Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

அரசு இதுவரை வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை தற்போது குறைத்து உள்ளதால் 1 லட்சத்து 40 ஆயிரம் தலித் கல்லூரி மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் உள்ளனர். சென்னை: தலித் மற்றும் பழங்குடி மக்கள் பள்ளி படிப்பு முடிந்ததும் பொருளாதார பிரச்சினை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. அவர்கள் தொடர்ந்து படிக்க உதவும் வகையில் 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ரூ.85 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழிற்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் உதவித்தொகை உயர்த்தப்பட்டது. தற்போது இந்த உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த மருத்துவ கல்லூரி உதவித் தொகை ரூ.4 லட்சமாகவும், ரூ.85 ஆயிரமாக இருந்த என்ஜினீயரிங் உதவித்தொகை…

Read More

மூன்று நாள்களுக்கு முன் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்குமுன்… இதே போன்ற ஆணவக்கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்குத்தண்டனை வழங்கியிருக்கிறது நெல்லை மாவட்ட நீதிமன்றம். வழக்கின் சாராம்சம் இதுதான்… 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார் காவிரி. அவர் திருமணத்துக்கு உதவி செய்ததால் கொல்லப்பட்டார் தோழி கல்பனா. கொலை செய்ததாகக் கருதப்பட்ட காவிரியின் பெற்றோருக்கு இந்த வருடத் தொடக்கத்தில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. உடுமலைப் பேட்டையில் பட்டப்பகலில் சங்கர்-கௌசல்யா வெட்டப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்தவர்களால் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. அதுவும் அவர்களை வெட்டிவிட்டு அங்கிருந்த அந்தக் கும்பல் தப்பிச்சென்ற விதத்தை இப்போது நினைத்தாலுமே கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கிறது. 2016 ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஆணவப் படுகொலையில் சங்கர் இறந்துபோனார். கௌசல்யா பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்தார். அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்து முதல் இன்று தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் வரையிலான கௌசல்யாவின் பயணம் நினைத்துப்பார்க்க முடியாதது.…

Read More

Officials hope the discovery will encourage tourism and religious harmony. The base of the sleeping Buddha statue. Last month, the remains of a 1,700-year-old reclining Buddha was unveiled in the Khyber Pakhtunkhwa province of Pakistan. The statue measures 48 feet long and is located near Bhamala Stupa, a ruined Buddhist stupa and National Heritage Site. Carbon dating places the statue in the 3rd century AD, reportedly making it the oldest sleeping Buddha remains discovered so far. “This means a lot for the Khyber Pakhtunkhwa Archaeology department and shows its professionalism and commitment for the subject,” said Abdul Samad, the director of…

Read More

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(வயது 30). தலித் இனத்தை சேர்ந்த சட்ட மாணவி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28–ந்தேதி இவர் வீட்டில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அம்ரூல் இஸ்லாமை(23) போலீசார் கைது செய்தனர். ஓராண்டாக இந்த வழக்கு எர்ணாகுளம் நீதி மன்றத்தில் நடந்து வந்தது விசாரணையில் நேற்று முந்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்ததாக கூறப்படும் அமீருல் இஸ்லாம், கொலை செய்ததற்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என…

Read More

இந்தியாவையே பதைபதைக்கச் செய்தது அந்தக் கொலை. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து ஒரு ஜோடியின் மீது, கொடூர தாக்குதலை நடத்திச் சென்றது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல். இதில் கழுத்து, கைகள் என பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இளைஞர் மயங்கி விழுகிறார். இன்னொரு புறம் தனது கணவரை காப்பாற்றச் சொல்லி தலையில் வெட்டுக் காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தார் அந்தப் பெண். 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காலை நடந்தேறிய இந்த சம்பவத்தில் தனது காதல் கணவர் சங்கரை, சாதி வெறியின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகக் கொடுத்தார் கௌசல்யா. சாதி ஆணவப் படுகொலையின் உக்கிரத்தை உலகறியச் செய்த அந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் கௌசல்யாவின் சொந்தபந்தங்கள்தான். கூலிப்படையை ஏவி அந்தப் பிஞ்சுகளின் காதலைக் கொன்றது சாதிவெறிக் கூட்டம். இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய…

