Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

The Karnataka government has asked all its departments and authorities to avoid The Karnataka government has asked all its departments and authorities to avoid during all official transactions the nomenclature “dalit” for members belonging to the Scheduled Castes. “All the departments and authorities of government of Karnataka are requested that (use of name dalit) for all official transactions, matters, dealings, certificates, among others,” the official circular said. The Constitutional term Scheduled Caste in English and its appropriate translation in other national languages should alone be used for denoting the persons belonging to the Scheduled Castes/ Scheduled Tribes notified in the…

Read More

பிரபுத்தா பாரத் இதழில் 1956 மே 12 ஆம் தேதி ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2500 ஆவது புத்த ஜெயந்தியை இந்தியப் பௌத்தக் கழகத்தின் எல்லாக் கிளைகளும் கொண்டாட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் 1956 மே 24 தேதி பம்பாய் நரே பூங்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் எழுபத்தைந்து ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பம்பாய் மாகாணத்தின் முன்னாள் பிரதமர் திரு.பாலாசாகேப் கெர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். புத்தரின் வாழ்க்கையையும் அவரது தம் மதத்தையும் பற்றி அவர் உரையாற்றினார். அவரது உரைக்குப் பிறது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பேசும் போது 1956 அக்டோபரில் பௌத்தத்தைத் தாம் தழுவப் போவதாக அதாவது புத்த மதத்தில் சேரப் போவதாக அறிவித்தார். புத்த மதம் போதித்துள்ள அகிம்சை பற்றி பல தொடர் கட்டுரைகளை எழுதியுள்ள வீர சாவர்க்கரை அவர் கடுமையாக சாடினார். மிகுந்த சீற்றத்தோடு…

Read More

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மறு பெயர்தான் சீர் திருத்தம். லட்சக் கணக்கான தொழிலாளர்களை காண்டிராக்ட், காஷுவல் லேபராக வைத்துச் சுரண்டும் முதலாளிகள் இப்போது வேலைநேரத்தை அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்சக் கூலியைய் மேலும் குறைக்க வேண்டும் என்று கூக்குரலிட வாடிய முதலாளியைக் கண்ட போதெல்லாம் வாடும் அரசுகளும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றத் துணிந்து விட்டன. வேறு வழியில்லாத தொழிலாளர்களும் வேலை இருந்தால் போதும் என இதை ஏற்றுக் கொண்டு வேலை செய்யும் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். கட்டாய வேலை என்பது துப்பாக்கி முனையில் நடப்பதல்ல. பொருளாதார, அதிகார ஏற்றத் தாழ்வு நிறைந்த சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் பொருளாதார வாழ்வைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எவ்விதக் கட்டுப் பாடுகளையும் தன் கீழ் வேலை செய்பவர்கள் மீது விதிக்கலாம். இதுவும் ஒரு வகையான கட்டாய வேலைதான். இது அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும். ஆனால் அதே அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை…

Read More

காதல் படுகொலைகள் 2018-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளின்படி, இந்தியாவில், காதலித்ததற்காக ஒரு நாளில் சராசரியாக 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எல்லா துறையிலும் வளர்ச்சி கண்டுவிட்டதாகப் பெருமிதம்கொள்ளும் இந்த நூற்றாண்டில்கூட, காதல் செய்வதற்கு சாதி தடையாகவே இருக்கிறது. நேற்றுதான் முடிந்தது காதலர் தினம். உலகம் முழுவதும் காதலர்கள் காதலில் திளைத்து, இந்த தினத்தைக் கொண்டாடும் போது, பிற்போக்கான சமூகங்களில், காதல் இன்றும் விலக்கப்பட்ட ஒன்றாகவே அணுகப்படுகிறது. இந்தியாவும் அத்தகைய சமூகங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் நாட்டார் கதைகள் உயர்சாதியில் பிறந்த பெண்களைக் காதலித்ததால், கொல்லப்பட்ட மதுரை வீரன், காத்தவராயன் முதலானோரின் ஆணவக்கொலைகளின் பதிவுகளாக அமைந்துள்ளன. நூற்றாண்டுகளாகத் தொடரும் துயரமாக, காதலர்களை வதைக்கிறது சாதி. சாதியுடன் மதம், மொழி, நிறம், வர்க்க வேறுபாடுகள் முதலானவையும் காதலுக்கும், அவற்றைக் கடந்து காதலிப்பவர்களுக்கும் முதன்மை எதிரிகள். சம்பவம் -1: கடந்த 2018 -ம் ஆண்டு, `காதல்’ பட பாணியில் நடந்த நந்தீஷ், ஸ்வாதி ஆணவக்கொலை…

