Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
இப்போது நாம் வழிவகைகளைப் பார்க்கவேண்டும். புத்தர் கூறிய பொது உடைமையை உருவாக்குவதற்கான வழிவகைகள் முற்றிலும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திறவுகோல் அதில் அடங்கியிருந்தது. புதிய நற்செய்தியின் அடிப்படை, உலகம் துக்கமும் துன்பமும் நிறைந்தது என்ற உண்மையாகும். இது கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை என்ற அளவில் இல்லாமல், மீட்சிக்கான எந்தத் திட்டத்திலும் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் கொள்ள வேண்டிய உணமையாகும். இந்த உண்மையை உணர்ந்ததன் மூலம் புத்தர் தமது நற்செய்திக்குத் தொடக்கம் அமைத்தார். தமது நற்செய்தியால் ஏதேனும் பலன் விளையவேண்டும் என்றால், இந்தத் துக்கத்தையும் துன்பத்தையும் நீக்குவதே அதன் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து. இந்தத் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது புத்தர் இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் என்று கண்டார். மனிதனின் துக்கத்திலும் துன்பத்திலும் ஒரு பகுதி அவனுடைய சொந்த தீய…
#பாபாசாகேப் #அம்பேத்கர் கொண்டாடிய #புத்தபூர்ணிமை #விழாக்கள் (அறியப்பட வேண்டிய வரலாறுகள்) தொகுப்பு: முனைவர் க.ஜெயபாலன். டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தைக்கையில் எடுத்ததென்பது மாமன்னர் அசோகர் பௌத்தத்தை கையில் எடுத்தது எந்த அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து சமூக மறுமலர்ச்சியை கொண்டு வர வேண்டியது பல தள மனிதர்களுக்கும் உரிய கடமையாகும். அவ்வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் தனது வாழ்நாளில் கொண்டாடிய புத்த பூர்ணிமை நிகழ்வுகள் மற்றும் பௌத்த பயணங்கள் குறித்த சில குறிப்புகளை இவண் காண்போம். முன்னோட்டம். (பீடிகை) பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த ஏற்பு என்பது ஒரே நாளில் ஏற்பட்ட முடிவு அல்ல. இவ்வாறாகவே பாபாசாகேப் அம்பேத்கர் பண்டித ஜவஹர்லால் நேரு அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களுக்கெல்லாம் மூத்தவர்களாக தென்னிந்தியாவில் தோன்றிய பண்டித அயோத்திதாசர், மேலும் இவர்கள்(காந்தியடிகள், நேருஜி, அம்பேத்கர்) காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியார், பொதுவுடமை களத்தில் ஆழமாக நின்றாலும்…
Abstract Why has political representation by Scheduled Castes in post-colonial India failed to improve the lives of the vast majority of this population? One common answer rests on the assumption that caste inequality is upheld by dominant social groups who effectively resist progressive state policy. Others point to the institution of joint electorates: though constituencies are reserved for Scheduled Caste legislators, Scheduled Caste voters form a minority within them; the representatives thus elected are chosen primarily by others, and precisely because they will not challenge the status quo, it is said. But neither of these explanations, I argue, can adequately…
The Poona Pact was signed on 24 September 1932 in Pune. The original document bore the signatures of seven Depressed Class members, including Babasaheb Dr B.R Ambedkar and eleven Caste Hindus. Gandhi was not among the signatoriesThe Poona Pact is a very short document written in a QUASI-LEGAL style. It contained nine points. To a large extent, the Pact further reinforced and augmented the claim that Depressed Classes were a political minority whose interests could not be ignored while drawing up the constitutional future of India.The following is the text of the agreement arrived at between leaders acting on behalf…
“இயற்கையைக் கடந்த தத்துவத்தைப் புறக்கணிப்பதில் புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. அவருடைய முதல் நோக்கம், மனிதனைப் பகுத்தறிவுப் பாதையில் வழிநடத்துவது. அவருடைய இரண்டாவது நோக்கம், உண்மையைத் தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமானவனாக்குவது. அவரது மூன்றாவது நோக்கம், மூட நம்பிக்கைகளின் பலமான மூலத்தை – எதையும் தீர விசாரித்தறியும் உணர்வைக் கொல்லும் தன்மையை – தகர்த்தெறிவது. பவுத்தம் என்பது பகுத்தறிவின்றி வேறல்ல.” – டாக்டர் அம்பேத்கர், “புத்தரும் அவர் தம்மமும்’, பக்கம் : 250
