Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ஏ.பி.வள்ளிநாயகம்
ஏ. பி. வள்ளிநாயகம் (1953 ஆகத்து 19 – 2007 மே 19)விளிம்புநிலை வரலாற்று வரைவாளர்; சமநீதி எழுத்தாளர்; இதழாளர்; அரசியல் ஆசிரியர்; சமூகச் சீர்திருத்தக்காரர். ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பவுத்தமும், பெண்ணியமும், சமூக நீதி விழுமியங்களும் இவரது எழுத்தின் அடிநாதமாக அமைந்தது. தன்னலமற்ற, கொள்கை சமரசமற்ற, சுயமரியாதை வீரராகவும் சமூக மனிதராகவும் வாழ்ந்தவர். தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து நாங்கள் இந்துக்கள் அல்லர்'என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தியவனார். கடந்த இருபது வருடங்களாக சமூக மாற்றத்திற்கான அவாவுடன் பவுத்தம், அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகிய கொள்கைகளைத் தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு, களப்பணியாற்றியதோடு, 25க்கும் மேலான நூல்களை தலித் இயக்கத்திற்கான கொள்கைப் படைக்கலன்களாக கொண்டு எழுதியிருக்கிறார். இவர் 2007-ல் காலமானார்.
பார்ப்பனியச் சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள், மனிதகுல நகர்வில் அவர்கள் முன்னேறி நின்ற சமூக உச்சத்திலிருந்து பார்ப்பனர்களாலும் – பார்ப்பனியர்களாலும் கீழே தள்ளப்பட்டு அழுத்தப்பட்ட வர்கள் என்கிற வரலாற்று உண்மையை அறிந்தவர்கள். தலித் மக்களின் விடுதலை என்பது, மீண்டும் உச்ச இலக்கை நோக்கிய மேல் நகர்வாகத்தான் இருக்க முடியும் என்ற வரலாற்றுப் பொறுப்பையும் சுமந்தவர்கள். மதுரைப் பிள்ளையின் முன்னோர்கள், தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் திரும்பத் திரும்ப தவறவிட்ட தருணங்களைத்திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டவர்களாய், சாதிப்புதர்செழித்த சமூகக் கானலில் எதிர்ப்புயலாய் எழுந்து நின்று சாகசமாய், சந்தர்ப்பத்தையும் சூழலையும் தன் வசப்படுத்தக் கற்றவர்களாய் மாற்றுத் தொழில்களில் நிலைக் கந்தக்கவர்கள் ஆனார்கள். சமூகத்தில் பொருளியல் நோக்கில் முதலிடம் தேடிய பயணத்தில் முத்திரை பதித்த அவர்கள், திரைக்கடலோடி திரவியம் தேடினார்கள். புலம் பெயர்ந்து அடைக்கலம் ஆனதில், புகலிடமான பர்மாவின் தலைநகரமான ரங்கூன் அவர்களை செல்வச் சீமான்களாக உயர்த்திக் கொண்டது. மதுரைப்பிள்ளையும் தன் முன்னோர்களைப் போலவே, மரபான பார்ப்பனியச் சமூக…
மனித இனத்தைச் சாதியால் பிரித்த ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் எதிராக நடைபெற்ற சமூக நீதிக்கான போர்களுக்கு முன்னோடிதான் – தென்திசை முளைத்த செஞ்சுடர் உ.ஆ.பெருமாள் பீட்டர் அவர்கள். ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகில் உள்ள பேரையூரில் சமூகப் பாட்டாளி வர்க்கத்தில் வேளாண்குடி மரபினரான ஆண்டித்தண்டல் – சிகப்பி தம்பதியினருக்கு, 7.1.1885 அன்று பிறந்தார் பெருமாள். சாதிய சமூகத்திற்கு மனசாட்சியும் இல்லை; மனுசத்தன்மையும் இல்லை என்பதை பேரையூரும் நிரூபித்தது. வானத்திலோ ஒரே இருட்டு. மாதமோ மார்கழி. நடுநிசி நேரத்தில் ஓர் ஓலைக் குடிசைக்குள் குளிரும் – காய்ச்சலும் போட்டிப் போட்டுக்கொண்டு, அந்த கர்ப்பிணிப் பெண்ணை உயிருக்குப் போராட வைத்தது. உறவினர்கள் அலறியடித்து ஓடிச்சென்று, பேரையூருக்கும் அந்தப் பகுதிக்கும் வாய்த்த ஒரே மருத்துவரான ஆதிக்க சாதியைச் சேர்ந்த பண்டிதம் பிள்ளையிடம் மருத்துவம் பார்க்க வேண்டி கதறி அழுகின்றனர். ஆனால், அந்த சாதி இந்து மிருகம் கீழ் சாதி வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்க…
