Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»செய்திகள்»சாதி கொடூரம்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியரா இப்படி? தலித் மாணவரின் தாய் முதலமைச்சருக்கு கண்ணீர் கடிதம்
    செய்திகள்

    சாதி கொடூரம்.. அரசு பள்ளி தலைமை ஆசிரியரா இப்படி? தலித் மாணவரின் தாய் முதலமைச்சருக்கு கண்ணீர் கடிதம்

    Sridhar KannanBy Sridhar KannanAugust 6, 2023No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விழுப்புரம்: பட்டியலின சமுதாய மாணவர்களிடம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் முதலமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

    எனது கடைசி மகன் ஜான் திலீப் டி சில்வா கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி படித்து வருகிறார். அந்த தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியுற்றுள்ளார். எனவே நான் உடனடி தேர்வுக்கான கட்டணத்தை ரூ.305/-யை பள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தினேன். சில நாட்கள் சென்ற பின் தேர்வு நுழைவுச்சீட்டு அனைவருக்கும் வந்துள்ளது எனது மகனுக்கு வரவில்லை.

    இதனை அறிந்த எனது மகன் வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். வகுப்பு ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுமாறு கூறியுள்ளார். தலைமை ஆசிரியரை அணுகி கேட்டபோது அவர் அலட்சியமாக அடுத்த ஆண்டு எழுதிக்கொள்ளலாம் என பதிலளித்துள்ளார் . மேலும் இந்த ஆண்டு பணம் கட்டி அடுத்த ஆண்டு எழுத சொன்னால் என்ன அர்த்தம் என கேட்டபோது கணினி ஆசிரியரை கேளுங்கள் அவர்தான் ஆன்லைனில் பணம் கட்டினார் என்று கூறி தட்டி கழித்தார். ஆன்லைனில் பதிவு செய்யும் கணினி ஆசிரியர் திரு.குரு அவர்களிடம் எனது மகன் தனது தேர்வு கட்டண ரசீதை கேட்டதற்கு அப்படி எதும் இல்லை என்று கூறியுள்ளார். சரி பணத்தையாவது கொடுங்கள் என கேட்ட போது அடுத்த வருடத்திற்கான கட்டணமாக எடுதுக்கொண்டோம் என மிரட்டியுள்ளார்கள். மேலும் தலைமை ஆசிரியரும் கணினி ஆசிரியரும் உடனடி தேர்வுக்கு பணம் கட்டவில்லை என்பதை அறிந்தேன்.

    எனது மகனின் பெயரை பதிவு செய்யாதது மட்டுமில்லாமல் அதனைப் பற்றிய தகவலை அவரின் பெற்றோராகிய எங்களுக்கு தெரிவிக்கவில்லை. எனது மகனிடம் இதை யாரிடமும் சொல்லி பெரிதாக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் திரு.ஜெயசீலன் மற்றும் கணினி ஆசிரியர் திரு.குரு அவர்கள் எனது மகனை அச்சுறுத்தியுள்ளனர், இதனால் மனமடைந்த என் மகன் பள்ளிக்கு செல்லாமல் பயந்து வீட்டிலேயே உடல் நிலையும் மனநிலையும், பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் எனது பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வினை மகன் எதிர்கொள்ள பயந்து பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்றும் அங்கு சென்றால் மாணவர்கள் அவமானப்டுதுவர்கள் என்று வீட்டிலேயே முடங்கி உள்ளார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி 11-ம் வகுப்புக்கான உடனடி தேர்வு முடிவுகள் வெளியானபோது தேர்வு எழுதிய மற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்பதை அறிந்து எனது மகன் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டனர்.

     

     

     

    எனக்கு Hall ticket கிடைத்திருந்தால் நானும் தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளான். இதனால் என் மகனின் வகுப்பு ஆசிரியர் அவனை சகா மாணவர்கள் முன் தாக்கி வகுப்பறையைவிட்டு வெளியே போ, உன் தாயாரை அழைத்துவா வா என்று கூறியுள்ளார். நான் அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் எவ்வளவோ கெஞ்சியும், கை எடுத்து கும்பிட்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.

    அதற்கு அந்த ஆசிரியர் உன் மகன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன, எனக்கு சம்பளம் என் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று அலட்சியமாக கூறி TC-யை வாங்கிக்கொண்டு போ என்றார். இதனால் நான் என் மகன் தேர்வு எழுதவும் முடியல பள்ளிக்கு போகவும் முடியல என்று வருந்தி உயிருடன் வாழ்வதைவிட சாவதேமேல் என்று வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இப்படி எனது மகனை மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி எதிர்காலத்தையே பாழாக்கி தற்கொலைக்கு தூண்டிய தலைமை ஆசிரியர் திரு ஜெயசீலன் மற்றும் கணினி ஆசிரியர் திரு.குரு அவர்கள் கல்வியில்லாமல் இழந்துபோன என் மகனின் வாழ்க்கையை எப்படி சரி செய்வார்கள் என்பது தெரியவில்லை. மேலும் நாங்கள் ஏழை என்பதாலும், ஆதிதிராவிட கிருத்தவர் என்பதாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதினை அறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் கணினி ஆசிரியர் இருவரும் திட்டமிட்டு மகனின் எதிர்காலத்தை சீற்குலைதுள்ளனர். இந்த நிலைமையில் அவர்களது முகனோ மகளோ இருந்திருந்தால் இப்படி அலட்சியமாக இருப்பார்களா ? என் தெரியவில்லை.

    ஆகவே எங்கள் பிரச்சினையை உங்களிடம் கண்ணீரோடு கூறுவதோடு எனது மகனின் கல்வியை தொடர உதவ வேண்டுகிறேன். மேலும் எனது மகனுடன் படித்தவர்களிடம் விசாரித்த போது இதனைப் போன்று எத்தனை மாணவர்கள் உள்ளார் என்பதை தெரியவில்லை சாதி ரீதியாகவும் வேற்றுமை காட்டியும் எங்களை வஞ்சித்து வருகிறார்கள் என ஒரு சில மாணவர்கள் கூறுவதை அறிந்தேன். மேலும் தங்களது நல்லாட்சியில் தங்களுக்கு அவ பெயர் ஏற்படுத்தவே தலித் இனத்தவர்களாகிய எங்களுக்கு மறைமுகமாக வன்கொடுமை செயலில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு தங்களால் மட்டுமே தகுந்த நீதியும், தீர்வும் காண முடியும் என்பதாலும், தகுந்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

    Source : One India

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleசமூக விடுதலை நோக்கிய பயணம் -‘எக்ஸ்ரே’ மாணிக்கம்
    Next Article சனாதன தர்மமா? அரசியல் சட்டமா?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    அம்பேத்கரின் கனவு கிராமம்!வியந்து பார்த்த மத்திய அரசு!தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு கிராமமா?

    January 23, 2026

    ஆணவ கொலைக்கு எதிராக கர்நாடகாவில் தனிச் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம்!

    January 23, 2026

    Comments are closed.

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.