‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழுக்கக் கேட்டினின்றும் தவிர்ந்து கொள்வீர். இரவில் பொருந்தா உணவை ஏற்காதீர்‚”
‘தங்கள் பெற்றோரை நன்கு பேணுங்கள். நல்வழிப்பட்ட வணிகத்தை மேற்கொள்ளுங்கள். இவ்வாறாய் இல்லறத்தார் உயர்நிலை எய்துதற்குரியோராதல் வேண்டும்.”
‘உயர்ந்த எண் மார்க்கப் பாதையிலேயே மிக்குயர்ந்தது நல்நோக்க மாகும். உயர் வாழ்க்கையிலும் அறியாமையிலும் மற்ற அனைத் தினுக்கும் முன்னுரையாகவும் திறவுகோலாக வும் உள்ளது நற்சிந்தனையே ஆகும்.”
‘எனவே நீங்கள் நிற்கையிலும் நடக்கையிலும் இருக்கையிலும், படுக்கையிலும் ஆற்றல்கள் அனைத்தி னோடும் உங்களுக்குள் ஆழமாய் சிந்தியுங்கள்ƒ இதுவே நனிமிகச் சிறந்த நன்னிலை”.
‘பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக, உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக— இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக் கிறோம்ƒ எனவேதான் நாம் போராளிகள் என்று அழைக்கப்படுகிறோம்.”
‘எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள் – வாயடைத்து நிற்காதீர்கள்.”
1 Comment
jay bheem
nami buddhay.
DR.BABA SAHEB AMBEDKAR A GREATEST MAN ON THE EARTH AFTER TATHAGAT BUDDHA.