Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
பறவைகள் கீச்சிடும் சத்தம், வண்டுகள் ரீங்காரம், எங்கோ வெட்டவெளியில் இருந்து இரைச்சலுடன் ஓடும் நாயின் குரைப்பு என துவங்குகிறது “பரியேறும் பெருமாள் பி.ஏ.,பி.எல்.” எனும் உயிரை உருக்கி வடித்த ஒரு புதிய தமிழ் சினிமா. கருப்பி எனும் நாயின் நான்கு கால்களை தூண்களாக்கி நகரும் கதை என நினைக்கும் முன்னமே சுக்கு நூறாய் உடைந்து நொறுங்குகிறது நம் மனம் ரயிலின் விசையில் சிதறுண்டுபோன கருப்பியின் உடலைப்போல். தம்முடன் நம்பி வந்த வாயில்லா ஜீவனின் கழுத்தில் துண்டைக் கட்டி ரயில் தண்டவாளத்தில் கட்டிவிட்டவர்களின் கொடூர ஜாதிவெறி குற்றுயிரும் குலைஉயிருமாக சிதைந்தபோகும் கருப்பியைக் கண்டதும் விளங்குகிறது. ஒரு குட்டை நீரில் குளிப்பாட்டியதற்காக அந்த நீரில் மூத்திரம் பெய்யும் ஜாதிய திமிரும், அதற்காகவே அந்த நாயைக் கொல்லத்துணிந்த ஒருதுளி கருணையற்றவரின் கொலைவெறியும் புதிதல்ல தமிழகத்தில். தலித் குடிகளின் ஆண் நாய் கள்ளர் வீட்டு பெண் நாய் கர்ப்பத்துக்கு காரணமானதால் அந்த ஆண் நாயை அடித்துக் கொன்றதுடன்…
According to police, the “last straw” for Rao was his daughter’s grand wedding reception on August 17, after which he decided to eliminate Pranay so that his daughter would return to him. Unable to accept that his only daughter had married a Dalit and was also expecting a child, T Maruthi Rao promised to pay a gang led by Asghar Ali, who was acquitted in the Haren Pandya murder case, Rs 1 crore to kill his daughter’s husband. Rao, who belongs to an upper-caste, was arrested on September 14 with six others for the murder of P Pranay Kumar and…
தெலங்கானாவில் 2 நாள்களுக்கு முன்னால், கர்ப்பிணி மனைவி (அம்ருதா)யின் கண்ணெதிரே கணவனை ஆணவக்கொலை செய்த சம்பவம் நாடு முழுக்க ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது. பிரனய் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக, அம்ருதாவின் அப்பா இந்த கொடுஞ்செயலை செய்தார். தற்போது, அம்ருதா, தன் கணவர் பிரணயின் கொடூரமான மரணத்துக்கு நீதி வேண்டி, ‘ஜஸ்டிஸ் ஃபார் பிரனய்’ முகநூல் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே, ஆயிரக்கணக்கானோர் அவருடைய பக்கத்தை லைக் செய்ததோடு, அவருடைய போராட்டத்துக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். அம்ருதா தொழிலதிபரின் மகள். அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனய் குமார் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். பணத்தையும், சாதியையும் காரணம் காட்டி தன் மகளின் காதலை எதிர்த்திருக்கிறார் அம்ருதாவின் தந்தை. சாதியைவிட நேசித்தவனின் அன்புதான் பெரியது என்று, கடந்த ஜனவரி மாதம் பிரனயைத் திருமணம் செய்துகொண்டார் அம்ருதா. தற்போது காதலின் பரிசாக அம்ருதா கருவுற்றிருக்கும் தருணத்தில்தான், கணவர் பிரனயை…
Pranay was murdered in broad daylight on September 14, and his wife, Amrutha, has alleged that her father and uncle masterminded the crime. A pall of gloom has descended over Muthireddy Kunta in Telangana’s Miryalaguda. The streets which resonated with the slogans of ‘Jai Bhim’ and ‘Johar Pranay’ on Sunday evening now were shrouded in silence. The streets leading to Pranay’s house are the quietest of all, except for a few neighbours standing around speaking in low voices. Several well-wishers and friends continue to visit his residence and pay their respects to the large photo of the 24-year-old hung inside…
“Ennisaralu Ee Goralu, Entamandimi Orugudamu (How many times will these atrocities take place, how many should be laid rest),” sang one youngster. Cries of “Pranay Amar Rahe – Jai Bhim!” rang in the hour in the streets of Miryalaguda in Telangana on Sunday, as thousands from across the state flocked to the town for the funeral procession of Pranay Perumalla. The town bore witness to Dalit anger and sorrow, and hundreds of youngsters were part of the funeral procession that began from Pranay’s home in Muthireddy Kunta and went around the town, before the burial took place at the Roman…