Read More

சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது என உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கெளசல்யா தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கெளசல்யா, என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முதன்மையாக கொலை வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை குற்றவாளிகளை சிறையிலையே வைத்திருந்தது அறிதிலும் அறிது. அந்த வகையில் என் வழக்கை தனித்துவத்தோடும், சாதிய பின்புலத்தோடும் நீதித்துறை அனுகியுள்ளதாகவே நான் கருதுகிறேன். இதுவும் இனிவரும் சாதிய கெளரவ வழக்குகளுக்கு நல்ல முன்னுதாரனமாக அமையும் என்று நம்புகிறேன். அதிலும் அதிகப்பட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை…

Read More

“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா  சந்திப்பு: வெய்யில் – படங்கள்: எல்.ராஜேந்திரன் – வீ.சதீஷ்குமார் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம். தாமிரபரணிப் படுகொலை நடந்த இடம், ஆற்றில் தூண்டில்களை வீசிவிட்டு மீன்களுக்காகக் காத்திருப்பவர்கள் எங்களையும் விநோதமாகப் பார்க்கிறார்கள். அந்த இடம் எல்லாவகையிலும் உரையாடுவதற்கு ஏற்றதாக இருந்தது.  “உங்களது குடும்பப் பின்னணி மற்றும் நீங்கள் இலக்கியத்திற்குள் நுழைந்த கதையைச் சொல்லுங்கள்?”  “தாய் எம்.என். ரத்தினம்மாள், தந்தை எஸ்.கே. மாரியப்பன். இவர்களின் ஏழு பிள்ளைகளில் நான் தலைச்சன். பாரூர், கம்பைநல்லூர் ஈச்சம்பாடி, ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி, உத்தமசோழபுரம் என நான்கு ஊர்களோடு தொடர்பு உடையதாக எங்கள் குடும்பம் இருந்தாலும், சொந்த ஊர் எது என்பதில்…

Read More

(*சூ – சூடாமணி நிகண்டு *தி – திவாகர நிகண்டு *நா – நாமலிங்காநுஸாசநம் நிகண்டு *பி – பிங்கல நிகண்டு *ம – மணிமேகலை *வே – வேறுநூல்கள் ) 1) அகளங்கமூர்த்தி – சூ. 2) அகளங்கன் – தி. 3) அண்ணல் – சூ. தி. 4) அத்வயவாதி – நா. 5) அநந்தலோசனன் – தி. 6) அர்க்கபந்து – நா. 7) அரசுநிழலிருந்தோன் – சூ. 8) அருங்கலைநாயகன் – தி. 9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி. 10) அருளறம்பூண்டோன் – ம. 11) அறத்தகைமுதல்வன் – ம. 12) அறம்பகர்ந்தகோன் – வே. 13) அறவாழியாள்வோன் – ம. 14) அறவியங்கிழவோன் – ம. 15) அறவோன் – ம. 16) அறிவன் – பி. 17) ஆதி – சூ. தி. 18) ஆதிதேவன் – சூ. 19) ஆதிபுங்கவன் -…

Read More

மனிதர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம் …. ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் கடந்து போகலாம் …. ஆனால் வரலாறு படைக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஜாம்பவாண்களும் – ஞானிகளும் பேரேடுகளும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் , இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று . டாக்டர் அம்பேத்கர் மாகாராஷ்ர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 –ஆம் நாள் ராம்ஜி –பீமாபாய் ஆகியோருக்கு 14 – வது குழந்தையாகப் பிறந்தார். மகர் இனத்தில் பிறந்தவர்கள் ராணுவத்தில் பணி புரிய மறுக்கப்பட்டதால் , அம்பேத்கரின் தந்தை ராணுவப்பணியை விட்டு வெளியேற்றப்பட்டார் . கிராமத்தில் இருந்தால் பிற்போக்கு சாதிய பாகுபாடுகளில் சிக்கி தவிக்க வேண்டுமென்று நகர்புரத்திற்கு குடிபெயர்ந்தார். அம்பேத்கர் படித்து மேல்நிலைக்கு வர வேண்டுமென்று தந்தை ராம்ஜீ ஆசைப்பட்டார் . மகன் படிப்பதற்காகவே தனி அறை ஒதுக்கி விடியும் வரை…

Read More