Author: ஸ்டாலின் ராஜாங்கம்

ஆய்வாளர், எழுத்தாளர்.கள ஆய்வுகள், தலித் வரலாறு, தமிழ் பௌத்தம், உள்ளிட்ட வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டுவருபவர். அயோத்திதாசர் வாழும் பௌத்தம், ஆணவக் கொலைகளின் காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பாசாகேப் அம்பேத்கர் அரசியல் கட்சி என்ற முறையில் முதலில் தோற்றுவித்தது ‘சுதந்திரா தொழிலாளர் கட்சி’யைத் (1936) தான். ஆனால் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தியதென்றால் அவர் அடுத்ததாக 1942ஆம் ஆண்டு தோற்றுவித்த அகில இந்திய பட்டியலினக் கூட்டமைப்பு (AISCF) தான். இந்த அமைப்பை பெடரேஷன் என்றுதான் குறிப்பிடுவார்கள். அம்பேத்கர் ஆரம்பிக்கவிருந்த இந்தியக் குடியரசுக் கட்சியை அவரின் மரணத்திற்குப் பிறகு அவர் வழிவந்தோர் உருவாக்கியபோது AISCFஇல் செயற்பட்டவர்கள் அப்படியே இக்கட்சியிலும் தொடர்ந்தார்கள். இவ்விரண்டு கட்சிகளிலும் தமிழகத்திலிருந்து பலர் செயற்பட்டார்கள். அம்பேத்கர், கெய்க்வாட், கோபர்கடே, என். சிவராஜ் போன்ற மெத்தப் படித்தவர்கள் இந்தக் கட்சிகளை நடத்தியிருந்தாலும் ஓரளவு படித்தவர் தொடங்கி, படிக்காதவர்வரையிலான எளிய மக்களே இக்கட்சிகளில் அதிகம் இணைந்தார்கள். கிராமப் புறங்களிலும் இக்கட்சிகளுக்கு வரவேற்பு இருந்தது. இந்திய அளவிலான நவீன அரசியல் சட்ட வாய்ப்புகள்பற்றி இக்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டாலும் கள அளவில் உள்ளூர்ப் பிரச்சினைகளே அதிகம் கவனப்படுத்தப்பட்டன. குறிப்பாகத் தலித்துகள்மீது பண்பாட்டுரீதியாகச் சுமத்தப்பட்ட இழிதொழில் மறுப்புப் போராட்டங்கள்…

Read More

10 நாட்களுக்கும் மேலாக நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தை வழமையான அரசுகள் எவ்வாறு ‘முடிவு’க்கு கொண்டுவருமோ அத்தகைய தந்திரத்தோடு முடிவு கொண்டு வந்திருக்கிறது திமுக அரசு.போராட்டத்தால் வந்த அவப்பெயரை சரி செய்வதற்காக இன்னுமின்னும் தந்திரங்களோடு பிரதான கோரிக்கை எதுவோ அவற்றை விடுத்து திராவிட கட்சிகளுக்கேயுரிய சலுகை அரசியலை முன்னெடுத்து அதனை விளம்பரப்படுத்தி வருகிறது.(இந்த அளவிலான சலுகைகள் கூட அப்பணியாளர்கள் இத்தனை நாள் போராடியதால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது) அப்பணியாளர்களுடன் முன்பு முதல்வர் டீ குடித்தார் என்று மேயர் சொன்னதில் தொடங்கி இன்றைக்கு சோறு போடுவது,நன்றி சொல்ல வைப்பது, ஊர்வலம் போல நடத்தி வருவது போன்ற படங்கள் வெளியிடப்படுகின்றன. அம்மக்கள் காட்சிபடுத்தப்படும் விதம்,குறிப்பாக அவர்கள் பெறுபவர்களாக – நிற்பவர்களாக – வியப்பவர்களாக – கை கூப்புபவர்களாக காட்டப்படும் படங்கள்,அதன் மூலம் அரசு தரப்பு சொல்லவரும் செய்தி ஆகியவை அருவருப்பாக இருக்கின்றன.இவற்றிலிருக்கும் பிழை இவர்களுக்கு புரியவில்லை.இன்னும் எத்தனை காலத்திற்கு இதையே செய்வார்கள் என்றும் தெரியவில்லை.…

