Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
தீண்டப்படாத இந்துவாய்ப் பிறந்தது என் அவலம்; ஆனால் இந்துவாய் இறக்கமாட்டேன் பத்தாண்டு கால இடையறாத சமூகப் போராட்டத்தின் பின்னணியில் இன்றைய அரசியல், சமூக நிலைமைகளை மீள்பார்வை செய்யும் நோக்கில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மாநாடு ஒன்றை 1935, ஞாயிற்றுக் கிழமையன்று, நாசிக் மாவட்டம் இயோலாவில் நடத்தத் தீர்மானித்தார். 1935, அக்டோபர் 12 சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் நாசிக்கை அடைந்தபோது, அவர் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு பெரும் ஊர்வலத்துடன் நகரத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், நாசிக் நகரில் ஒரு நூலகத்தை அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “தன்னுதவியில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். உங்கள் மேம்பாட்டுக்காக உங்கள் சொந்தக் காலில் நின்று நீங்கள் போராட வேண்டும். பேரிடர் ஏதும் நிகழ்ந்து நான் இறக்க நேரிட்டாலும் எனக்குப் பின்னர் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல இயலவேண்டும்”. இரவிவார் பேட்டை ஹீராலால் சந்தில்…
“நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது கருத்தும் சத்திய சாதனமுமாகும்” -க. அயோத்திதாசர் இயற்கை சக்திகளான இடி, பெருமழை, வெள்ளம் போன்றவற்றைக் கண்டு பயந்து நடுங்கிய ஆதி மனிதன், இவற்றை எல்லாம் கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொரு மாயசக்தி அந்தரத்திலிருந்து இயக்குவதாக நம்பினான். அந்த சக்திக்குப் பணிந்து வழிபடுவதால் அதன் கோபத்தைத் தணித்து அவ் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பித்து வழலாம் என்ற நம்பிக்கையிலிருந்து மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை உருவானது என்கின்றனர் லோகாயதவாதிகள். மதம் என்றால் அது கடவுள் வழிபாடு, சடங்குகள், பிரார்த்தனைகள், மந்திர தந்திரங்கள், பேய் -பிசாசு-ஆவிகள் பற்றிய கதைகள் என்ற மூட நம்பிக்கைகளாலான சமூக நிறுவனமாக கருதப்படுகிறது. “மனிதனின் குறுகிய எண்ணங்களிலிருந்து மதம் பிறந்தது” என்றார் ஏங்கல்ஸ். இயக்க இயல் பொருள்முதல் வாதம் எனப்படும் மார்க்சிய மெய்ஞ் ஞானம் ‘மதம் மக்களுக்கு அபின்’,…
தலித் பெண்கள் 4 ஆதிக்கங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், எவிடென்ஸ் கதிர். அதிலிருந்து தப்பும் வழியும் சொல்கிறார். கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, ஆணவக் கொலைகள் என அனைத்து வடிவங்களிலும், தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படும்போது அவர்கள் நொறுங்கி போகின்றனர். அவர்கள் தங்களுக்கான நீதியை பெறுவதற்கும், அதனை நோக்கிய பயணங்களுக்கும், நடைமுறைகளுக்கும், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட அந்த நொடியிலிருந்து மனதளவில் துவங்க வேண்டும். சாதிய வன்கொடுமைகள் நிகழும்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தொடர்பு கொள்ளும் நபர் ‘எவிடென்ஸ்’ கதிர். இவருக்கு அறிமுகம் தேவையிருக்காது. தலித்துகள் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும்போது, ’எவிடென்ஸ்’ குழுவுடன் சென்று அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குவார், அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை. தான் எழுதிய ‘சாதி தேசத்தின் சாம்பல் பறவை’ புத்தகத்தின் வெற்றி விழா மற்றும் தலித் எழுச்சி முன்னெடுப்பு விழாவுக்காக சென்னைக்கு வந்த ’எவிடென்ஸ்’ கதிரிடம், அவருடைய செயல்பாடுகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து பேசினோம். தாம்…
ஆர்ய வைஸ்யர்கள் பற்றிய தனது புத்தகம் குறித்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக தலித் சிந்தனையாளர், எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா போலீஸ் புகார் அளித்துள்ளார். “நான் ஏன் இந்து அல்ல” என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியரான காஞ்சா அய்லய்யா ஓஸ்மேனியா பல்கலைக் கழக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Samajika Smugglurlu Komatollu (வைஸ்யர்கள் சமூகக் கடத்தல்காரர்கள்) என்ற புத்தகம் தொடர்பாக காஞ்சா அய்லய்யாவுக்கு தொடர்ந்து வசை போன்கால்களும், மிரட்டல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இவரது புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆர்ய வைஸ்ய சஙக்த்தினர் இந்தப் புத்தகத்தில் தங்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்தினர். மிரட்டல் குறித்து காஞ்சா அய்லய்யா கூறும்போது, “நான் பயங்கரமாக அச்சுறுத்தப்படுகிறேன். தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. தெருக்களில் எனக்கு எதிராக பயமூட்டும் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
Kin of 35-year-old Muthalagan, a dalit activist from Madurai, believe he could have escaped the sickle, had he not nurtured the dream of becoming an MLA someday — a goal which had him take the liquor mafia of his village head on, but ended prematurely on June 28 this year when he was hacked to death. Muthalagan may have been a target of upper caste who are alarmed over the rising tone of protest among dalits against injustice, says A Kathir. A recent report released by Kathir’s Madurai-based NGO, Evidence, lists out case studies of 27 young SC/ST men from across the…
“ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’ தீண்டத்தகாதோர் யார்?’ என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். : “தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய மேன்மைமிகு நடத்தையாலும், நற்பண்புகளாலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற துறவிகளான நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளா ஆகியோரின் நினைவிற்கு…” குரு ரவிதாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில் 1433 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா, குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற மிக எளிமையான பெண். ரவிதாஸ் காலத்தின் சமூகத்தில் கொடுமையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பின் காரணமாகவும், தீண்டாமை வழக்கங்களாலும் பெரும்பான்மை மக்கள் பெரிதும் வேதனைகளை அனுபவித்து வந்தனர். அதிலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களே. சமூக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, சாதி அடிப்படையிலான கடும் கட்டுப்பாடுகளால் அவர்கள் மிருகங்களை விட மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்த சூழலில், செருப்பு தைக்கும்…
எழுத்துப் பதிப்பகம் அலெக்ஸ் என்றறியப்பட்ட வே.அலெக்ஸ் நோயுற்றிருந்த நிலையில் கடந்த வாரம் மதுரையில் மரணமடைந்தார். தலித் கலை, இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்து முக்கியமான பங்களிப்புகளை வழங்கியிருப்பவர் அவர். அந்த வகையில் அவரைப் பற்றி பலவற்றைக் கூற முடியும். எனினும் பதிப்பாளர் என்ற அவரின் அடையாளம் முதன்மையானது. பதிப்பாளராக அவர் வெளியிட்ட நூல்கள் குறைவானவை என்றாலும் வெளியிட்ட நூல்களின் உள்ளடக்கம் என்ற வகையில் அந்நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. தலித் வரலாற்று வரிசை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் 2009-ம் ஆண்டு அவர் வெளியிட்ட நான்கு நூல்கள் தலித் வரலாற்றியலின் இடைவெளிகளை இட்டுநிரப்ப உதவியதோடு நவீனத் தமிழ் அரசியல் வரலாற்றையும் புதுப்பித்துப் பார்ப்பதற்குப் பயன்படக்கூடியவையாக இருந்தன. பஞ்சமி நில உரிமை – முதல் தொகுதி, எம்.சி.ராஜா சிந்தனைகள் – முதல் தொகுதி, தலித் மக்களும் கல்வியும், தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும் ஆகிய நான்கு நூல்களே அவை. இந்நான்கு நூல்களுக்குமே சில…
அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள் தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற அவள் வீடு பறத்தெருவிலிருந்தது. ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள் அவளது தெருவிலிருந்து அவளது படிப்பை கெடுக்கவில்லை பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு என்று பறையன் அப்பா சொல்லவில்லை படிச்சு கிழிச்சது போதும் என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை அடக்கமா ஒடுக்கமா இருன்னு பறைச்சி பாட்டி சொல்லவில்லை படிப்புதான் நமக்கு எல்லாமே என்று எல்லா பறையர்களும் தமது பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான் அனிதாவின் வீட்டிலும் அவளிடம் சொன்னார்கள் பறையிசை கேட்டபடிதான் அவள் பள்ளிப்பாடம் படிப்பாள் மாட்டிறைச்சி தின்றவள்தான் கணக்கில் 100 மார்க் எடுத்தாள் டாக்டர்தான் ஆவேன் என்று வைராக்கியமாய் நின்றாள் அம்பேத்கரின் பேத்தியவள் ஜெய் பீம் சொல்லிவிட்டுத்தான் சென்றாள் அனிதா தமிழர் எல்லோருக்குமான பிணமாக மாறுவதற்கு முன்பு ரத்தமும் சதையுமான எனது தங்கையாய் கண்களில் தீப்பந்தம் மிளிர பறத்தெருவில் கம்பீரமாய் வளையவந்த பறைச்சியாய் இருந்தாள் – ப. ஜெயசீலன்.
சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு – அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது கடினம்… …அரசியல் எண்ணமுள்ள இந்தியர்கள், முன்பு ‘இந்திய மக்கள்’ என்று சொல்வதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘இந்திய தேசம்’ என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப்…
பெரும்போரின் நடுவேயும் அமைதி குறித்த ஓர் உணர்வு தோட்டாக்கள் அதன் இலக்குகளைக் கண்டு கொண்டபோது காலம் அதைத் தானாக நிறுத்தியது. பீரங்கிகளிலிருந்து வெடித்தெழும்பிய முழக்குகள் காற்றை நிறைத்து மௌனத்திற்கு அப்பால் அவற்றை எதிரொலித்தன. பெருங்கதறல்கள் நம்பிக்கையழிந்து வெளிப்பட்ட போது உண்மையையும் வழிகாட்டலையும் நாங்கள் தேடினோம் இவையனைத்தும் நடந்த போது அந்த நாள் கடந்து போனது அதுவே தீமைகள் அழிந்த நாள். பேரச்சத்தினூடான பெருந்துணிவில் எப்படியோ நாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தோம். மீண்டுமொருமுறை பாதுகாப்பை யாசித்த தருணத்தில் எமது நன்னம்பிக்கைகள் மறைந்து போயின. உயிரழிந்து ஆன்மா மரணித்தது எங்களது உடலில் ஆயினும் எங்களுக்கான வாக்குறுதிகள் அதில் பொதியப்பட்டன நிகழ்காலத்தை கடந்து செல்ல நாங்கள் இறைஞ்சிய பின் கண்மூடி நாங்கள் உறங்கப் போனோம். இவையனைத்தும் நடந்த போது அந்த நாள் கடந்து போனது அதுவே தீமைகள் அழிந்த நாள். பணக்காரர்களின் எல்லா வேண்டுதல்களையும் ஏழைகள் நிறைவேற்றிய போது எங்கள் இதயம் விம்ம ஆரம்பித்தது. உண்மைகளின்…