தெலங்கானாவில் பட்டப்பகலில் மருத்துவமனை வளாகத்தில் காதல் மனைவி முன்பு கணவன் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்னும் பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளி நட்பு காதலாக மாறியது. அம்ருதாவின் தந்தை மாருதிராவ் ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல் விவகாரம் இருவர் வீட்டிலும் தெரியவர பிரச்னை வெடித்தது. பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அம்ருதாவிடம் பிரனய் உடனான காதலை முறித்துக்கொள்ளும்படி மிரட்டினார். அம்ருதாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து பிரனய் – அம்ருதா கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் அம்ருதா…
சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு தரப்பு வழக்கறிஞராக சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும், கோகுல்ராஜ் தாயாரின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜும் ஆஜராகி வருகிறார்கள். கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்த பிறகு, இவ்வழக்கின் முக்கியச் சாட்சியான ஸ்வாதியிடம் ரகசிய விசாரணையும், திறந்தவெளி விசாரணையும் நடைபெற்றது. அதற்காக ஸ்வாதி முகத்தை மூடியவாறு தன் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞரோடு 12 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். திருச்செங்கோடு மலைக்கோயிலிலிருந்து யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் கோகுல்ராஜை கடத்திச் சென்றதாகக் கைப்பற்றப்பட்ட வெள்ளை நிற டாடா சபாரி காரும் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை பகல் 12:30 மணிக்குத் தொடங்கியது. கோகுல்ராஜை இறுதியாகப் பார்த்தவரும், அவரை யுவராஜ் கடத்திச் சென்றதாகச் சொல்லப்பட்ட நேரடி சாட்சியும் ஸ்வாதிதான் என்பதால்,…
பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வழங்கியவர் மறைந்த தலித் தலைவர் எல்.இளையபெருமாள் ஆவார். இந்தியாவில் மணடல் கமிஷன் நியமிக்கப்படுவதற்கு முன்னர் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் எல்.இளையபெருமாள் தலைமையிலான ஒரு நபர் கமிஷன். committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் சார்பில் அவர் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை 1969 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார். இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையை மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்றபோதிலும் அப்போது தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அர்ச்சகர் நியமனம் குறித்த பரிந்துரையின் முக்கியத்துவத்தைக்…
பிணவறையின் வெளியே உள்ள திண்டு ஒன்றில் சடலமாக கிடந்தார் சபரீஸ்வரன். அவரது கிழிக்கப்பட்ட வயிற்று பகுதியை நூலால் தைத்துக் கொண்டிருந்தார் பிணம் அறுக்கும் தொழிலாளி. பிணம் தான் அதற்காக அம்மணமாக போட்டிருக்க வேண்டுமா? யாராவது ஒரு துணியைக் கொண்டு போர்த்துங்கள் என்று ஒரு பெரியவர் நெஞ்சுருகி கலங்கிக் கொண்டிருந்தார். ஐயா, கொலைகாரர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று ஒரு பெரியவர் என் கைகளைக் பிடித்து கொண்டு விடாமல் பொறுமிக் கொண்டிருந்தார். நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அழுது அழுது பலமின்றி தரையில் கிடந்த சிட்டுப்பிள்ளை அருகில் சென்றேன். ஐயா, என் பிள்ளைய கத்தியால் நெஞ்சில் குத்தி கொலை செய்துவிட்டார்கள். இதை கேட்க யாருமே இல்லையா? என்று கலங்கினார். அங்கிருந்த பெண்களும் கடுமையாக அழுது கொண்டிருந்தனர். தலித் இளைஞர் சபரீஸ்வரனுக்கு வயது 21. அவரது அப்பா மணிகண்டன் திருப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு தம்பி, ஒரு தங்கை.…
“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின!” – அர்ஜுன் டாங்ளே சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன் அர்ஜுன் டாங்ளே – தலித் இலக்கியத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர்; சமூகச் செயற்பாட்டாளர். மகாராஷ்டிராவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித் பேந்தர் (Dalit Panther) இயக்கம், தலித் இளைஞரணி அமைப்பு (Militanat Dalit youth organization) ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவர். ‘பாரதிய குடியரசுக் கட்சி’ (Bharatiya Republic Party)யின் தலைவராகவும் இருந்தவர். தற்போது, ‘குடியரசு ஜன சக்தி’யின் தலைவராக இருக்கிறார். டாங்லே எழுதிய பல கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1992-ம் ஆண்டு இவர் தொகுத்த ‘Poisoned Bread’ என்ற தலித் இலக்கியத் தொகுப்புதான், இந்திய மொழிகளில் முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் தலித்திய எழுத்து. இந்தியாவில் தலித் மக்கள் பற்றிய ஆய்வுகளில் இத்தொகுப்பு முக்கிய இடம் வகிக்கின்றது. கவிதைகள்,…