Read More

– ஸ்டாலின் ராஜாங்கம் தலித் வரலாற்றியலில் சான்றுகள் திரட்டல், அதனை உரிய வரிசையில் இணைத்தல் என்பனவற்றைவிட ‘வாசிப்பு’ என்ற அம்சம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே ஒரு அர்த்தத்தில் வாசிக்கப்பட்ட ஒன்றைத் தலைகீழாக்கம் – கட்டுடைப்பு – மறுவாசிப்பு என்னும் பார்வைகளினூடாக வேறொரு வாசிப்புக்கு உட்படுத்துதலாக இவற்றைக் கூறலாம். இந்தியர்கள் வரலாற்றைப் பதிவுசெய்துவைக்கும் பழக்கம் இல்லாதவர்களெனப் பெரும் வரலாற்றாசிரியர்கள்முதல் உள்ளூர் மேடைப் பேச்சாளர்கள்வரை கூறக் கேட்டிருக்கிறோம். இந்தியர்கள் என்ற இடத்தில் தமிழர்கள், தலித்துகள் போன்றோரையும் பொருத்தி இக்கூற்றைப் பேசலாம். இக்கூற்று காலனியத்தின் வருகைக்குப் பின்புதான் தோன்றியிருக்க  முடியும். ‘வரலாறு’பற்றிய நம் இன்றைய புரிதல் காலனியம் தந்த சட்டகத்தால் உருவானது. அது ‘எழுத்து’ என்னும் புலப்படும் சான்றுகளையே ‘ஆதாரங்களாக’க் கருதி வரலாற்றை எழுத முன்வந்தது. அதன்படி அது இந்திய வரலாற்றை எழுத விரும்பியபோது எழுத்துரீதியான ஆதாரங்களையே எதிர்பார்த்தது. இந்தப் பார்வையே வெள்ளையர்களை ஆதரித்த, எதிர்த்த எல்லா உள்ளூர்க்காரர்களையும் பாதித்தது. அண்மைக் கண்டுபிடிப்புகள் வழியாகப்…

Read More

ராஜ் கெளதமன் (1950 – 2024) தலித் விமர்சகராக அறியப்பட்டிருக்கிறார். அதனாலேயே அவர் எழுதிய எல்லாவற்றையும் தலித் பற்றியதாகக் கருதும் நிலை இருக்கிறது. அது முழு உண்மையல்ல. அவர் தமிழிலக்கியத்தின் பெரும்பான்மையான பகுதிகளை விமர்சனக் கண்ணோட்டத்துடனும், மறுபொருள் கோடல் நோக்கிலிருந்தும் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆனால், அவற்றை தலித்திய நோக்கிலிருந்து வாசித்துப் பார்த்திருக்கிறார். அவர் தலித் விமர்சகர் அல்லது விளிம்புநிலை நோக்கிலான திறனாய்வாளர் என்று கூறுவது இந்தப் பொருளிலேயேயாகும். நவீன மனிதனே தலித் என்றார் அவர். அந்த வகையில் தலித்​தியம் என்பதை ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் கருத்​தியல் மற்றும் அறிவுக் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்​சியான சொல்லாக்கம் என்று வரையறுத்துக் கொண்டிருந்​தார். அவர் எழுதி​ய​வற்றுள் தலித் பண்பாடு பற்றிய நூல்கள், சங்க இலக்கிய ஆய்வுகள் தவிர்த்து நவீன இலக்கியம் சார்ந்து எழுதிய ஆய்வுகள் தனிவகை​யின​தாகும். நவீனத் தமிழ் முகங்கள்: அ.மாதவை​யாவின் தமிழ் நாவல்கள் – ஓர் ஆழ்நிலைப் பார்வை, கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்​போக-சி.இராமலிங்கம் (1823 – 1874),…

Read More

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் சகோதரர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சிகளில் வெகுசில தவிர பெரும்பான்மையும் ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளாகவே இருந்தன. அதேபோல சமூகவலைதள அரசியல் சமூகத்திடையேயும் கனத்த மௌனம் நிலவியது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்தாவது நாளில் ஆம்ஸ்ட்ராங் வீடு தேடிவந்து துக்கம் விசாரித்து விட்டு சென்றார். பின்னர் மற்ற மைய நீரோட்ட கட்சிகள் வந்தன. இந்த வருகைக்குப் பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகள் இருக்கலாம் என்றாலும், சமூக வலைதள அழுத்தங்களை இதற்கான முக்கிய காரணமென்று பலரும் குறிப்பிடுகின்றனர். அது உண்மை தான். முதலில் என்ன நடந்தது? அவர் கொல்லப்பட்ட செய்தி பரவியதும் ஒரு பக்கம் காவல்துறையும், மறுபக்கம் அரசின் கட்சியான திமுக இணைய அனுதாபிகளும் வேகவேகமாக அவர் ரவுடி,கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்கிற கதையாடல்களை பரப்பினர் (நேரடியாகவும், அந்த தொனியிலும்). அவ்வாறு சொல்வதன் மூலம் அவர் கொல்லப்பட வேண்டியவர் என்கிற தர்க்கம் கிடைத்தது. இதன்…

Read More

அம்பேத்கர் எனும் ஆசான் என்னும் தலைப்பில் 14.04.2019 அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்வின் காணொளி

