Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

“Ambedkar understood that rising and persistent inequalities pose fundamental challenges to the economic and social well-being of nations and people,” Achim Steiner said. Bhimrao Ambedkar’s “tireless efforts” towards ensuring excluded groups were politically and socially empowered made him a “pioneer” in the world and his vision of equality and social justice echoes the ambitions of the UN’s 2030 development agenda, a top UN official has said. In his keynote address at a special event organised at the UN headquarters by India’s Permanent Mission to the UN on the occasion of Ambedkar’s 127th Birth Anniversary, UN Development Programme Administrator Achim Steiner…

Read More

டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? – உருகேன் சங்கரக்ஷிதா . -இந்த கேள்விக்கான பதிலை சிறிது கூடுதலாக ஆராயவேண்டியுள்ளது. டாக்டர் அம்பேட்கர் அவர்களின் கூற்றுப்படி, நான்கு முக்கிய மதங்கள் தற்பொழுது இவ்வுலகின் பெருவாரியான மக்களால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இம்மதங்கள் கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் இன்றும் பெருவாரியான மக்களிடத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு முக்கிய மதங்கள் பவுத்தம், கிருஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகும். இதன் நிறுவனர்கள் முறையே புத்தர், இயேசு கிருஸ்து, முகமது நபி மற்றும் கிருஷ்ணர். இம்மாபெரும் நிறுவனர்கள் ஒவ்வொருவரையும் பற்றி டாக்டர் அம்பேட்கர் சில தகவல்களை முன்வைக்கிறார். டாக்டர் அம்பேட்கர் அவர்கள் இயேசு கிருஸ்துவை பற்றி சொல்லுவதாவது, அவர் தாம் கடவுளின் மகன் என்றும், மற்றும் யார் கடவுளின் இராஜ்யத்தை அடைய விரும்புகிறார்களோ, யார் முக்தி அடைய விரும்புகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக இதை ஏற்க…

Read More

டெல்லி: இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது பெரிய அளவில் கலவரமாக மாறியுள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. இது அந்த சட்டத்தையே கேள்விக்குறியாக்கியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இது அங்கு இயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. மேலும் மத்திய பிரதேசம் முழுக்க இணையம் முடக்கப்பட்டு உள்ளது. 4 மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி முழுக்க இந்த போராட்டம் காரணமாக ஸ்தம்பித்து இருக்கிறது. இன்று மட்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த போராட்டம் காரணமாக 4 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 50க்கும் அதிகமான…

Read More

“பஞ்சமா பாதகம்” எனும் எதிர்வினை கட்டமைப்புக்குள் சுருங்கியிருந்த இந்திய பண்பாட்டுலகம், “பஞ்ச சீலம்” எனும் நல்வினை வழியொழுகும் தனிமனித மற்றும் சமூக ஒழுக்கநெறியை மானுடத்திற்கு வழங்கியது இந்திய தொல்குடி அடையாளமாகிய புத்த தம்ம அடையாளம். புத்தம் எனும் அறிவையும், தம்மம் எனும் அறத்தையும் சேர்த்து இழைத்த சங்கம் எனும் அமைப்பின் வழி பகிரும் எல்லா உயிர்களுக்குமான அன்பை வலியுறுத்திய உயர்ஞான் எய்திய புத்த பெருமானின் போதனைகளை ஒருங்கிணைத்த திபீடகங்கள் அல்லது திரிபீடகங்கள் என்றழைக்கப்படும் வினைய, சுத்த மற்றும் அபிதம்ம பீடகங்கள், பஞ்சமாப்பாதக வர்ண-ஜாதி-வர்க்க பேத மானுட-எதிர் பண்பாட்டுக் கூறுகளை உடைத்து நொறுக்கிய புதிய மானுட எழுச்சியின் அடையாளம் தான் தொல்குடி அடையாளம். தமிழில் சங்ககாலம் என புனையப்பட்ட காலத்தில் வர்ண-ஜாதிய-மத-கடவுள் அடையாளங்களை அடியொற்றி விரிக்கப்பட்ட இலக்கிய மரபு அகம் புறம் என தமிழ் சமூக அமைப்பியலை விளக்கும்படியாக இருக்கிறது. போர், வாள், வில்-அம்பு, ஆண் எனும் இறை அதிகாரம் என விரியும்…

Read More

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிறவெறி ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சார்ந்த லுங்கி இங்கிடியின் எழுச்சி மற்றும் வருகை இன மற்றும் சாதி அடக்குமுறையிலான பிற விளையாட்டுத் தேசங்களுக்கு ஒரு சிறந்த பாடம். தென் ஆப்பிரிக்க விளையாட்டுத் துறையில் நலிவடைந்தப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை கடுமையான சமூக சமத்துவமின்மைகளையும் பாகுபாடுகளையும் இடைவெளிகளையும் கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டான கிரிக்கெட்டுக்கு கண்ணாடி காட்டியுள்ளது. இந்திய விளையாடும் 11 வீரர்களில் தலித்துகள், ஆதிவாசிகள் சுத்தமாக இல்லாதது அனைவரும் அறிந்ததே. இத்தனைக்கும் இந்திய மக்கள் தொகையில் அவர்கள் 25% உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணுக்குப் புலப்படாமை: ரிசர்வேஷன் அல்லது இட ஒதுக்கீடு என்றாலே வன்முறையான உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நாட்டில் விளையாட்டுத் துறையில் இட ஒதுக்கீட்டின் நன்மைகளைப் பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்ட்களாகியும் விளையாட்டில் வாய்ப்புகளில் சமத்துவம் வழங்குவதில் தோல்வி அடைந்திருக்கிறோம். அரசுப் பள்ளிகள் என்ற அமைப்பு முறை…