தமிழ்நாடு கண்ட சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் கே. அஷோக் வர்தன் ஷெட்டியின் பெயர் நிச்சயம் இருக்கும். கலைஞர் மு.கருணாநிதியின் சிறப்பான ஆட்சிக் காலகட்டமாகப் பலராலும் சொல்லப்படும் 1996-2001 ஆட்சியில், 1999-2001 காலகட்டத்தில் முதல்வர் அலுவலகச் செயலராக இருந்தவர். நிர்வாகத்துக்கு இணையாக அவருக்குப் பெரும் ஆர்வம் உள்ள இன்னொரு களம் கல்வி. சென்னையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். சென்னை வருமான வரி மாளிகையான ஆய்கர் பவனில் சமீபத்தில் நடந்த பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் கருத்தரங்கில் அசோக் வர்தன் ஷெட்டி உரையாற்றினார். செறிவான அந்த உரையின் முக்கியத்துவம் கருதி ‘அருஞ்சொல்’ அதன் எழுத்து வடிவத்தை வாசகர்களுக்காக இங்கே தருகிறது. – ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் இந்த வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்: “சிலர் சான்றோராகப் பிறக்கின்றனர், சிலர் சான்றோர் நிலையை அடைகின்றனர், சிலர் சான்றோர் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.” இத்துடன் மேலும் ஒன்றைச் சேர்க்க விரும்புகிறேன். அதாவது,…
#ஊர்-#சேரி-#காலனி – மாற்றத்திற்கானத் தருணம். #இதுஒருகட்டுரைஅல்ல பல நூற்றாண்டுகளாக நிகழம் ஓர் அநீதியினைச் சகித்துக் கொள்வதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா? அல்லது ஒரு நாடே தனது மனசாட்சியினைக் கொன்றுவிட்டு அதை கடந்துக் செல்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியமா..?? சாதியின் அடிப்படைகளைப் பற்றி பேசுவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதை எதிர்ப்பதின் மூலம் ஒரு முற்போக்கு அடையாளம் கிடைப்பதால் அதற்கு எப்போதும் ஒருவகை மவுசு இருக்கிறது. இது சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி அரசின் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். சாதியின் மூலத்தினை ஆய்ந்த டாக்டர் அம்பேத்கர் தொடக்கத்தில் ஒரு பேரதிர்ச்ச்சியைக் கண்டார். ஆமாம், அவர் காலத்தில் சாதியை ஆய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எல்லோரும் கவனிக்க மறந்த ஒன்று.. இந்தியாவில் கிராமங்கள் ஏன் இரண்டாக இருக்க்கின்றன? நமது சொல்லில் சொல்வதென்றால் ஊர்-சேரி என ஏன் இரண்டாக பிரிந்து இருக்கின்றன?. இந்தப் பிரிவினை…
காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன? விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் சென்றிருக்கிறார். பிறகு தலை துண்டிக்கப்பட்ட அவரது சடலம் மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறவினரின் வீட்டிற்கு வந்த அவரை, பெண்ணின் சகோதரரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது பிரபாகரன் கைது…
மகிழ்வான வாழ்வுக்கான தேடல் ஏ.பி. ராஜசேகரன் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட ஆங்கில எழுத்துகளும் உரைகளும் 12 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. பல கட்டுரைகள் இன்னமும் மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட வில்லை. அசலான அறிஞர் அவர். மேல்நாட்டு ஆய்வு முறையில் பயின்ற அவர் தமது கருத்துகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் எடுத்துரைத்தார். மறுக்கவே முடியாத ஆதாரங்கள் அவை. இந்தியாவில் தோன்றிய மூல ஆக்கங்களுடன் மேலை நாட்டு அறிஞர்களின் புதிய தத்துவங்களையும் சிந்தனைகளையும் அவர் முழுமையாக கற்றுத்தேர்ந்தார். இந்திய சமூகத்திற்கு மேலை நாட்டு அறிஞர்களின் புதிய தத்துவங்களையும் சிந்தனைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இந்திய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்தார். டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார் எனலாம். சமத்துவம், தனியுரிமை, சகோதரத்துவம் ஆகியவையே ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளாக அவர் பார்த்தார். இவை மூன்றும் ப்ரெஞ்சு புரட்சியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக தோன்றினாலும் அவை பௌத்த சங்கங்களிருந்தும் பௌத்த சமூகத்திடமிருந்து பெறப்பட்டவை என…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் நிறுவ வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் பாபாசாகேப் அம்பேத்கரின் உருவ படத்தை நிறுவ வேண்டும் என அங்குள்ள பட்டியலின அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வந்தனர். இதேபோல அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் வாசிக்க வேண்டும் வலியுறுத்தினர். கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இதை வரவேற்ற பட்டியலின அமைப்பினர், ‘அரசமைப்பு சட்டத்தை எழுதிய பாபாசாகேப் அம்பேத்கரின் படத்தை நிறுவ உத்தரவிடாதது ஏன்?’ என கேள்வி எழுப்பினர். நேற்று முன்தினம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா,…