Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
விஷ்ணுபுரம் சரவணன் – படங்கள்: ச.வெங்கடேசன் என் கருத்த உடல்களிலிருந்து சிந்தப்படுகின்ற ரத்தமெல்லாம் இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன தீண்டப்படாத முத்தங்களாக! முத்தம் என்பதன் ரசனை சார்ந்த நம் பார்வையை மாற்றி அமைத்திடும் இந்தக் கவிதை வரிகளை எழுதியவர், சுகிர்தராணி. சமகாலக் கவிஞர்களில் காத்திரமான படைப்புகளைத் தந்துவருபவர். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களிலெல்லாம் இவரை நிச்சயம் பார்க்கலாம். வேலூர், லாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். “நீங்கள் இயங்கும் வெளியாக இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?” “பள்ளிப்படிப்பு வரை பாடப்புத்தகங்கள் மட்டும்தானே வாசிப்பு. அதிகபட்சம் செய்தித்தாளும் மாத நாவல்களுமே வாசிக்கக் கிடைத்தன. வாழ்க்கைச் சம்பவங்களை எப்படி இவர்களால் எழுத்துக்குள் கொண்டுவர முடிகிறது என்ற ஆச்சர்யம் வந்தது. அதுதான் எனக்குள் இருந்த எழுத்தைக் கண்டுணர வைத்தது. அச்சில் ஒரு விஷயம் வெளியாகும்போது, ஏராளமானவர்களைச் சென்றடைய முடியும் என்ற எண்ணமும் தோன்றியது. தமுஎகச நண்பர்களின் அறிமுகம் கிடைத்ததும், எழுத்து சார்ந்து…
In 2017-18, Central PSUs bought Rs 543.86 crore worth goods and services from SC/ST enterprises, accounting for just 0.46% of their total procurement of Rs 1,16,837.27 crore. The government’s ambitious plan to get Central PSUs to make 4% of their procurement from Dalit enterprises has not made much headway over the last six years. In 2017-18, Central PSUs bought Rs 543.86 crore worth goods and services from SC/ST enterprises, accounting for just 0.46% of their total procurement of Rs 1,16,837.27 crore. Five years ago, in 2012-13, SC/ST enterprises sold goods and services valued Rs 419.93 crore, or 0.5% of the…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாரத்தில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு தீண்டாமை வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த (ஜூலை) மாதம் 16ஆம் தேதி அவிநாசி வட்டாரம் ஒச்சாம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த பாப்பாள் என்பவர் திருமலைக்கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். அன்றைய நாள் முதலே அந்த பள்ளியில் அவரை சமைக்க அனுமதி மறுத்துள்ளனர் அந்த ஊரை சேர்ந்த ஒரு குறிப்பிடட பிரிவை சேர்ந்த மக்கள். மன உளைச்சலுக்கு ஆளானேன்… பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள் தனது பணி தடுக்கப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். “எனக்கு சொந்த ஊரே இந்த திருமலைக் கவுண்டம்பாளையம்தான். இந்த ஊரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒச்சாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் 12 வருஷமா சத்துணவு ஊழியரா வேலை பார்த்துட்டு வரேன்.…
வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள். எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளுகிற மாநில அரசு இந்த சாதி வெறியர்களை என்ன செய்யப் போகிறது? அரசு கட்டிடத்திற்குள் உள்ளே வந்து சாதி துவேசத்தை நடத்திச் சென்ற அந்த கும்பல் மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் அந்த கும்பலுக்கு அடிபணிந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். தீண்டாமையை ஒழிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தீண்டாமைக்கு துணை போயிருப்பது…
மகளிரும் எதிர்ப்புரட்சியும் டாக்டர் அம்பேத்கர் ……………..மநு, சூத்திரர்களைவிட மகளிரிடம் அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட முடியாது. பெண்களைப் பற்றி மிக மோசமான கருத்துடன் மநு தொடங்கு கிறார். அவர் கூறுகிறார். 2.213 இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள். 2.214 இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்ல வர்கள் பெண்கள். 2.215 தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும். 9.14. பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படு வதில்லை, வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை.ஆணாக இருந்தால் போதும் அழகாக இருப்பினும், அசிங்க மாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார். 9:15 ஆடவருடன் உறவுகொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலன புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கண வர்கள் எவ்வளவு விழிப்பாக …
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள கோவிந்தவாடி அகரம் ஊராட்சி அரசுப் பள்ளி தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே, நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதன்படி, தற்போது தலித் காலனியில் பள்ளி இருக்கும் இடத்திலேயே புதிய பள்ளிக் கட்டடத்தை கட்ட வேண்டும் என ஒரு பிரிவினரும், நபார்டு வங்கி நிதியின் மூலம் புதிய இடத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என மற்றொரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு 3 கோடியே 77 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், பள்ளிக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இதர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மாணவர்கள் நான்கு நாட்களுக்கும் மேல் பள்ளிக்கு அனுப்பப்படாமல் இருந்தனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கடந்த புதன்கிழமை சென்று ஆய்வு நடத்தி வியாழக்கிழமை முதல்…
ஒருசொல்உனக்கு வளத்தைத் தருகிறதுஎனக்கு வறுமையைக் காட்டுகிறது ஒருசொல்உனக்கு வாய்ப்புகளை வழங்குகிறதுஎனக்கு வாய்ப்புகளை மறுக்கிறது ஒருசொல்உனக்கு மரியாதையைக் கொடுக்கிறதுஎனக்கு அவமானத்தைத் தருகிறது ஒருசொல்உனக்கு அதிகாரத்தைத் தருகிறதுஎனக்கு அடிமைத்தனத்தைக் கற்பிக்கிறது ஒருசொல்உன்னை முதல்வனாக்குகிறதுஎன்னை கடையனாக்குகிறது உனக்கும் எனக்குமானஅச்சொல்சாதி! – திருமகன்
வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம்…
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்த அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமை வகித்தார். பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் நோக்கவுரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ் மாநில செயலாளர் மோகனா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, விசிக, திக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நீலகங்காதரன், ராமமூர்த்தி, வீரமணி, தந்தைபிரியன் மற்றும் புதுச்சேரியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினர். தலித் மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை மத்திய…
புத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula தமிழாக்கம் : நவாலியூர் சோ. நடராசன் Tamil Translation : Navaliyur Somasundaram Nadarasa * * * அறவுரை – தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்) 1 சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும். 2 சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தூய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன நிழல் தன்னைத் தொடர்வது போலச் சுகம் அவனைத் தொடரும். 3 ‘அவன் என்னை நிந்தித்தான், அவன் என்னை அடித்தான், அவன் என்னை ஜெயித்தான், அவன் என்னை கொள்ளையடித்தான்’, என்று எவன்…