Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
ஆசிய ஜோதி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை Asiya Jothi Kavimani Desiga Vinayagam Pillai Translations from “Light of Asia” by Sir Edwin Arnold 1879 முன்னுரை 2015 Preface 1. புத்தர் அவதாரம் 2. அருள் உரிமை 3. காதல் பிறந்த கதை 4. சித்தார்த்தன் கேட்ட தேவகீதம் 5. சித்தார்த்தன் துறவு 6. புத்தரும் ஏழைச் சிறுவனும் 7. கருணைக் கடல் 8. புத்தரும் சுஜாதையும் 9. புத்தரும் மகனிழந்த தாயும்
வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் திட்டங்கள், பிற அரசியல் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்த அடிப்படைகள் ஆகியவற்றை விளக்க முற்பட்டிருக்கிறோம். கட்சியின் கோட்பாடுகள் 1. பொது செயல் முறைகளில் கட்சியின் செயல்பாடுகள், கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் அமையும் : (i) சட்டத்தின் முன் இந்தியர்கள் அனைவரையும் சமமெனக் கருதுவதோடு, அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதும், அப்படி சம உரிமை இல்லாத இடங்களில் அதனை…
125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள்? நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என அளவிடுவோம். ஆனால், `அம்பேத்கரை மதிப்பிடும்போது மட்டும் இந்த விதியைத் தலைகீழாக மாற்றவேண்டும்’ என்கிறார் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா. `நம் காலத்தைக்கொண்டு அம்பேத்கரை மதிப்பிடவேண்டியது இல்லை. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு நாம் வாழும் சமூகத்தை நாம் மதிப்பிடவேண்டும்’ என்கிறார் அவர். அவ்வாறு செய்யும்போது அம்பேத்கரின் உருவம் மிகப் பிரமாண்டமாக நம் முன்னர் எழுந்து நிற்கிறது. `தலித் தலைவர்’ என்று மட்டும் அல்ல, `இந்தியத் தலைவர்’ என்றும்கூட இனி அவரை நாம் குறுக்கிவிட முடியாது. முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபை, அம்பேத்கரை ஓர் உலகளாவிய ஆளுமையாக அங்கீகரித்து, அவருடைய 125-வது பிறந்த தினத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடியிருக்கிறது. `அவர் காலத்தைவிட இன்றுதான் அம்பேத்கர் நமக்குத் தேவைப் படுகிறார்’ என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க். `ஆப்பிரிக்க அமெரிக்கர்களின்…
சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா அம்பேத்கர் சந்தித்த விபரம் கேளுங்கடா…. இந்துத்துவ கொள்கை பிறந்தது நாகபுரி மதமாற்ற போர் தொடங்கியதும் நாகபுரி இருண்ட சிறைதானே….. இந்துமதம் அதில் இருக்கும் காலம் வரை… ஏது சுதந்திரம் சிறையை தகர்த்தி விட இலக்கை கண்டறிந்தார் மதமாற்றம் என்ற ஆயுதத்தை எடுத்தார். இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகேன் சபத்த்தை நிறைவேற்ற சமயங்களை ஆய்ந்தார் கிருத்துவம் தவறென்றார் இசுலாம் குறை என்றார் பவுத்த மார்க்கம் ஒன்றே விடுதலை தருமென்றார் அம்பேத்கர் தலைமையிலே ஐந்து லட்சம்பேர் தீக்சா பூமியிலே தழுவினர் பவுத்த நெறி அம்பேத்கர் தொடங்கி வைத்த யுத்தம் தொடர்கிறது மதமாற்றப் போரில் சேரிகள் திரள்கிறது மதமாறுவதாலே நன்மை ஏதுமுண்டோ என கேள்விகள் கேட்டவர்களுக்கு எதிர் கேள்வியை கேட்டார் இந்திய சுதந்திரத்தால் எமக்கென நன்னை என்றார் சுயமரியாதை பெற மதமாற்றமே தீர்வு என்றார் மதமாற்றம் நடந்தால் பெயர்கள் மாறிவிடும் பெயர்கள் மாறுவதால் உறவுகள் வேறுபடும் உறவுகள் வலுவடைந்தால்…
இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது. இந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முரையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி…
வெல்லமுடியாதவர் அம்பேத்கார் – பாடிக்கொண்டிருப்பவர் எழுச்சிப்பாவலர் தலித் சுப்பையா அவர்கள்
3.14 உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993. விதிகள். 1997. 3.14.1. உலர கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993. 46வது சட்டம் 1993 ஜுன் 5 1993 இச்சட்டம் உலர் கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளுவதையும் மற்றும் உலர் கழிப்பக கட்டு மானத்தையும் அல்லது இவற்றை தொடர்வதையும் தடை செய்கிறது. மேலும் உலர் கழிப்பக கட்டுமானம் மற்றும் நீருள்ள கழிப்பக பராமரிப்பு மற்றும் இத்துடன் தொடர்புடைய செயல் பாடுகள் அல்லது நிகழ்வுகளை கீழ்கண்டவாறு ஒழுங்கு படுத்துகிறது. முகப்புரை அரசியல் சட்டத்தின் முகப்புரை உத்திரவாதம் அளிக்கப் பட்டுள்ள தனிமனித மாண்பையும் சகாதரத்துவத்தையும், புனிதத்தையும் தருகிறது. அரசியலமைப்பு சட்டம் விதி. 47ன்படி பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை, மக்களின் வாழ்க்கை…
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருநாள்கொண்டச்சேரி கிராமம். பெயரிலேயே சேரியை கொண்டுள்ள இந்த கிராமத்தில், சேரி மக்கள் விலங்கினும் கீழாக நடத்தப்படுகின்றனர். இந்த ஊரில், 20 ஆண்டுகளாக ஊராட்சிமன்ற தலைவராக இருக்கும் வி.ஜே.கே செந்தில்நாதன் என்பவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் செத்த பிணத்தை புதைப்பதற்குகூட அவர்களுக்கு அனுமதி இல்லை. 40 தலித் குடும்பங்களை சேர்ந்த திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் பிணத்தை புதைக்கவேண்டும் என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக 3 கிலோமீட்டர் நடந்து, கடலாழி ஆற்றங்கரைக்கு செல்லவேண்டும். இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை, தலித்துகள் பயன்படுத்தி வந்த பாதையை நாசப்படுத்திவிட்டது. இதனால், கடந்த நவம்பர் மாதம் மரணம் எய்திய குஞ்சம்மாள் என்பவரை, பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம். ஆனால், ஊர்தெரு சாதி இந்துக்கள் பொதுப்பாதையில் பிணம் வந்தால், நீங்களும் பிணமாவீர்கள் என எச்சரித்ததால், பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பிணத்தை புதைக்க…
காலை வணக்கம். இந்தக் கடிதத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் இவ்வுலகை விட்டு நீங்கியிருப்பேன். என் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள். என்னைப் பரிபூரணமாக நேசித்தீர்கள். என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பிரச்சினை எனக்குள்தான் இருக்கிறது. என் உடல் வளர்ச்சிக்கும் ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக உணர்கிறேன். அது என்னை விகாரப்படுத்திவிட்டது. ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். கார்ல் சாகன் போல் ஓர் அறிவியல் எழுத்தாளராக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலைக் கடிதத்தை மட்டுமே. அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் என் விருப்பத்துக்குரியவை. என் விருப்பப் பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் எல்லாம்…
செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடி வாங்குவேன் தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து தெரியாமல் அழுவேன் இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று சுகிர்தராணி