Read More

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை கரடுதட்டிப்போன சொன்னதையே சொல்லும் ஆய்வுகள்போலில்லாமல், நிலவும் நம்பிக்கைகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்வதாகவும் புனைவுகளுக்கான சுவாரஸ்யத்தோடும் அமைந்திருக்கின்றன. அத்தகையவற்றில் ஐந்து நூல்கள் இங்கு பேசப்படுகின்றன. இந்த நூல்களின் உள்ளடக்கம் இன்றைய காலத்தவை அல்ல. ஆனால், இன்றைய காலத்தில் நிலவும் நம்பிக்கைகள் உருப்பெற்ற தருணங்களை ஆராய்கின்றன. ஆவணம், கல்வெட்டு, வழக்காறு, கோட்பாடு சார்ந்த சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் மறுபடி எழுதிப்பார்க்கவும் இவை உதவக்கூடும். ‘பூலோக வியாஸன்’ தலித் இதழ்த் தொகுப்பு  தமிழ் வரலாற்றில் தலித் இதழியலுக்கு என்று நீண்ட தொடர்ச்சி இருக்கிறது. தமிழ்ச் சமூக வரலாற்றை உரையாடியபடியே கட்டியெழுப்பியதில் அந்த இதழ்களுக்கு என்று குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதை அண்மை ஆய்வுகள் புலப்படுத்தி வருகின்றன. எனினும், அவற்றுள் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ (1907-1940) ஏடு தவிர, மற்ற ஏடுகள் குறிப்புகளாகவும் முழுமையற்றுமே கிடைத்துள்ளன. இந்நிலையில்தான் ‘பூலோகவியாஸன்’ ஓராண்டு இதழ்களின் தொகுப்பை ஜெ.பாலசுப்பிரமணியம் தொகுத்து வெளிக்…

Read More

குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய எழுதப்பட்டு வருகின்றன. தி இந்துவின் செய்தியாக்க முறை கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அதில் நான் முழுக்க உடன் படுகிறேன். ஆனால் இதில் தி இந்து ஏட்டை மட்டும் விமர்சிப்பது ஒரு பகுதி உண்மை என்றே சொல்ல வேண்டும்.செய்தி எழுதுபவர், எடிட்டர், சப் எடிட்டர் வரை இதில் பொறுப்பிருக்கிறது எனினும் அதைப் பற்றி யாரும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை.குறிப்பாக செய்தி…

Read More

தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர். அன்றைய இந்திய அரசியலில் இருந்த தலைவர்களில் அதிகம் படித்தவர். அம்பேத்கருக்கு நவீன ஆய்வு முறையில் புலமை அதிகம். எதை எழுதினாலும் தேர்ந்த ஆய்வுப் பண்போடு இருக்கும். சாதி பற்றி மட்டுமல்ல, பல்வேறு துறைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முதல் ஆய்வு நூலின் நூற்றாண்டும் இதுவே. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், அரசியல் ஆகியவற்றைத் துணைப் பாடங்களாகவும் பயின்றார் அம்பேத்கர். மானுடவியல் பாடத்தின் ஓராண்டு முடிவில் 09.05.1916-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை அளித்தார். அதுவே ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் நூல். அம்பேத்கர் எழுதிய முதல் நூல். இந்த ஆண்டு அதன் நூற்றாண்டு. அந்த நூல் அவரது பிற்காலச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்வதற்கான வேர். சாதிகளை ஆயும் நூல் சாதி ஒழிப்பு…

Read More

உயர்கல்வி வளாகங்களில் தற்கொலைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட வெம்மை அடங்குவதற்குள்,இப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறந்திருக்கிறார். முன்பு, இளநிலை ஆய்வுப்படிப்பை ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரோஹித் வெமுலாவின் பக்கத்து அறை மாணவராக இருந்த முத்துக்கிருஷ்ணன், இப்போது வெமுலாவின் முடிவையே எட்டியிருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தமிழக மாணவர் என்பது நம்மை இதைச் சார்ந்த விவாதத்தோடு மேலும் நெருக்கமாக்குகிறது. பிறந்த ஊரிலிருந்து வெளியேறி, வெளியில் வந்து படிப்பதையே பெரும் வரமாக பார்க்கத்தக்க குடும்பத்தில் பிறந்த முதல்தலைமுறை படிப்பாளியான முத்துக்கிருஷ்ணன், நாட்டின் தலைநகரிலிருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்து படித்ததை அவர் குடும்பம் எவ்வாறு பெருமையாக எடுத்துக்கொண்டிருக்கும் என்பதை சொற்களால் விவரிப்பது கடினம். ஆனால்,அக்கனவுகள் நொறுங்கிப்போகும் விதத்தில் அவன் பிணமாக திரும்பி வருவான் என்பதை அக்குடும்பம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. கூலி வேலைக்குச் செல்லும் எளிய தலித்…

Read More