Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
வரலாறு யாவும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் என்றார் கார்ல் மார்க்ஸ். அதை நமது நாட்டுக்குப் பொருத்திப்பார்த்தால் ‘இந்திய வரலாறு என்பதே சாதிப் போராட்டங்களின் வரலாறு’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு இந்திய சமூகத்தை நிர்ணயிக்கும் அம்சமாக இன்றும் சாதி என்பது செயல்பட்டுவருகிறது. நாம் கௌரவக் கொலைகளின் காலத்தில் வாழ்கிறோம். சாதிப் போராட்டங்களின் தொகுப்பாக விளங்கும் இந்திய வரலாற்றில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் தவறாமல் இடம்பெற வேண்டிய நிகழ்வு பூனா ஒப்பந்தம். 1932- செப்டம்பர் 24-ம் தேதி பூனாவில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைதான் ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது. தமது பிரதிநிதிகளைத் தாங்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகுக்கும் வகுப்புவாரி உரிமையை தலித் மக்கள் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வாதாடிப் பெற்றனர். முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் முதலானோருக்கு அதற்கு முன்பே அத்தகைய உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தலித் மக்களுக்கு அதை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த காந்தியடிகள்…
கலைக்கு ஏது சாதி? ஆனால் இந்தியாவில் அதுதான் நடக்கிறது. மானுட அனுபவம் எனில் எல்லாமே அனுபவம் தானே? உணர்வுகளின் தூல நிலையில் சாதியடையாளம் இருக்கிறதா? இருக்கிறது என்று வீம்பு பிடிக்கிறது இந்தியத் திரைப்படம். அந்த வீம்பை உடைத்திருக்கிறது ஃபான்ட்ரி திரைப்படம். [quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]இங்கே மேல்நிலையிலிருந்து இடைநிலைச்சாதி வரையிலானவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி படங்களை எடுத்துவிடலாம்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தக் கூச்சமும் இன்றி காட்சிகளையும், உரையாடல்களையும் வைக்கலாம்; ஆனால் ஒரு தலித் படத்தை மட்டும் எடுத்துவிட முடியாது.[/quotes] இங்கே மேல்நிலையிலிருந்து இடைநிலைச்சாதி வரையிலானவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி படங்களை எடுத்துவிடலாம்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தக் கூச்சமும் இன்றி காட்சிகளையும், உரையாடல்களையும் வைக்கலாம்; ஆனால் ஒரு தலித் படத்தை மட்டும் எடுத்துவிட முடியாது. ஒருவேளை அப்படி ஒரு படம் எடுக்கப்படுமாயின், அது ஒப்புதல் வாக்குமூலமாகிவிடுமோ, சாதியதிகாரத்துக்கு எதிரான கலகத்துக்கு வித்திட்டுவிடுமோ என்று பயப்படுகிறார்கள் போலிருக்கிறது. இந்த விவசாயத்தில் திரைப்படத் துறையிலிருக்கும்…
தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி “கால்டுவெல்லின் இருநூறாவது பிறந்த தினமான மே 7-ம் நாள் அவரைப் போற்ற வேண்டும்” என்று மே 4-ம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தமிழ், திராவிடன் போன்ற அடையாளங்கள் உருவாக கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற நூல்தான் வித்திட்டது என்கிற வகையில் அதன் ஆசிரியரான கால்டுவெல்லை கருணாநிதியின் இந்த அறிக்கை நினைவு கூறுகிறது. குறிப்பான பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் தங்களை எல்லோருக்குமான அமைப்பாகவும் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பும் யாரும் பயன்படுத்துவதாக தமிழ் அடையாளம் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தமிழ் இங்கொரு சமய நம்பிக்கையின் இடத்தைப் பிடித்திருக்கிறது. கால்டுவெல்லின் கருத்துகள் மீது எதிரும் புதிருமான பல்வேறு பார்வைகள் வந்துவிட்ட நிலையிலும், அதைக் கணக்கிலெடுக்காமல் பழைய தமிழ் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே கருணாநிதியின் கால்டுவெல் பற்றிய அறிக்கை அமைந்திருந்தது. அதேவேளையில் கருணாநிதியின் தமிழ் உரிமை கோரல்களை எதிர்கொள்ளவும் தன்னை அவ்விடத்தில் நிறுவிக் கொள்ளவும் அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா…
நூற்றாண்டு பெருமை கொள்ளும் திராவிட அரசியலின் தோற்றுவாய்க்கும், காங்கிரஸ் – பொதுவுடைமை மற்றும் இன்ன பிற கட்சிகளின் சமூக – அரசியல் வளர்த்தெடுப்புக்கும் கடந்தகால தலித் தலைவர்கள் புடமிட்ட தலித் அரசியல் ஒரு காரணம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டில் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது. இன்றைய தமிழ்த் தேசிய – திராவிட அரசியலின் கருத்தியல் வளர்ச்சிக்கு பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி. ராஜா, சத்தியவாணிமுத்து போன்றோர் செய்த பங்களிப்பை திராவிட அரசியல் வரலாறு இருட்டடிப்பு செய்த போதிலும் தலித் எழுச்சியானது அதனை சுட்டிக்காட்டத் தவறியதில்லை. எனினும் இதுகாறும் வரலாற்றின் ஊடாக கட்டியெழுப்பபட்ட தலித் அரசியலின் இலக்குகள் தேர்தல் களத்தில் திராவிட அரசியலால் வீழ்த்தப்படுவதைக் காணும்போது சமகால தலித் அரசியல் வார்த்தெடுப்புகளின் ஒரு அங்கமான தலித் கட்சிகளின் “அரசியல் அதிகாரம் கோறும் நிலை” கடந்த காலத்தில் களமாடிய தலித் அரசியல் போராட்டங்களை கேலிக்கூத்தாக்குகிறது. தமிழைக் காட்டியும், சாதிவாரி தொகுப்பை முன் நிறுத்தியும் மிகு…
பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார். [dropcap]சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகியத் துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாயிருந்தது. 1912 லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகை களிலும், சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகை யான அரிய கட்டுரைகளை எழுதி புகழ் பெற்றார்.[/dropcap] இவர் 1890-இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலே…
டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ் பங்கேற்று அவர் தெரிவித்த பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன். —————————————- நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை…
தி.பெ.கமலநாதன்: தலித் வரலாற்றின் மீட்பர் – ரவிக்குமார் தமிழக தலித் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்ந்த தி.பெ.கமலநாதன் மறைந்து விட்டார். 1923ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் ஏ.பி.பெரியசாமி புலவருக்கும், கனகபூஷணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கமலநாதன் தனது எண்பத்து நான்காவது பிறந்த நாளில் (04.11.2007) சென்னையில் காலமானார். அவருக்கு டாக்டர் தவமணி (74) என்ற மனைவியும், வித்யா ராஜேந்திரன் (39), டாக்டர். சுமித்ரா முருகன் (33) என்ற இரு மகள்களும் உள்ளனர். ‘வரலாற்று நூல்களைக் கையில் வைத்திருக்கும்போது கடந்த காலத்தையே நாம் கைக்குள் வைத்திருப்பதுபோன்ற மாயையில் நாம் இருக்கிறோம்.ஆனால் வரலாறோ நமது விரல்களுக்கிடையே நழுவிக்கொண்டிருக்கிறது அல்லது நமக்கு எட்டாத இடத்தில் இருக்கிறது’ என்றார் ரோபர்ட் டார்ன்டன் என்ற வரலாற்றறிஞர்.ஆனால் அதை இன்னும் நமது வரலாற்றாளர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.நமது ‘சிந்தனையாளர்களோ‘ தலித் மக்களுக்கென ஒரு வரலாறு இருக்கிறது என்பதையே ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களுக்கு கமலநாதன் என்று ஒருத்தர் இருந்ததோ, இறந்ததோ பொருட்படுத்தத்…
2012 நவம்பர் மாதம் 12 ஆம் நாள் முதல் தருமபுரியை மையமாக வைத்து சாதி வெறியர்கள் கட்டவிழ்த்து விட்ட வெறியாட்டங்களை எந்தவித மனசாட்சியும் இன்றி தமிழகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சினிமாக்களில் காதலர்களைக் கொண்டாடும் இளையோர் கூட்டமும் காதலின் பெயரால் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஈழத்தில் கொல்லப்படும் மக்கள்தான் தமிழர்கள் என்று அவர்கள் கண்டுபிடித்த காரணத்தினால் தமிழகத்தில் தமிழர்கள் இல்லை மாறாக எல்லோரும் சாதியர்களாக இருக்கிறார்கள் என்று அமைதியாக இருந்தார்கள். வடதமிழகம் சாதி வெறிபிடித்தவர்களால் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. மக்களின் மனசாட்சி சாதியத்தினால் மறத்துப்போன நிலையில் இளவரசன் திவ்யா காதல் நிர்க்கதியாக நின்றது. சாதி வெறிபிடித்த வன்னியர்களின் கையில் அவர்களது காதல் கதறியழுதது. யாரும் மனம் இறங்கவில்லை.. ராமதாசின் அடிவருடிகள் குரூரத்தின் உச்சத்தில் கொட்டம்போட்டார்கள். அவர்களுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல திவ்யா நீதிமன்றத்தில் நான் இளவரசனுடன் வாழ விரும்புகிறேன் என்று சொன்னார். ஆனால் திவ்யா வாழ விரும்புவதை…
கிழக்கு கடற்கரை சாலையில் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ளது மரக்காணம். சாலையில் ஒரு பக்கம் உப்பளங்கள். மறு பக்கமோ கண்ணீர் கடலாக காட்சியளிக்கிறது இப்போது. மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர்களின் குடும்பவிழாவுக்கு வந்தவர்களால், மரக்காணம் கட்டையன் தெருவில் உள்ள குடும்பங்கள் இன்று குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து சித்திரை முழுநிலவு விழாவுக்கு வந்தவர்கள் வழிநெடுக ஆடிய தாண்டவத்தையும் செய்த அட்டகாசங்களையும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் காண முடிந்தது. மகாபலிபுரம் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் வாசலில் திருமாவளவன், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு கரிபூசப்பட்டிருக்கிறது. இதைத்தான் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ‘தேசிய தலைவர்களின் படங்கள் அவமதிக்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டார். புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரம் கடற்கரை கோயிலின்மீது ஏறி நின்றுகொண்டு அங்கும் கொடிநாட்டியவர்களின் மேல் தொல்பொருள்துறையின் வழக்கு பாய்ந்திருக்கிறது. பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்களின் உச்சிகளில் வன்னியர்…
பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 6 இந்து மதத் தத்துவம் உள்ளடக்கம் பக்கம் எண் பகுதி – 1 இயல் 1. இந்துமதத்தத்துவம் பகுதி 2 இந்தியாவும் பொதுவுடமைக்கான முற்படு தேவைகளும் 5 இயல் 2 : இந்து சமூக அமைப்பு – அதன் இன்றியமையாக் கோட்பாடுகள் 129 இயல் 3 : இந்து சமூக அமைப்பு – அதன் தனித்தன்மைகள் 157 இயல் 4: இந்து மதத்தின் அடையாளங்கள் 177