தங்கம் கோலார் தங்கவயலில் தனது இருப்பை உணர்த்திய காலத்திலிருந்தே தொல் தமிழர்களும், அய்ரோப்பிய நிபுணர்களும் நீங்க முடியாத பிணைப்புகளோடு இருந்தனர். தொல் தமிழர்களின் உழைப்பு மூலதனம்தான் கோலார் தங்கவயலில் தங்கம் எடுக்க, ஒரே உந்து சக்தியாக இருந்தது. தங்க வயலின் விளைச்சல் குறித்து அவர்களுக்குதான் தப்ப முடியாத பெரிய பெரிய உத்தேசங்கள் இருந்தன. தங்கத்தைத் தேடுவதில், தேடிக் கண்டதில், தேவையற்ற சேர்க்கைகளைக் கழித்து தனித்ததொரு தங்கமாக வார்த்தெடுப்பதில், வேட்கையும் வைராக்கியம் நுணுக்கம் அவர்களிடமே குடி கொண்டிருந்தன. இதில் குறிப்பிட்டுச் சொல்லித் தீரவேண்டிய மக்கள், வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து, தங்களின் மனித ஆற்றலுக்கு உட்பட்ட வரையில் பூமியின் மய்யத்தை நோக்கிக் குடைந்து, கோலார் தங்க வயலில் உலகத்திலேயே மிக ஆழமான தூரத்தில் இறங்கி, தங்கத்தை வெட்டியெடுத்து அதை வெற்றிகரமான தொழிலாக்கினர். தொல் தமிழர்களோடு பிணைந்து சுரங்கத் தொழில் நடத்திப் புகழடைந்தவர்கள், இங்கிலாந்து நாட்டவரான ‘ஜான் டெய்லர் அண்ட் சன்’ நிறுவனத்தினர்.…
பார்ப்பனியத்தின் வெற்றிக்குப் பிறகு, அக்கருத்தாடல்களே தமிழைச் சுற்றிச் சுற்றி வளைத்துப் போட்டன. அதனைக் கடந்த உலகளாவிய பரந்த பார்வைக்கும், சமத்துவ வெளிப்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மொழியின் தத்துவ அடிப்படையான, அபூர்வமானதும் மேலானதுமான பவுத்த சாராம்சங்கள், சமஸ்கிருத உள்வாங்கலால் திரிபுகளாகி துருத்திக் கொண்டு நின்றது. தற்குடிகளின் பவுத்த அனுபவம், மானுடத்தின் வலிதீர்க்கும் செயலாடல்களும் பார்ப்பனியம் கவ்விய தமிழுக்கு அந்நியமானது. தமிழின் முப்பரிமாணங்களான இயல், இசை, நாடகம், பார்ப்பனியச் சமூக அமைப்பின் இயக்கப் பரிசோதனைக்குள் சிக்கியது.பார்ப்பனியத்தின் ஆக்கிரமிப்புக்கு முந்தைய தமிழின் மொழி முதல் வாதங்களான அறவியல், அறிவியல் சிதைக்கப்பட்டன. வெகுமக்களுக்கும் மொழிக்குமான உறவு, பார்ப்பனியத்தினுள் கொண்டுவிடும் ஒருவழிப்பாதை ஆனது. அதனைக் கடந்தோ, மறுத்துவிட்டோ தமிழின் இயல்பான பாதையில் செல்ல முயன்றவர்கள் ‘சமூக விலக்கம்’ செய்யப்பட்ட தற்குடிகளாக இருந்தனர். தமிழியல் பார்ப்பனியமாக நிர்மாணிக்கப்பட்டபோது, தமிழின் மூல வார்ப்புகள் மூளியாகி விட்டன. வேதாந்தத்தில் பின்னப்பட்ட வந்தேறிகளின், வந்தேறி அடிவருடிகளின் எதிர்மறைச் சரக்காகி, சாதிப்படிநிலையில் தங்களை உயர்த்திக் கொண்டோர்…
மானுட உலகின் தீரமிக்கதும் முற்றிலும் இயல்பான மனித வேட்கை வாய்ந்ததுமான பவுத்தத்தைப் புதுப்பித்து, கோலார் தங்கவயல் வரலாற்றுப் பெருமை அடைந்தது. இந்நிலையில், ஒரு சில சமூக ஆளுமைகளுக்கு பவுத்த அறிதலில் உள்ள ஓர் இடைவெளி – தன் ரசனையை அளவாகக் கொண்டு மதிப்பிடும் இந்து ஆன்மீகத்திலேயே முடிந்தது. நம் மாபெரும் பவுத்த மரபுடன் இணைவதற்கு, முழுத்தகுதி கொண்ட இவர்கள், தங்களின் ஆன்மீகத் தினவிற்கு கரைகட்டும் முயற்சியில், இவர்களுக்கேயுரிய திசை மறந்து, தெறித்து வைணவர்கள் ஆனார்கள். தங்களுக்குள் உறைந்து கிடக்க வேண்டிய தொல்குடி மரபின் எல்லைவரை தொட வேண்டிய சாக்கியத் தொன்மத்தின் அபூர்வ மனக் கிளர்ச்சி, இவர்களுக்கு ஏற்படவில்லை. மானுட வாழ்வின் பொலிவை அள்ளத்தக்க தங்கள் மூலாம்பர பவுத்தத்தை மறந்து, தங்கள் சாராம்சமான எரிபொருள் தீர்ந்த, அணைந்த மனிதர்களாய் ஆனதில், இவர்களின் ஆன்மீகத் தொடு வானத்தின் எல்லை – பவுத்தத்தை வீழ்த்திய வைணவமானது. தற்குடிகளின் சாக்கிய இனக்குழு வரலாற்றையும், சாக்கியம் – பவுத்தம்…