தண்ணீர் எல்லோருக்குமானது: அம்பேத்கரின் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஒருபார்வை
நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்றே ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் புகழப்பட்டு வருகின்றன. அத்தகைய ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்களுக்கு முன்னோடி திட்டமாக , முதல் பல்நோக்குத் திட்டமாக இருப்பது தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம்!
அப்போதைய பிகார் மாநிலத்தில் (தற்போதைய ஜார்கண்டில்) உற்பத்தியாகி வங்க தேசத்தில் இருக்கும் ஹூக்ளி ஆற்றில் கலக்கும் தாமோதர் நதி, மழைக்காலங்களில் கடுமையான சேதங்களை விளைவித்தது. ஆற்றை சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள் , கிராமங்கள் அதனை சார்ந்த தொழில்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மக்கள் மீண்டும் வர மிகவும் சிரமப்பட்டன்ர். ஒவ்வொரு மழை காலத்திலும் அங்குள்ள மக்கள் கடுமையான சேதங்களை சந்தித்து வந்ததால் தாமோதர் ஆறு, ‘வங்காளத்தின் துக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலேயர்களின் பல் முயற்சிகள் , அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தன.
வெள்ளப்பெருக்கை தடுக்கும் திட்டமாக, பள்ளத்தாக்கு திட்டத்தின் வழிமுறைகளை உருவாக்கும் பொருட்டு கொல்கத்தாவில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போதைய தொழிலாளர் நலத்துறை உறுப்பினரான மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அம்மாநாட்டில், 1944ஆம் ஆண்டில் வங்க அரசாங்கம் நியமித்த தாமோதர் நதி வெள்ளப்பெருக்கு விசாரணைக் குழு தெரிவித்துள்ள யோசனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்று கூறினார். தாமோதர் நதி அணைக்கட்டுத் திட்டத்தின் நோக்கம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவது மட்டுமன்றி, மின்விசை உற்பத்திக்கும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்குவதற்கும் வகைசெய்வதாகவும் இருக்க வேண்டுமென்று அப்போதைய குழு பரிந்துரை செய்தது
இத்திட்டத்தினால் 4,700,000 ஏக்கர் அடி கொள்ளளவு நீர்த்தேக்கம், 7,60,000 ஏக்கர் நிலத்திற்குத் தொடர்ந்த பாசன வசதி அளிப்பதற்கும், நீர்வழிப் போக்குவரத்திற்குமான தேவையான நதிநீர், 3,00,000 கிலோவாட் மின்திறன், 50 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும் மேலும் பல லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அன்றைய தினம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உரையாற்றினார்.
தத்துவம், சமூகவியல், பொருளியல், அரசியல் சட்டம், தொழிலாளர் நலன் என்று விரிந்து பரந்த அம்பேத்கரின் அறிவுசார் பங்களிப்பில் நீர் மேலாண்மையும் ஒன்று. அம்பேத்கர் அமைச்சராக பதவியேற்கும் வரை இந்தியாவில் நீராதாரக் கொள்கை தெளிவாக இல்லை. தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாகாணங்கள் நீரைத் தேக்குவதற்கு அல்லது வெள்ளத் தடுப்புக்காக அணைகள் கட்டிக்கொண்டன. “மனிதன் நீரில்லாமையால் தான் பாதிப்படைகிறான், அதிக நீரினால் அல்ல” என்று ஒரு இடத்தில் குறிப்பிடும் அம்பேத்கர் தன்னுடைய இந்த எண்ணத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நீராதாரக் கொள்கையை வடிவமைத்தார்.
இந்தக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்காக அதுவரையில் தொழில்நுட்ப ஆலோசகர்களை மட்டுமே கொண்டிருந்த அமைச்சரவையில், முதன்முதலாக இரண்டு தொழில்நுட்பக் குழுக்களை அமைத்தார் டாக்டர் அம்பேத்கர். 1944-ல் மத்திய தொழில்நுட்ப மின்சார வாரியத்தையும், 1945-ல் மத்திய நீர் வழி, பாசனம் மற்றும் நீர் வழிப் போக்குவரத்து ஆணையத்தையும் உருவாக்கினார்.
பிகாரில் (தற்போதை ஜார்கண்டில்) உற்பத்தியாகி வங்காளத்தில் ஹூக்ளி ஆற்றில் கலக்கும் இந்த நதி ‘வங்காளத்தின் துக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த நதியைக் கட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலேயர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. பல தீர்வுகளை ஆழ்ந்து சிந்தித்த அம்பேத்கர், தாமோதர் திட்டத்தை உருவாக்கும் முடிவுக்கு வந்தார்.
ஒரே வருடத்தில் முழு தொழில்நுட்பத் திட்டமும் தயாரிக்கப்பட்டது. பிறகு இரண்டே வருடங்களில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, மாகாணங்களுக்கிடையேயான அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, அரசியல் சட்ட சபையில் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையம் 1948-ல் உருவாக்கப்பட்டது.
இன்றளவும் மிகப்பெரும் சாதனையாக விளங்கும் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் இந்தியாவில் பன்முகப் பயன்களைக் கொண்ட முதல் நதி நீர்த் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையத்தின் கீழ் இன்று 5 அணைகள், 5 அனல் மின் நிலையங்கள், 3 நீர் மின் நிலையங்கள் இருக்கின்றன. மொத்தம் 2760 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 7 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றன.
இந்திய அரசியல் சட்டக் கூறு 262-ன் மூலம் நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியதோடு, நதி நீர் குறித்து மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினையில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தினார் அம்பேத்கர். மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளில் பொது நன்மைக்காக வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவருவதற்கு ஏழாவது அட்டவணையில் மத்திய அரசு பட்டியலில் பொருள் 74-ஐ புகுத்தினார். ஆனால் அரசியல் சட்டத்தின் இந்தக் கூறுகளை மத்திய அரசு சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு மாநிலம் தன் எல்லைக்குட்பட்ட இடத்தில் உருவாகும் நதியினை மற்ற மாநிலங்களுக்கு பகிராமல் போகலாம் என்ற ஞானத்தின் அடிப்படையில் 1945-லேயே மத்திய நீர் வழி, பாசனம் மற்றும் நீர் வழிப் போக்குவரத்து ஆணையத்தையும் உருவாக்கி, இன்றைய சூழலில் பிரச்சனைகளூயேயும் கூட அந்தந்த மாநிலங்கள் நதி நீர் பங்கீடை செயல்படுத்துவதற்கு வித்திட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 131-வது பிறந்த தினம்.
news j