உன்னத மகிழ்வான வாழ்க்கை
(மகா மங்கள சுத்தம்)
பகவன் புத்தர்.
பகவன் புத்தர் உன்னதமான மங்களங்கள் என்று வகுத்துரைத்த மங்கல உரையின் செய்திகள்:
1. தீயோரின் உறவை விடுத்தல்
(Not associating with fools)
2.நல்லோரின் நட்பை வளர்த்தல்.
(Associating with wise)
3..தகுதிவாய்ந்த பெரியவர்களைப் போற்றல்.
(Reverencing those worth of respect)
4. தக்கப் பிரதேசத்தில் வாழ்தல்.
(Residence in a suitable locality)
5. நற்பலன் தருகின்ற செயல்களை புரிந்து இருத்தல்.
(Having made merit in the past)
6.நேர்மையான வழியில் தன்னை நடத்தி வருதல்.
(Once mind properly directed)
7. ஆழமான ஞானம்,
(Profound learning)
8.நேர்மையான தொழில்திறன்,
( proficiency in once work)
9.கற்றறிந்த விநயம்,
(The learned moral discipline)
10.இனிய வாக்குடைமை
(Gracious kindly speech)
11. தாய் தந்தையரைக் காப்பாற்றுதல் .
(Giving support to parents)
12.மனைவி மக்களைக் காப்பாற்றுதல்
(Cherishing wife and children)
13.குற்றமற்ற தொழிலில் ஈடுபடுதல்
(Business pursuits peaceful and free from conflicts)
14. தானம் அளித்தல்
(Acts of giving )
15.நெறிப்படி வாழுதல்
(Conduct according to the Dhamma)
16..உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்தல்.
(Helping one’s relatives)
17. குற்றச் செயல்களிலிருந்து விலகுதல்.
(Blameless actions )
18. தீமையை புறக்கணித்தல்
(Shunning evil)
19.தீமையை விலக்குதல்
(Abstaining from evil )
20. போதைப்பொருட்களை விரும்பாமை.
(Refraining from intoxicants)
21. நன் மார்க்கத்திலிருந்து விலகாமை.
(Diligence in practice of what is Dhamma )
22. நல்லோரை வணங்குதல், பணிவு,
(Reverence humility)
23.திருப்தி,(நிறை உடைமை)
(போதுமென்ற மனம்)(மனநிறைவு)
(Contentment)
24.செய்நன்றி அறிதல்,
(Gratefulness)
25.உற்ற காலத்தில் நற்போதனை கேட்டல்.
(Timely hearing of Dhamma)
26. பொறுமை
(Patience)
27.திருத்தப்படும் போது சாந்தம்பேணல்
(Meekness in corrected)
28.அறவோர் தரிசனம் ( meeting seeing monks)
29..தக்க காலத்தில் விவாதித்தல்.
(Discussing the Dhamma at the proper time)
30.தவம் புரிதல்.(உற்சாகமான சுயக்கட்டுப்பாடு)
(Energetic self restraint)
31. பிரம்மச்சரியம் காத்தல்.(புனிதமான மற்றும் தூய வாழ்க்கை)
(Holy and chaste life)
32. நான்கு வாய்மைகளை தரிசனம் செய்தல்.
(Inside into the Nobel Truths)
33..நிப்பாணப் பேரின்பம் அடைதல்
(Realisation of Nibbana)
34. இரு வினைகளால் இந்த உலகம் அழுத்தப்பட்டு இருந்தாலும் யாருடைய மனம் கலங்காமலும் துக்கம் இல்லாமலும் களங்கமற்றும் பாதுகாப்புடன் இருக்கிறதோ அது உன்னதமான மங்களம்.
(A Mind unshaken ups and downs of the life)
35. துக்கத்தில் இருந்து விடுபட்டு இருத்தல்(Freedom from sorrow)
36. பேரார்வத்தின் அசுத்தங்களிலிருந்து விடுதலை
(freedom from defilements of passion)
37. முழுமையான பாதுகாப்பு நிலை மனம் பெறுதல்
(perfect security)
38.இவை யாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டவர்கள் எங்கும் தோல்வி அடையாமல் எங்கும் வளமாகச் செல்வார்கள். இவை அவர்களது உன்னதமான மங்களம்.
(Those who have acted in this way cannot be defeated and always live in safety)
(அறிஞர் ஆர்.எல். சோனி அவர்களின் எளிமையான ஆங்கில ஆக்கத்தைத் தழுவியும்(life’s highest blessings-the mahamangala Sutta) வணக்கத்திற்குரிய எஸ். பரம சாந்திதேரோ அவர்களின் முன்னோடி தமிழ்மொழிபெயர்ப்பைத் தழுவியும் எளிய நடையில் இங்கு புத்த பகவன் வழங்கிய மகா மங்கள சுத்தம் வழங்கப்பட்டுள்ளது.)