Author: Sasikumar

கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஆறு பேர் கடும் காயத்துடன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை எடுத்துவந்த சந்திரசேகர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். லாரி ஓட்டுனராக பணியாற்றும் சந்திரசேகர் அவர்களுக்கு தவமணி என்கிற மனைவியும் 6 வயதில் மகளும் 5 வயதில் மகனும் இருக்கின்றனர்.

Read More

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள் சாதிய கொலைகளின் முதன்மை மாவட்டமாக சிவகங்கை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், பழையனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் கச்சநத்தம். இக்கிராமத்தில் வசித்து வருகிற இந்து பட்டியல் சாதி பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் (31) த.பெ.அறிவழகன் மற்றும் ஆறுமுகம் (65) த.பெ.கோனான் ஆகியோரை சுமார் 20 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் நேற்று 28.05.2018 அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தனசேகரன், மலைச்சாமி, சுகுமார், சந்திரசேகர், தெய்வேந்திரன், மகேஸ்வரன் ஆகிய 6 பேருக்கு கடுமையான அரிவாள் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து பழையனூர் காவல்நிலையத்தில் குற்றஎண்.32/2018 பிரிவுகள் 147, 148, 294(b), 324, 307, 302 இ.த.ச. மற்றும் பசடடஈக அஸ்ரீற் மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(r),…

Read More

சில காரணங்களை மனதில் வைத்தே அம்பேத்கர் அவர்கள் fools rushing in where the angels fear to tread என்ற முதுமொழியை ஏன் பயன்படுத்தினார் என்று முகநூல் தோழர்களிடத்தில் கேள்வி எழுப்பினேன். வழக்கமாக அறிவுத் தளத்தில் விவாதிக்கத் தெம்பற்று வெறும் படங்களைப் போட்டு தன்னை முன்னிருத்திக் கொள்ளத் துடிக்கும் போக்கிலிருந்து நமது தோழர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான்.. சரி மூதுரையினை அம்பேத்கர் ஏன் பயன்படுத்தினார் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அதன் மூலத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அம்பேத்கரின் மேதமையைப் புரிந்துக்கொள்ளத் தொடங்குவோம். fools rushing in where the angels fear to tread சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் Alexonder Pope என்று தோழர் ரூபா நேட் அவர்கள் சொன்னது உண்மை. அலெக்சாண்டர் போப் தான் எழுதிய An Essay on Criticism என்ற நூலில்தான் முதன்முதலில் எழுதினார், அந்த நூல் 1711 மே மாதம் 15ம் நாள்…

Read More

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில்  30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால்  இயல்பு வாழ்க்கை முடங்கியது.. ஏப்ரல் 2 ம் தேதி நாடுமுழுவதும் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போது கேரளாவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாநிலஅரசின் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து இயக்குநர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழக்கம்போல இயங்கும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தன. ஆனால் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் வழிமறித்தனர். கொச்சியில், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்த தலைவர்களில் முக்கியமானவரான கீதானந்தன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்., கைது செய்யப்படுவதற்கு முன் கீதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கேரளா முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகையில் எங்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. நாங்கள் கைது செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.. ” என்றார். கண்ணூர்…

Read More

தலித் அமைப்புகள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்துக்கு தலைமை வகித்த இளைஞரை வன்முறையாளர் என முத்திரை குத்தி கொலைப்பட்டியல் வெளி யிட்ட சங்பரிவார் அமைப்பினர், அதன்படியே கொலை செய்து விட்டனர். உத்தரப்பிரதேசம் மீரட்டுக்கு அருகில் உள்ள சோபாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் தலித் தலைவர் கோபி பரூயான் (28). அண்மையில் தலித் அமைப்புகள் நடத்திய பாரத் பந்தில் முன்னணியில் நின்று செயல்பட்டுள்ளார். சங்பரிவார் அமைப்பினர் அவரை வன்முறையாளர் என குறிப்பிட்டு முதல் நபராக கொலைப்பட்டியல் (ஹிட் லிஸ்ட்) வெளியிட்டிருந்தனர். அதன்படி அவரை சுட்டுக் கொன்றனர். ஏப்ரல் 14 அன்று தலித் அமைப்புகள் நடத்த திட்ட மிட்டுள்ள அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த கொலைபாதகம் நிகழ்த்தப்பட்டி ருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. என்ன நடந்தாலும் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெறும் எனவும், அச்சுறுத்தல்களுக்கு தலித்துகள் அடிபணிய மாட்டார்கள் எனவும் மீரட்டில் நடந்த தலித் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியுள்ளனர். ஏற்கெனவே கோபி பரூயாவை வன்முறையாளர்…

