். தந்தை மார்க்சியவாதியாக இருந்து திராவிடர் கழகத்திலும், பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பணியாற்றியவர். இதன் பாதிப்பால் தெõடக்க காலங்களில் பாரதி நிவேதன் மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். பின்பு அதிலிருக்கும் சிக்கல்களினால் புதுக் கவிதைதான் தனக்கு ஏற்புடையது என்று எழுதத் தொடங்கி, நவீன எழுத்தையும் குன்னூரில் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் தொடங்கியிருக்கிறார்.

    பாரதி நிவேதன் என்னும் வைணவப் பெயரை அவர் வைத்திருந்தாலும், தீவிரமாக தலித் கவிதைகளை மாற்றுச் சூழலுக்குக் கொண்டு செல்லும் சிந்தனையுடையவராகவே எந்நேரமும் செயல்படுகிறார். எதார்த்தம், முழக்கத்தன்மை என்று தலித் அரசியல் எழுச்சிக்காக மட்டும் இருக்கக்கூடிய தலித் எழுத்து, இலக்கிய ஆளுமை மிக்கதாக மாற வேண்டும் என்னும் பாரதி நிவேதனுடைய குரலை தலித் அறிவுலகம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    பாரதி நிவேதன் தொடர்பு கொள்ள : 98428 51772

    – யாழன் ஆதி

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleஎழுத்தை ஆயுதமாக்கும் குரலிசைப் போராளி
    Next Article அய்யா எல்.சி. குருசாமி
    யாழன் ஆதி

    யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். இசை உதிர் காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

    Related Posts

    மாற்றுப்பாதை – கரன்கார்க்கி

    June 25, 2020

    மாற்றுப்பாதை – மதிவண்ணன்

    June 28, 2019

    மாற்றுப்பாதை – தமிழ் முதல்வன்

    June 27, 2019
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • சாதி ஒழிப்பு (Annihilation of Caste)
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    Random Posts

    பரமக்குடி படுகொலை – குருதி தோய்ந்த வரலாறு

    September 15, 2011

    சமத்துவத்தின் சட்டத்தை நிலை நிறுத்தவே போராடுகிறோம்

    April 11, 2015

    தீமைகள் அழிந்த நள்.

    August 26, 2017

    அதிகாரம், வர்க்கம், அம்பேத்கர்

    May 12, 2020
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    சாதி ஒழிப்பு (Annihilation of Caste)

    June 28, 2026

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.