Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின் ‘பெருமை’யை நிலைநாட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. அள்ளி அணைத்து, ஆசை ஆசையாய் முத்தமிட்டு, தோளிலிலும் மாரிலும் சீராட்டி வளர்த்த பிள்ளையையே கொடூரமாகக் கொலை செய்ய வைக்கிறது சுய சாதிப் பெருமை. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கெவின் ஜோசப் வரிசையில் சாதியத்துக்கு இரையாகியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த இளம் தம்பதியர் நந்தீஷ் – சுவாதி. பெண்ணின் தந்தையும் உறவினர்களுமே இந்த ஆணவக் கொலையைச் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ். இவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த சுவாதி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த நந்தீஷ், சுவாதி இருவரும் காதலித் துள்ளனர். இவர்களின் காதலுக்கு சுவாதியின் வீட்டினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கடந்த ஆகஸ்ட்…

Read More

பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962 இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு.  அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார். இவர் 1890-இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார்.  தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார்.  இளமையிலே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங் கொண்டிருந்தார் என்பார்கள். 1907-இல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது.  இதற்கு,  தமிழகத்து முதல் பகுத்தறிவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித  க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் சென்னை ராயப்பேட்டையிலிருந்து வெளியிடப்…

Read More

அம்பேத்கர் பிபிசி உரையாடல்: கம்யூனிசமா ஜனநாயகமா? இந்தியாவுக்கு எது பொருந்தும்? (இன்று அம்பேத்கர் பிறந்த நாள். அதனை முன்னிட்டு பிபிசி முன்பு வெளியிட்ட இந்த கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்.) ”இந்தியாவில் ஜனநாயகம் வேலை செய்யாது, காரணம் நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம்.” காணொளிக் குறிப்பு, கம்யூனிசமா? ஜனநாயகமா? அம்பேத்கர் பிபிசிக்கு அளித்த பேட்டி இந்த கருத்தை முன்வைத்தவர் வேறுயாருமல்ல இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவு குழுவின் தலைவராக இருந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். 1953ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சி குறித்தும், சாதி ஒழிப்பு பற்றியும் பல சுவாரஸ்ய விஷயங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார் அம்பேத்கர். முன்னர், நேருவின் இடைக்கால ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றினார் அம்பேத்கர். 1951ஆம் ஆண்டு நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்த அம்பேத்கர், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்காக நேரு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். 1952ஆம் ஆண்டு,…

Read More

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் சிறுவனைத் தொட்டுத் தண்ணீர் தர மாட்டார்கள். ஒரு உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படியே அண்ணாந்து அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பதின்ம வயதிலேயே திருமணம் முடித்த பின் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றார் அவர். எந்த இடத்தில் அவருடைய சமூகப் பின்னணியைக் காட்டி, அவரைத் தொட்டால் தீட்டு என்று ஒதுக்கினார்களோ, அதே இடத்தில், அவருடைய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றது. ஏன் அம்பேத்கர் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்?  இந்தியா போன்ற ஒரு நாட்டின் வரலாற்றினையும், அதன் சமூகத்தினுள் இருக்கும் உறவுச் சிக்கல்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும், சாதி இல்லாமல் பார்ப்பது வெகுகடினம். பெரும்பாலும் ஒரு நாட்டின் வரலாறும் சித்தாந்தங்களும், யாருடைய கை ஓங்கி இருக்கின்றதோ அவர்களாலேயே வடிவமைக்கப்படுகின்றது. கீழே இருப்பவர்களின் குரல்கூட, எப்படித் தொனிக்க வேண்டும் என்பது மேலே இருப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அப்படி இருக்கும்போது,…

Read More

அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரம் அளித்தல் என்பது, அதன் உண்மையான பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது. இந்தியாவில் அதிகாரப்படுத்துதல் என்பது, சாதாரண மக்களை மய்யப்படுத்தி நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டக் காலத்தில் தொடங்குகிறது. காந்தியார் அம்மக்களின் ஆற்றலை ஒருகமுப்படுத்தி, ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டினார். சமூக அநீதியும், மத அடிப்படையிலான வேறுபாடுகளும் மலிந்த ஒரு சமூகத்தில், அதிகாரமற்ற மக்களை அதிகாரப்படுத்தியதற்கு அதுவே சிறந்த சான்றாக உள்ளது. தங்களின் அன்றாட இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வரும் பெரும்பான்மை மக்களுக்கான சம வாய்ப்புகள் அளிப்பது குறித்து விவாதிக்காமல், மக்களை அதிகாரப்படுத்துவது கடினமானது. ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை உயர்த்தி, நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் அவர்களைப் பங்காளிகளாக்கிப் பயன் பெறச் செய்வதே அதிகாரப்படுத்துவதாகும். அதிகாரப்படுத்துதல் என்பது, பெண்களின் நிலையை உயர்த்துவதும், சிறுபான்மையினரை அக்கறையோடு அணுகுவதுமாகும். எனவே, மக்களை அதிகாரப்படுத்துவதற்கான எந்த…

