ஊரிலிருந்து
செத்த மாட்டைத் தூக்கி வந்து
தோலுரித்து விற்ற காசில் சாராயம் வாங்கினோம்
பங்கு போட்டு பிரித்த கறியில்
தனதை வறுத்துக் கொண்டுவந்தான்
ஸ்ரீநிவாசன்
தென்னந்தோப்பில்
மட்டைகளைப் பரப்பி
கூடி அமர்ந்து குடித்தோம்
எலும்பிலிருந்து கறியை
கடித்து இழுத்தோம்
(கெழமாடு)
ஞானசம்பந்தன் கேட்டான்
மாடு சைவமா வைணவமா
நான் சொன்னேன்: இது
பாய் வீட்டு மாடு
-ரமேஷ் பிரேதன்
‘மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ தொகுப்பிலிருந்து