Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
புத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula தமிழாக்கம் : நவாலியூர் சோ. நடராசன் Tamil Translation : Navaliyur Somasundaram Nadarasa * * * அறவுரை – தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்) 1 சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். 2 சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தூய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன நிழல் தன்னைத் தொடர்வது போலச் சுகம் அவனைத் தொடரும். 3 ‘அவன் என்னை நிந்தித்தான், அவன் என்னை அடித்தான், அவன் என்னை ஜெயித்தான், அவன் என்னை கொள்ளையடித்தான்’, என்று எவன்…
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர். சாதி வேறுபாடுகள் இந்தியாவில் இல்லை என்று கூறிக்கொண்டாலும், சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் இங்கு இன்று வரை குறையவில்லை, என்பதே ஒரு சோகமான உண்மை. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்கன் மாவட்டத்தில், இது போன்ற சாதி பாகுபாடு இன்றும் காணப்படுகிறது. இதனை சமீபத்தில் நடைபெற்றிருக்கும் ஒரு கொடூர சம்பவம் நிரூபித்திருக்கிறது. ஜால்கன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுவர்கள், மேல் தட்டு மக்கள் உபயோகிக்கும் கிணற்றில் குதித்த காரணத்திற்காக, தாக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சிறுவர்களை பிடித்தவர்கள் அவர்களை நிர்வாணப்படுத்தி அடித்திருக்கின்றனர். வலி தாங்க முடியாமல் அழும் அவர்களை, வீடியோ எடுத்து இருக்கின்றனர். இலைகளால் தங்கள் உடலை மறைத்தபடி அழும்…
சாதிவெறி என்பது இந்தியாவின் தேசிய நோய் என்பதை நிரூபித்திருக்கிறது கேரளமும். காதலித்தவரையே கரம் பிடித்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த நீனுவின் சந்தோஷம், கல்யாணம் முடிந்த மூன்றாவது நாளே தொலைந்துவிட்டது. கணவர் கெவின் ஜோசப் ஆணவக்கொலைக்குப் பலியாக, கதறித் துடித்துக்கொண்டிருக்கிறார் நீனு. கோட்டயம் அருகே உள்ள நட்டாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப்புக்கும் நீனுவுக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. தென்மலையைச் சேர்ந்த நீனு, கோட்டயத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். கோட்டயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மே 25-ம் தேதி நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நீனு, தலித் இளைஞரை மணந்தது நீனுவின் தந்தை ஜான் சாக்கோவுக்குப் பிடிக்கவில்லை. மகளை கெவினிடமிருந்து பிரிக்க, கெவின் ஜோசப்பின் தந்தை ராஜனிடம் `உங்கள் மகன் என் மகளை மறந்துவிட்டால், ஏராளமான பணம் தருகிறேன்’ என பேரம் பேசினார். ராஜனோ கைவிரித்துவிட, கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் `மகளைக் காணவில்லை’ எனப் புகார்…
தொடர்ச்சியாக நாடு முழுக்க நடக்கும் படுகொலைகளின் பட்டியலில் ஒன்றாகக் கரைந்துபோகாமல், கொடூரத்தன்மை காரணமாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டம் காரணமாகவும் தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளிக்கு வந்திருக்கிறது கச்சநத்தம் படுகொலை. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் பட்டியலின மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. இச்சம்பவத்தில் 3 பேர் இறந்துள்ளனர். இன்னும் 5 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் தெய்வேந்திரனும், அவரது நண்பர் பிரபாகரனும், கால் மேல் கால் போட்டுத் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சாதி வன்மமே, கொலைக்கான காரணம் என்பது முதற்கட்டச் செய்தியாக வெளிவந்தது. மேலும் கஞ்சா விற்பனை, கந்துவட்டி எனப் பல பிரச்னைகளால், நெடுங்காலமாக அவர்கள் அவதிப்பட்டு வருவதை ஆற்ற முடியாத கண்ணீரின், வார்த்தைகளின் வழி அறிய முடிந்தது. சம்பவம் நடந்துமுடிந்த நான்காவது நாளில், கச்சநத்தம் கிராமமே மதுரை அரசுப் பொது மருத்துவமனைக்கு எதிரில், நீதி…