Read More

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது… வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறர் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தவன் மறுபடியும் ஓங்கி அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தோட்ட வீட்டிற்கு செல்கிறான். அங்கிருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும் தம்பி சசிக்குமாரும் இவளது தலையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? ரோட்டில் வீச வேண்டியதுதானே என்று கூற ஆத்தூர் – தளவாய்பட்டி சாலையில் அந்த…

Read More

சாம்ராட் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்றார். லட்சக் கணக்கான வீரர்களை தமது சார்பாகவும், எதிரி மன்னரின் சார்பாகவும் கொல்லப்பட்டதைக் கண்டு அப்போது அவர் மனம் பதைக்கவில்லை, ஆனால் ஒரு வெற்றிக்குப் பின்னால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளதை ஒரு பௌத்த பிக்கு அவருக்கு உணர்த்தினார். இந்திய வரலாற்றில் சாம்ராட் எனறு அழைக்கப்படும் ஒரே மன்னர் அசோகர் மட்டும்தான், அவ்வளவு புகழ் வாய்ந்த மாமன்னர் தமது வெற்றியை கொண்டாடுவதற்கு பதில் பௌத்த பிக்குவின் போதனையில் மனம் மாறினார், வெற்றியை வன்முறையினால் தக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்தார். உலகில் அவரது பணி நிலைக்க வேண்டுமானால் ஆயிர நாமத்தாழியன் புத்தரின் அறநெறிதான் சிறந்தது என்பதை உணர்ந்தவராய் தமது போர் வெற்றிக்குக் காரணமான ஆயுதங்களைத் துறந்து அன்பின் கீழ் மக்களை அரவணைக்கத் தொடங்கினார். இனி தமது நாட்டில் போர்களே நடைபெறாது என்று அறிவித்தார். கலிங்கத்தின் மீது அவர் நிலைநாட்டிய வெற்றியைவிட மிகக்கடினமானதாக கருதப்பட்ட அகிம்சையை…

Read More

இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து அப்படியே யு-டர்ன் போட்டு, ‘பட்டியல் சாதியிலிருந்து வெளியேறுவோம்’ என்ற முழக்கம், ‘இட ஒதுக்கீடு கூடாது’ என்ற நிலைப்பாடு, தமிழகமே எதிர்த்தாலும் ‘தீவிர பா.ஜ.க நிலைப்பாடு’ என்று மாறியிருக்கும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைச் சந்தித்தேன். ‘‘ஆண்டாண்டுக் காலமாக இழிவுக்குள்ளாக்கப்பட்டுப் பின்தங்கிப்போன மக்கள் சமூக நீதி பெறுவதற்காக வகைப்படுத்தப்பட்டதுதான் எஸ்.சி பட்டியல். ஆனால், ‘எஸ்.சி பட்டியலில் வைத்ததால்தான் எங்களை இழிவுபடுத்துகிறார்கள்’ என்று நீங்கள் சொல்வதை  என்னவென்று புரிந்துகொள்வது?’’ ‘‘இது ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழை! வயலும் வயல் சார்ந்த பகுதிகளிலும் தொன்றுதொட்டு விவசாயம் செய்து வாழ்ந்துவந்தவர்கள்தாம் தேவேந்திரகுல வேளாளர்கள். பசுவைப் போற்றக்கூடிய இம்மக்கள், எந்தவிதத் தீண்டாமைகளுக்கும் ஆளானவர்கள் கிடையாது. அரசப் படையெடுப்புகளின்போது, இம்மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கிக்கொண்டவர்கள் அந்த நிலங்களிலேயே இம்மக்களைக் கூலிகளாக்கிக் கொண்டனர். எனவே, தத்தமது நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தை மட்டுமே நடத்திக்கொண்டிருந்த இம்மக்களை, பட்டியல் சாதியாகச் சேர்த்துக்கொண்டதே தவறு. பட்டியல்…

Read More

ஆந்திராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரனய் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா  பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த மாதம் 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த ஆணவக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதிராவ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆந்திராவில் உள்ள பிரனயின் வீட்டுக்கு நேரில் சென்று அம்ருதா மற்றும் பிரனயின்…

Read More

காந்தி ஒரு மகாத்மாவா? இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு கார ணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத் மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தனமான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர். இரண்டாவதாக, மகாத்மா என்கிற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. தனது உடையை மாற்றுவதன் மூலமாகவே மட்டும் இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் மிகவும் அசாதார ணமான உன்னதமான செயல்களைச் செய்த போதி லும், யாரும் உங்களைக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் வழக்கமான முறையில் நடக்காத…

Read More