Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » கல்வி உதவித்தொகை குறைப்பு: 1½ லட்சம் தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதில் சிக்கல்
    News

    கல்வி உதவித்தொகை குறைப்பு: 1½ லட்சம் தலித் மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்வதில் சிக்கல்

    Sridhar KannanBy Sridhar KannanDecember 18, 2017No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை தற்போது குறைத்து உள்ளதால் 1 லட்சத்து 40 ஆயிரம் தலித் கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர்.

    சென்னை:

    தலித் மற்றும் பழங்குடி மக்கள் பள்ளி படிப்பு முடிந்ததும் பொருளாதார பிரச்சினை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டத்தை கொண்டு வந்தார்.

    இதன்படி மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் உதவித்தொகை உயர்த்தப்பட்டது.

    தற்போது இந்த உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த மருத்துவ கல்லூரி உதவித் தொகை ரூ.4 லட்சமாகவும், ரூ.85 ஆயிரமாக இருந்த என்ஜினீயரிங் உதவித்தொகை ரூ.70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

    உதவித்தொகை குறைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் செமஸ்டர் தேர்வு நடைபெற இருக்கிறது. அதற்கான ஹால்டிக்கெட் வாங்க வேண்டும் என்றால் கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும்.

    ஆனால் அரசு கல்வி உதவித் தொகையை குறைத்துவிட்டால் பல மாணவர்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இவ்வாறு 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

    இதனால் அவர்கள் இந்த தேர்வு எழுத முடியுமா? என்ற கலக்கத்தில் உள்ளனர். கூடுதல் கல்வி உதவித் தொகை கிடைக்காவிட்டால் அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும்.

    இதுசம்மந்தமாக மாணவர்கள் தரப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் ஆகியவற்றில் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபடி உள்ளனர்.

    இதற்கிடையே முன்னேறிய இனங்களை சேர்ந்த பலர் தாழ்த்தப்பட்டவர் பிரிவின் சான்றிதழை போலியாக பெற்று வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் பலர் கல்லூரிகளிலும் இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சீட்டுகளை பெற்று படித்து வருகிறார்கள்.

    இவ்வாறு 22 ஆயிரம் பேர் தமிழ்நாடு முழுவதும் போலி ஜாதி சான்றிதழ்களை பெற்று வேலை வாய்ப்பு மற்றும் படிப்பு இடஒதுக்கீடுகளை பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

    கோவையில் ஒரே நபர் பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான சான்றிதழ் ஆகிய இரண்டையும் ஒரே தாசில்தாரிடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுக்க மோசடிகள் நடந்துள்ளன.

    நன்றி : மாலைமலர், டிசம்பர் 18, 2017

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleகௌசல்யா சொன்னது போல நீங்களெல்லாம் மனநோயாளிகள்தான்!
    Next Article வெண்மணி என்னும் அரசியல் தொன்மம்! – ஸ்டாலின் ராஜாங்கம்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கர் – காந்தி இடையிலான சாதி குறித்த விவாதத்தைக் காண விருப்பம்!’ – ஜான்வி கபூர்

    June 2, 2024

    சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?

    April 27, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    பண்டிதமணி க. அப்பாதுரையார்

    February 10, 2014

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் Dec- 6

    December 6, 2023

    அம்பேத்கர்

    December 6, 2017

    இந்து சமூகத்தை நான் ஏன் வெறுக்கிறேன்?

    June 26, 2020
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d