Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
I 1870 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் குடிமதிப்பு புள்ளி விவர அறிக்கைகளை (சென்சஸ்) குடிமதிப்பு ஆணையர் வெளியிட்டுவருகிறார். இந்திய மக்களின் சமூக, சமய வாழ்க்கை பற்றிய ஏராளமான விவரங்கள், வேறு எங்கும் பெற முடியாத தகவல்கள் இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ளன. 1910 ஆம் வருட குடிமதிப்புக் கணக்குக்கு முன்னர் சென்சஸ் ஆணையர் “மத அடிப்படையில் மக்கட்தொகை” என்னும் ஒரு பத்தியை வெளியிட்டு வந்தார். இந்தத் தலைப்பில் மக்கட்தொகை பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தது: 1.முஸ்லீம்கள் 2.இந்துக்கள் 3.கிறித்தவர்கள் மற்றும் பிறர். ஆனால் 1910ஆம் வருட சென்சஸ் அறிக்கை அதுவரை பின்பற்றப்பட்டுவந்த நடைமுறையிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. முதல் தடவையாக இந்துக்கள் மூன்று தனி வகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர்: i. இந்துக்கள் ii. ஆவி உலகக் கோட்பாட்டாளர்களும் பழங்குடியினரும் iii. தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது தீண்டப்படாதவர்கள். அப்போது முதல் இந்தப் புதிய வகைபாடு முறையே பின்பற்றப்பட்டுவருகிறது. II முந்தைய சென்சஸ்…
இந்திய பொதுக் கருத்தில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும், தலித் மக்கள் மனதில் உருவகிக்கப்படும் அம்பேத்கருக்கும் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றனவா? அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர். அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர். தலித் மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தந்தவர். இப்படித்தான் இந்திய பொதுச் சமூகம் அவரை அடையாளப்படுத்துகிறது. தலித் மக்களில் பெரும்பான்மையானவர்களும்கூட, இப்படித்தான் அவரை நினைக்கின்றனர். சிலரிடம் இன்னும்கூட பல நிலைகள் கீழிறங்கி இருக்கிறது அவருடைய பிம்பம். தலித் மக்களுக்கு சலுகைகளை வாங்கித் தந்தவர் அவர் என்று மட்டுமே அவர்கள் கருதுகிறார்கள். உலகப் புரட்சியாளர்கள் என்று சொன்னவுடனேயே நம் மனதில் தோன்றுகிற லெனின், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, பிரபாகரன் போன்றோரின் வரிசையில் அம்பேத்கரின் முகம் வருவதில்லை. புரட்சி, வீரம் என்கிற சொற்கள் – போரிடுவது, உயிர்களைக் கொல்வது, எதிர் கருத்துக்கு இடமின்றி அடக்குவது, அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற பொருளில் புரிந்து கொள்ளப்படுவதால், அறிவு நிலைப் புரட்சிக்கு அதில்…
வரலாற்றில் மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர் எம்.சி.ராஜா என்று அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய தலித் அரசியல் வரலாற்றில் நட்சத்திரமாக மின்னிய தமிழக ஆளுமை. தலித் அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசப் பண்டிதர் 1914-ல் மறைந்தார். மற்றொரு தலைவர் இரட்டைமலை சீனிவாசன், தென்னாப்பிரிக்கா வில் நிலைகொண்டிருந்தார். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் செயல்பாடுகள் தொடக்க நிலையில் இருந்த காலகட்டத்தில், தலித் அரசியலை, நாடு தழுவிய அளவில் முன்னெடுத்தவர்களில் ஒருவர் எம்.சி. ராஜா. கல்வியின் மூலம் அதிகாரம் எம்.சி.ராஜா ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் ஆரம்ப கால நிர்வாகிகளுள் ஒருவரான மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகன். சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் பிறந்தார். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் பள்ளியிலும், சென்னை கிருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த எம்.சி.ராஜா, பின் அதே இடங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். எளிய முறையில் கற்பிப்பது பற்றி ஆசிரியர்களுக்கு எம்.சி.ராஜா எழுதிய அளவை (Logic Text book)…
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது! ஆணவக்கொலைகளைத் தடுக்க உடனே அவசர சட்டம் இயற்ற வேண்டும்! உச்சநீதிமன்றத்தின் (2018-தீர்ப்பு) வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மைய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியா முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இப்படி தீர்ப்பு வருவதற்கு அரசுத் தரப்பு இந்த வழக்கை சரியாக நடத்தாததே காரணம். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றபோதிலும் உச்சநீதிமன்றத்திலாவது குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர அரசுத் தரப்பு அக்கறை காட்டவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் திருப்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியது. அதில் சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை…
அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர் – கோபால்கிருஷ்ண காந்தி தமிழில்: பி.ஏ. கிருஷ்ணன். அவர் ஒப்பற்றவர், அவர் நினைத்ததைப் பேசுவதற்குத் தயங்கவில்லை. இந்திய தேசீய காங்கிரஸால் அவரைப் புறக்கணிக்கவும் முடியவில்லை, இயக்கத்தில் ஒருவராகக் கொள்ளவும் முடியவில்லை. ஆனால், காலம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தச் சலுகையையாவது அளிக்கும். இந்திய விடுதலைப் போரை பல அங்கங்கள் கொண்ட, வெற்றியடைந்த துன்பியற் பெருநாடகம் என்று அழைக்கலாம். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் சிக்கலான பாத்திரங்களுக்கு ஒப்பானவர்களைக் கொண்ட அது மூன்று காட்சிகளோடு முடிந்தது -திருப்பங்கள் நிறைந்த காட்சிகள். முதலாவது காங்கிரஸின் உந்துதலால் மகத்தான எழுச்சியுற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம். சந்தேகத்திற்கே இடமில்லாமல் இந்திய மக்கள் வெள்ளை ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதில் உறுதியாக இருந்தார்கள் என்பதைக் காட்டியது. அடுத்தது, இரண்டாவது உலகப் போர் பிரித்தானியப் பேரரசைக் கழிந்துபோனதாக ஆக்கிவிட்டது. அதன் தோழமை நாடுகளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இந்தியா விடுதலை அடைவதையே ஆதரித்தன. கடைசியாக அட்லியின் தலைமையில் லண்டனில்…
அம்பேத்கர் பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும் இந்திய பொருளாதாரத்திலும் சமூக அரசியல் தளத்திலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டதே. சுதந்திரம் அடைந்த போது மிகப் பெரும் சிக்கலாக இருந்த பல விஷயங்களைப் பற்றி அம்பேத்கர் தனது உரைகளிலும், எழுத்துக்களிலும் விளக்கியிருக்கிறார். அதில் சமூக அரசியல் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்கு கவனம் கிடைத்தது. ஆனால் இதுவரை அம்பேத்கரின் பார்வைகளும் கவனிக்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவரது வேளாண்மையும், வேளாண் தொழிலாளர்களும். Indian Journal of Economic Society என்ற ஆராய்ச்சி இதழில் 1917இல் அம்பேத்கர் ” இந்தியாவில் சிறு உடைமைகள் அதன் தீர்வும்”(Small holdings in India and its remedies) என்ற ஆய்வு கட்டுரை எழுதி இருக்கிறார். இதில் தற்கால அறிஞர்கள் இந்திய வேளாண் துறையின் மிகப்பெரும் சிக்கலாக குறிப்பிடும் சிறு மற்றும் குறு நிலங்களின் பிரச்சனைகளை பற்றி அம்பேத்கர் 1917லே விளக்கி எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை அவரது இந்திய வேளாண்மை…
உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு அளிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்து அவருக்கு விடுதலை அளித்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இது தொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம் நீதிபதி அலமேலு நடராஜன், குற்றம்சாட்டப்பட்டவர்களில் கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரையும் விடுவித்தார்.…
உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஐகோர்ட் குறைத்துள்ளது. சென்னை:திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிாிழந்தாா். மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக திருப்பூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது. மேலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, உறவினா் பாண்டிதுரை, பிரசன்னா ஆகிய 3 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மரண்…
தமிழ்த் தேசியத்தின் தந்தையும், ‘தமிழன்’ இதழின் நிறுவனருமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். நாம் இன்று பேசும் சமூகநீதி அரசியல், இந்தி ஆதிக்க எதிர்ப்பரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைக் காலத்தே முன்பேசிய முன்னோடி. தமிழ் பௌத்த வரலாற்றை மீட்டெடுத்து, பௌத்த நோக்கில் தமிழ் இலக்கிய நூல்கள் பலவற்றுக்கும் விளக்கமளித்தவர் அயோத்திதாசர். தமிழ் மக்கள் தமது வாழ்வில் கடைப்பிடித்துவரும் திருமணச் சடங்கு, ஈமச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு சடங்குகளுக்கும் கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி முதலான பண்டிகைகளுக்கும் பௌத்த நோக்கில் ஒரு கதையாடலை உருவாக்கியவர். புகழ்பெற்ற சித்த மருத்துவராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ்த் தேசியத்தின் தந்தையும், ‘தமிழன்’ இதழின் நிறுவனருமான அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) பல்வேறு சிறப்புகள் கொண்ட பேரறிஞர். நாம் இன்று பேசும் சமூகநீதி அரசியல், இந்தி ஆதிக்க எதிர்ப்பரசியல் உள்ளிட்ட பல விஷயங்களைக் காலத்தே முன்பேசிய முன்னோடி. அயோத்திதாசரின் பௌத்தம் அயோத்திதாசரின் 175-வது பிறந்த நாளை (20.05.2020) நாம் கொண்டாடும் சூழலில்,…
CHENNAI, JUNE 10, 2020 22:37 ISTUPDATED: JUNE 11, 2020 11:13 IST A screenshot from a viral video showing the body of a Dalit man being lowered from a bridge as caste Hindus had reportedly barred access to lands encroached by them. Photo: Special Arrangement “This is a good moment to challenge the narrative in India also and talk about the age-old repression of Dalits, which is visible even during the COVID-19 pandemic with discrimination denying people aid” Spurred on by U.S. anti-racism protests, Dalit campaigners on June 10 called on India to acknowledge centuries of oppression they have endured and recognise…