Read More

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே! நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது… நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய அவர்கள் அழைக்கும் போது என்னால் வர இயலவில்லை. எனவே, நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். என்னுடைய உதவியின்றி, என்னை அதிகம் சார்ந்து நிற்காமல், நீங்கள் சந்திக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒருங்கிணைந்து செயல்படுங்கள். [quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]ஒரு மனிதன் 52 ஆவது வயதில் அரசியலைவிட்டு விலகிவிட வேண்டும். ஆனால், தற்காலத்தில் உள்ள அரசியல்வாதிகள், 55 வயதுக்குப்…

Read More

”பொன்.ராதாகிருஷ்ணன் அரசு வேலை தர்றேன்னார்… தமிழிசை வீடு தர்றதா சொன்னாங்க. ஆனா…” – JNU முத்துகிருஷ்ணன் குடும்பம் தற்போது… டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.ஹச்.டி., படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர், முத்துகிருஷ்ணன். கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம்… இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது, இவரது மர்ம மரணம். இதற்குத் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முத்துகிருஷ்ணனின் வீடு தேடி வந்து ஆறுதல் சொல்லி, பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, அவரின் குடும்பச் சூழ்நிலையை எப்படி இருக்கிறது என்பதை அறிய நேரில் சென்றோம். சேலம் அரிசிபாளையத்துக்கு அருகில் உள்ள பாவேந்தர் தெருவில் இருக்கிறது அந்தச் சிறிய ஓட்டு வீடு. முத்துகிருஷ்ணனின் அப்பா ஜீவானந்தம், அம்மா அலமேலு, அக்கா கலைவாணி, தங்கைகள் ஜெயந்தி, சுபா எனப் பெரிய குடும்பமாக இந்த வீட்டில்  வசித்துவருகிறார்கள். முத்துகிருஷ்ணன் இறந்திலிருந்தே அவர் அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.  தற்போதுகூட  மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும், மாலையில்தான் வருவார்கள் என்றும் பக்கத்து வீட்டில் சொன்னார்கள். மீண்டும் மாலை நேரத்தில் சென்றோம். முத்துகிருஷ்ணனின் தந்தை…

Read More

கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சார்ந்த பிரிஜேஷுக்கும், ஈழுவச் சமூகத்தைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமண ஏற்பாடுகள் படுஉற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். பெண்ணுக்குத் திருமணப் புடவையும் தாலியும் மட்டுமே வாங்க வேண்டும். திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக உறவினர்களுடன் சென்று மணமகளுக்கான பட்டுப்புடவையும் தாலியும் வாங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை பிரிஜேஷ்.  உறவினர்கள், திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். அப்போது டிவி-யில் ஸ்க்ராலிங் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. அதில், `திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக மணமகள் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி. அடுத்த வரியில் `கொல்லப்பட்டவரின் பெயர் ஆதிரா ராஜன்’ எனக் கூறப்பட, திருமண வீட்டில் இருந்தவர்களுக்குக் கடும் அதிர்ச்சி. `மணப்பெண் ஆதிரா, குத்திக் கொலைசெய்யப்பட்டார்.  தந்தை ராஜனே ஆதிராவைக் கொன்றார்’ என்ற கொடூரச் செய்தியை மாப்பிள்ளை பிரிஜேஷிடம் உறவினர்கள் பதறியபடி கூறினர். அலறித் துடித்த பிரிஜேஷ், சம்பவ இடத்துக்கு ஓடினார். ரத்த வெள்ளத்தில் ஆதிரா உயிரற்றுக் கிடக்க, பிரிஜேஷின் கல்யாணக் கனவு கலைந்தது. கடந்த வாரத்தில் கேரளாவை அதிரவைத்த…

Read More

எஸ்சி, எஸ்டி சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வகை செய்யும் கடுமையான சில விதிகளைத் தளர்த்தும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்தது. அதன்படி அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்திட உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்திசிலை முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை வகித்தார். தலித் உரிமைகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராடுகிறார் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். தலித் உரிமைகளுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து…

Read More

1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளால் சாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்கள் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். [divider style=”double” top=”30″ bottom=”30″] 1927 – சைமன் குழுவிடம் தந்த பரிந்துரை மற்றும் சாட்சியங்களில் பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்துள்ளார். [divider style=”double” top=”30″ bottom=”30″] 1930 – 31 – லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளில் பெண்களின் பங்களிப்பை அம்பேத்கர் வலியுறுத்தினார். [divider style=”double” top=”30″ bottom=”30″] 1931 – ஹிதகாரிணி சபாவில் “சமார்’ மற்றும் “மகர்’ பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தார். [divider style=”double” top=”30″ bottom=”30″] 1931…

Read More