Read More

சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 16). இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலையில் வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் வைத்தீஸ்வரியை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரத்தூர் காவல்நிலையத்தில் வைத்தீஸ்வரியின் பெற்றோர் மகளை காணவில்லை எனக் கூறி புகார் செய்தனர். இதனிடையே இன்று அதிகாலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியே வயலில் சடமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய ஒரத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தீஸ்வரி வேலை முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் கும்பல் ஒன்று அவரை…

Read More

சூத்திரர்கள் ஆரியரல்லாத பூர்வகுடி இனத்தவராக இல்லையெனில் அவர்கள் யார்? இக்கேள்வியை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டும். நான் முன்வைக்கப் போகும் கொள்கை நிலையை பின்வரும் மூன்று கருத்துக்கள் தெளிவுபடுத்தக்கூடும்: 1) சூத்திரர்களும் ஆரியர்களே. 2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர். சூத்திரர்களின் தோற்றுவாய் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு புரட்சிகரமான ஆய்வுக்கட்டுரையாக இல்லாவிடினும் திகைப்படையச் செய்யும் ஆய்வுக் கட்டுரையாக இருக்கும். இக்கருத்துக்கு ஆதரவாகப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும்கூட பலர் இதை ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இது திகைப்பூட்டக் கூடியதாகும். எனது கடமை சான்றுகளை எடுத்துவைப்பதேயாகும். அதன்மதிப்பை சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுகிறேன். இந்த ஆய்வுக்கட்டுரை ஆதாரமாகக் கொண்டுள்ள முக்கியச் சான்று மகாபாரதத்தின் இயல் 60இல் செய்யுள்வரிகள் 38-40 இல் வருகிறது. அது…

Read More

மதம், தத்துவம், சட்ட முறைகள் இலக்கியம், கலை, இசை போன்ற ஆன்மீகச் சிந்தனை, மதிப்புகள் ஒன்றே பண்பாடு என்று சிலர் கருதுகின்றனர். உற்பத்தி சாதன முறைகளிலும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களை காலவரிசைக்கிரமமாக எடுத்துரைப்பதே வரலாறு என்று டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்தியாவிலேயே பிறந்து அயல் நாடுகள் எல்லாம் பரவி மிக செல்வாக்குடன் விளங்கியது புத்தசமயம். அசோகமன்னன் காலத்திலிருந்து அரசாங்க சமயமாகவே ஆக்கப்பட்ட புத்தம், அரசியல் சமுதாய பொருளாதார அமைப்புகளை ஆக்கி இந்தியாவின் கலை, பண்பாடு, கலாச்சாரம், ஓவியம், சிற்பம் என்பனவற்றில் இந்நாட்டை ஓங்க வைக்க உதவியது. வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலிருந்து கோசலை நாட்டிற்கு உட்பட்ட பகுதி கபிலவஸ்து அங்கு உள்ள லும்பினி நகரத்தில் ஆட்சி புரிந்து வந்த சுத்தோதனர் மாயாதேவிக்கு மகனாகப் பிறந்தார் சித்தாத்தர். கி.மு.563.இல் பிறந்த செய்திகள் ஜாதக்கதை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தோற்றுவித்த சமயமே புத்த சமயம் ஆகும். பழங்காலம் முதல் இக்காலம் வரை…

Read More

கிறித்துவ மதம் அய்ரோப்பாவில் நுழைந்தபோது ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் துன்பத்தில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு “கிச்சடி’ உணவு வழங்கப்பட்டது. கிறித்துவை யார் பின்பற்றினார்கள்? ஏழை களும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் பின்பற்றினார்கள். ஏழைகளும் அடித்தள வகுப்பினருமே கிறித்துவர்களாக மாறினார்கள். “பிச்சைக்காரர்களின் மதமே கிறித்துவம்’ என்று கிப்பன் கூறுகிறார். கிப்பன் தற்போது உயிருடன் இருந்தால், அய்ரோப்பாவில் உள்ள அனைவருடைய மதமாக கிறித்துவம் எப்படி மாறியது என்றும் கூறியிருப்பார். பவுத்தம் ‘மகர்’ மற்றும் ‘மாங்கு’களின் மதம் என்று சிலர் சொல்லலாம். பார்ப்பனர்கள் கவுதமரை “போ கவுதம்’ “அரே கவுதம்’ என்று அழைத்து புத்தரை கேலி செய்தனர். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ராமன், கிருஷ்ணன், சங்கரன் போன்ற சிலைகள் எல்லாம் வெளிநாடுகளில் விற்கப்பட்டால், எந்தளவுக்கு விற்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, புத்தருடைய சிலை விற்பனைக்கு வைக்கப்பட்டால், அங்கு ஒரு…

Read More