Author: Sasikumar

அம்பேத்கரியர், கற்பி அறக்கட்டளையின் நிறுவனர். அம்பேத்கர்.இன் இணையதளத்தின் உறுவாக்கத்திற்கு காரணமானவர்களின் ஒருவர்.

சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 16). இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலையில் வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் வைத்தீஸ்வரியை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரத்தூர் காவல்நிலையத்தில் வைத்தீஸ்வரியின் பெற்றோர் மகளை காணவில்லை எனக் கூறி புகார் செய்தனர். இதனிடையே இன்று அதிகாலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியே வயலில் சடமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய ஒரத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தீஸ்வரி வேலை முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் கும்பல் ஒன்று அவரை…

Read More

சூத்திரர்கள் ஆரியரல்லாத பூர்வகுடி இனத்தவராக இல்லையெனில் அவர்கள் யார்? இக்கேள்வியை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டும். நான் முன்வைக்கப் போகும் கொள்கை நிலையை பின்வரும் மூன்று கருத்துக்கள் தெளிவுபடுத்தக்கூடும்: 1) சூத்திரர்களும் ஆரியர்களே. 2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர். சூத்திரர்களின் தோற்றுவாய் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு புரட்சிகரமான ஆய்வுக்கட்டுரையாக இல்லாவிடினும் திகைப்படையச் செய்யும் ஆய்வுக் கட்டுரையாக இருக்கும். இக்கருத்துக்கு ஆதரவாகப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும்கூட பலர் இதை ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இது திகைப்பூட்டக் கூடியதாகும். எனது கடமை சான்றுகளை எடுத்துவைப்பதேயாகும். அதன்மதிப்பை சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுகிறேன். இந்த ஆய்வுக்கட்டுரை ஆதாரமாகக் கொண்டுள்ள முக்கியச் சான்று மகாபாரதத்தின் இயல் 60இல் செய்யுள்வரிகள் 38-40 இல் வருகிறது. அது…

Read More

மதம், தத்துவம், சட்ட முறைகள் இலக்கியம், கலை, இசை போன்ற ஆன்மீகச் சிந்தனை, மதிப்புகள் ஒன்றே பண்பாடு என்று சிலர் கருதுகின்றனர். உற்பத்தி சாதன முறைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களை காலவரிசைக்கிரமமாக எடுத்துரைப்பதே வரலாறு என்று டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்தியாவிலேயே பிறந்து அயல் நாடுகள் எல்லாம் பரவி மிக செல்வாக்குடன் விளங்கியது புத்தசமயம். அசோகமன்னன் காலத்திலிருந்து அரசாங்க சமயமாகவே ஆக்கப்பட்ட புத்தம், அரசியல் சமுதாய பொருளாதார அமைப்புகளை ஆக்கி இந்தியாவின் கலை, பண்பாடு, கலாச்சாரம், ஓவியம், சிற்பம் என்பனவற்றில் இந்நாட்டை ஓங்க வைக்க உதவியது. வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலிருந்து கோசலை நாட்டிற்கு உட்பட்ட பகுதி கபிலவஸ்து அங்கு உள்ள லும்பினி நகரத்தில் ஆட்சி புரிந்து வந்த சுத்தோதனர் மாயாதேவிக்கு மகனாகப் பிறந்தார் சித்தாத்தர். கி.மு.563.இல் பிறந்த செய்திகள் ஜாதக்கதை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தோற்றுவித்த சமயமே புத்த சமயம் ஆகும். பழங்காலம் முதல் இக்காலம் வரை…

Read More

கிறித்துவ மதம் அய்ரோப்பாவில் நுழைந்தபோது ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் துன்பத்தில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு “கிச்சடி’ உணவு வழங்கப்பட்டது. கிறித்துவை யார் பின்பற்றினார்கள்? ஏழை களும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் பின்பற்றினார்கள். ஏழைகளும் அடித்தள வகுப்பினருமே கிறித்துவர்களாக மாறினார்கள். “பிச்சைக்காரர்களின் மதமே கிறித்துவம்’ என்று கிப்பன் கூறுகிறார். கிப்பன் தற்போது உயிருடன் இருந்தால், அய்ரோப்பாவில் உள்ள அனைவருடைய மதமாக கிறித்துவம் எப்படி மாறியது என்றும் கூறியிருப்பார். பவுத்தம் ‘மகர்’ மற்றும் ‘மாங்கு’களின் மதம் என்று சிலர் சொல்லலாம். பார்ப்பனர்கள் கவுதமரை “போ கவுதம்’ “அரே கவுதம்’ என்று அழைத்து புத்தரை கேலி செய்தனர். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ராமன், கிருஷ்ணன், சங்கரன் போன்ற சிலைகள் எல்லாம் வெளிநாடுகளில் விற்கப்பட்டால், எந்தளவுக்கு விற்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, புத்தருடைய சிலை விற்பனைக்கு வைக்கப்பட்டால், அங்கு ஒரு…

Read More