‘மனம் எதைச் செய்ததோ அதை மனமே நீக்கவும் முடியும். மனிதனை அடிமை நிலைக்கு ஆளாக்கியது மனமே எனில், சரியாக வழி நடத்தப்படு மாயின், அதுவே அவருக்கு விடுதலையைக் கொணரவும் முடியும்.”
‘நற்பேச்சு போதிப்பதாவது :
(1) எது வாய்மையோ அதை மட்டுமே ஒருவர் பேசுதல் வேண்டும்;
(2) எது பொய்மையோ அதை ஒருவர் பேசாதிருத்தல் வேண்டும்;
(3) ஒருவர் பிறரைப் புறங்கூறிப் பேசலாகாது;
(4) இகழ்ந்துரைத் தலினின்று ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்;
(5) அடுத்தவர் எவரையும் நோக்கி ஒருவர் சினச் சொல்லோ, இன்னாச் சொல்லோ பயன்படுத் தாதிருக்க வேண்டும்.
(6) அனைவரிடமும் ஒருவர் அன்புடனும், கனிவுடனும் பேசுதல் வேண்டும்;
(7) கருத்தற்ற, பயனில் சொல் பேசாதவராய், கருத்துள்ள பயனுள்ள சொல் மட்டுமே பேசுபவ ராய் இருத்தல் வேண்டும்.”
‘நல்லொழுக்கப் பாதையென்று
(1) சீலம் (2) தானம்; (3) உபேக்கம்; (4) நெக்கமம்; (5) வீரியம்; (6) காந்தி; (7) சுச்சும்; (8) அதித்தானம்; (9) கருணை மற்றும் (10) மைத்ரி – ஆகிய நல்லொழுக்கங்களைக் கடைபிடிப்பதாகும்.
‘நடுநிலை வழி எது?
அது எண் குணம் என்னும் உயர்வழி, நன்நோக்கு, நல்இலக்கு, நல்வாக்கு, நற்செயல், நல்வாழ்க்கை, நல்முயற்சி, நற்கண்ணோட்டம் மற்றும் நற்கவனம். இதுவே சரியான நடுநிலை வழி.”