‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினின்றும், மாசுகளினின்றும், பொய்ப்புகல்வதினின்றும், போதை தரும் மதுவருந்தலினின்றும், தவிர்ந்து தற்காத்தவராய், நல்லொழுக்கமும் நன்னடத்தையும் உடையவராய், பேராசையின் கறைகளினின்று விடுபட்ட மனத்தினராய், ஒழுக்க முடையோரை ஏசிப்பேசாதவராய் இவ்வாழ்வு வாழ்வர். உண்மையில், இல்லறத்தோரே‚ இவ்வாறாகவே நனிச்சிறந்த நல்மனிதர் ஒருவர் நனிச்சிறந்த நல்மங்கையுடன் வாழ்கிறார்.”
‘சகோதரர்களே‚ எவர்; தன் சொந்த நலத்திற்காகவும். பிறர் நலத்திற்காகவும் ஆன இரண்டிற்காகவும் உழைக் கிறாரோ அவரைப் பொறுத்தவரை — இந்நான்கு பேர்களிலும் அவரே சிறந்தவர்—- தலையானவர் — உயர்வெய்தியவர் — மேலானவர்; மிக்குயர்ந்தவர்;”.
“பிறர் உண்மை பற்றியும், விடுதலை பற்றியும் தவறானக் கருத்துடையோ ராயிருப்பினும், நீ உண்மையை பற்றியும், விடுதலையை பற்றியும் சரியான கருத்துடனிருக்க வேண்டும்”
‘எழு‚ அசட்டையாயிராதே‚ போதனையின் நல்வழியில் நட‚ போதனை வழி நடப்பவன் உலகெங்கிலும் இன்புறுகிறான்.”