‘நான் சமரசமற்ற படைப்பாளி கிடையாது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய ‘காலா’ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்துள்ள இந்தப் படத்தை, தனுஷ் தயாரித்துள்ளார். பா.இரஞ்சித் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது. சமரசமற்ற படைப்பாளியாக கமர்ஷியல் சினிமாவில் இயங்குவது சாத்தியமா? சமரசமற்ற படைப்பாளியாக நான் இல்லை. சமரசமுள்ள படைப்பாளியாகத்தான் இருக்கிறேன். ஆனால், சமரசமற்ற படைப்பாளியாக மாறவேண்டும் என்று விருப்பப்படுகிறேன். ஏனென்றால், நான் நினைப்பதையும் பேசுவதையும் படமாக்க சமரசமற்ற தன்மை இங்கு தேவைப்படுகிறது. சினிமா எனும் மிகப்பெரிய மீடியத்தின் வழி பேசும்போது, இங்கு இருக்கின்ற வியாபார யுக்தி, எந்த மக்கள் பார்க்கின்றனர் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. ஒரு ஓவியத்தை, சமரசமற்ற படைப்பாக என்னால் எப்போதும் பார்க்க முடியாது. நான் வரைகிறேன், பேசுகிறேன், என்னுடைய வார்த்தை, நான் எடுத்தாள்கிற மொழி என் எதிரில் இருப்பவர்களுடன் இணைய வேண்டும் என நினைக்கிறேன். என் எதிரில் இருப்பவன்…
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கணிசமாக தலித்துகள் வசிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எஸ்.சி வகுப்பினர் இங்கே சுமார் ஒரு கோடியே நாற்பத்தைந்து லட்சம் பேர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் அது 20% ஆகும். அந்த அளவுக்கு எண்ணிக்கை பலம் கொண்ட சமூகம் தமிழ்நாட்டில் வேறெதுவும் இல்லை. அப்படியிருந்தும் அவர்களது நிலை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அது உண்மையல்ல. வீரமும், விவேகமும் செறிந்த வரலாறு : 18ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டிலிருந்த தலித் மக்கள் அமைப்பாகச் சேர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். அதே வேளையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை ஒடுக்க முற்பட்டபோது அவர்களின் போலீஸ் படையைத் தாக்கி விரட்டியும் அடித்திருக்கிறார்கள். ” சென்னையில் கலெக்டராயிருந்த லயோனெல் ப்ளேஸ் (Lionel Place) என்பவர் அறிமுகப்படுத்திய புதிய வரிவிதிப்பு முறையை…
இந்து மதம், அது இப்போது இல்லாத இடமே இல்லை. இராமகோபாலன் அய்யாவுடைய கோமணத்திற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது. சங்கராச்சாரிக்கு சொறி பிடிக்கின்ற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது. அது போதாதுனு இப்ப புதுசு புதுசா கிளம்பிட்டாங்க. உங்க வாழ்க்கையில என்ன கஷ்டம்னாலும் எங்கிட்ட சொல்லு. லெட்டர் போடு. ஜோசியப்படி கணிச்சு உன் வாசப்படியில கொண்டுவந்து சொருவுரேங்குறான். இதுக்கு இணைப்பு, பிணைப்பு, வெங்காயம், வெள்ளப்பூண்டு, வாஸ்துசாஸ்திரம் என்கிறான். எந்த நாட்டில் வாஸ்துசாஸ்திரம்? தமிழ்நாட்டில், மாராத்தியில், குஜராத்தில், வாழ்வதற்கே வசதியில்லாமல், வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில படுத்துட்டிருக்கிற ஜனங்ககிட்ட வாஸ்து மசுரு என்னத்துக்குன்னு கேட்போமா? கேட்கமாட்டோமா? இதுக்கு வாஸ்துசாஸ்திரமா? வீடே இல்லையாம் இதுக்கு வாஸ்த்தாம். வாஸ்து எதுக்கு வைப்ப?ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வெளிக்கு போறதுக்கு இடமில்லாமல் டாய்லெட்டுன்னு ஒன்னுதெரியாமல் வெளியபோயிகிட்டிருந்தான். இதுக்கு ஒரு 3 கிலோமீட்டர் போயி குப்புசாமி வரல, கோயிந்தசாமி வரல, நீ சொம்பு எடுத்துக்குனு வா, நா டார்ச் லைட் எடுத்துக்குனு வாரேன்னு பாகப்பிரிவினை பண்ணிக்கினு…
நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை. மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும்…
பேரன்பின் பாபாசாகேப் அவர்களுக்கு, வணக்கம். ஊர் தனியாகவும், சேரி தனியாகவும் இன்றுவரை பிரிக்கப்பட்டு கிடக்கும் ‘அகண்ட பாரதத்தில்’ இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் இறந்த ஆண்டில் இருந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்துவிட்டோம். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒழிக்க நினைத்த ‘சாதி’, காலம் கடந்து இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. ’இப்ப எல்லாம் யாரு சாதி பார்க்குறாங்க?’ என்ற கேள்வியை எப்போதும் முன்வைக்கும் தலைமுறையில் பிறந்தவர்கள் நாங்கள். ‘இட ஒதுக்கீடு தான் சாதியை நீடிக்கச் செய்கிறது’ என வாதம் செய்யவும் எங்கள் தலைமுறையில் பலர் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டனர். மக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்படும் இத்தகைய சாதிக்கு ஆதரவான கருத்துகள் இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று சேர்ந்துவிட்டன. நீங்கள் அனுபவித்து, ஒழிக்க நினைத்த தீண்டாமையைக் குற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி இந்தியாவின் உழைக்கும் மக்களின் மாண்பை மீட்டெடுக்க முயற்சி செய்தீர்கள். வருடங்கள் கடந்தாலும் வன்முறைகள் குறையவில்லை என்பதால், பட்டியல் சமூகத்தினருக்கு…
ஏழைத் தந்தை, வறுமைக் குடும்பம், எல்லாம் கடந்து, வீட்டை மறந்து, வெளி நாட்டில் பயின்று, மேதையானவர். மனித பாகுபாடுகளை களைந்து எரியுங்கள் சமத்துவத்தை நிலை நாட்டுங்கள் – என தன்னாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கெல்லாம் உரக்கச் சொன்னவர். கற்பி! ஒன்று சேர்! போராடு! அஞ்சாதே! நிமிர்ந்து நில்! என்ற பகுத்தறிவு தந்திரங்களை மக்கள் நெஞ்சில் விதைகளாய் விதைத்தவர். மேலை நாடுகளில் பல சட்டங்களை கற்று முடித்து மத்திய அரசின் பரிந்துரையால் தன் நாட்டிற்கான புதிய சட்டங்களை இயற்றி அதைத் திட்டங்களாய்ச் செயல்படுத்தியவர். நம் இந்திய அரசியல் சாசனத்தின் தலையாய தந்தையானவர். சட்டம் பயில்வோர்கள், சமத்துவம் போற்றுவோர்கள்- என ஏனைய மக்களின் குருவானவர். இந்த இருபதாம் நூற்றாண்டு இன்று போற்றி மகிழும் நம் இந்தியாவின் இரண்டாம் தந்தையானவர். இவர் சாதி, மத, பேதம் போற்றும் அரசியல் கட்சிகளின் தலைவரில்லை சமத்துவத்தின் சமூக நல்லிணக்கத்திற்கான அறிஞர். அவர் இங்கு பிறந்த எல்லா மக்களும் சமமென்றார் ஆகவே – ஏழை மக்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்டார். யார்? அவர், அவர் தான். சட்ட மேதை, அறிவுச் சுடரொளி, ஆற்றலின் அடைமொழி, அகிம்சையின் தத்துவம், உண்மையின் உருவம், அடக்கத்தின் அடையாளம், எழுச்சியின் அறிமுகம், புரட்சியின் பூர்வீகம், இந்தியாவின் கலங்கரை விளக்கம், மாமேதை, புரட்சியாளர், பீமாராவ் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பெரு.பழனிச்சாமி