Read More

1951, செப்டம்பர் 27, அண்ணல் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள். நேரு அமைச்சரவையின் பிற்போக்கான பல்வேறு நடவடிக்கைகள் முற்போக்குச் சிந்தனையுள்ள அண்ணல் அம்பேத்கருக்கு ஒவ்வாவமையை அளித்தாலும் அவர் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன. 1.இந்துசட்ட மசோதாவை நிறைவேற்றி பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்க வேண்டும். 2.OBC ஆணையம் அமைத்து பிராமணர்களைக் (ஆண், பெண்) கணக்கெடுத்து அவர்களுக்கு தனியாக OBC இடஒதுக்கீடு அளிக்கவேண்டும். 3.காஷ்மீர் பிரச்சனையில் அரசு காஷ்மீரிகளுக்கு முழுவுரிமையை வழங்க வேண்டும். ஆனால் இந்தியாவின் தலையீடு மேலும் மேலும் காஷ்மீர் மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. இதுகுறித்து பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இப்படி கூறுகிறார், “The issue on which we have been fighting most of the time is,…

Read More

“எப்படி ஒன்றாய்வளர்க்கப் போகிறோம்இந்த முற்றத்தில்சோறு போடும் பன்றிகளையும்நீ கொண்டு வரும்முல்லைச் செடிகளையும்” மதிவண்ணன் மிகவும் அமைதியானவர். அவருடைய அமைதி கடலின் ஆழத்தைப் போன்றது. கடல் தன் ஆழத்தில் எத்தகைய தரவுகளை, நுட்பங்களை, குமுறல்களை வைத்திருக்குமோ அதைப் போன்றதொரு ஆளுமைதான் மதிவண்ணன். அவர் அமைதியாக நடத்தும் உரையாடல்கள் சுருள் அலைகளாய் வரக்கூடியன. அவருடைய இடையறாத வாசிப்பும் சமூகத்தின் மீதான அவதானிப்பும், படைப்பின் கூர்மையை செதுக்கிக் கொண்டே இருக்கின்றன. பொதுமையான வாழ்வின் பரப்பில் தலித் வாழ்க்கை பெரும் பாரமாய் இருக்கும் சூழலில், அவருடைய எழுத்தின் கூர்மை கோடைக் காலத்து சூரியக்கதிர்களைப் போன்றவை. அவரைப் படித்தவுடன், அடிவயிற்றில் ஒரு குற்ற உணர்வுடனான பீதி உருவாவதை எவரும் உணராமல் இருக்க முடியாது. மே 2002இல் வெளிவந்த மதிவண்ணனின் “நெரிந்து’ ஆற்றொண்ணாத கோபத்துடனும், அதே நேரத்தில் நேர்த்தியான வார்த்தைகளின் பின்னலாகவும் தலித் கவிதைத் தளத்தில் அதிர்வினை ஏற்படுத்தியது. எதிர்நிலையில் நின்று கேட்கும் அவருடைய இருப்பு, எவராலும் எதிர்கொள்ள முடியாததாக…

Read More

எப்படியும் எளிதானதல்ல அதுஉங்களின் செயலுக்கு நியாயம் கற்பிப்பது வரைமுறைகளின் மீதன்றுசுதந்திரம் கட்டப்பட்டிருப்பது முக்கியத்துவம் மிகவும் வாய்ந்ததுஉங்களுடையதைப் போன்றே பிறரின் சுதந்திரமும்எதிர்க்கருத்தினை எரிக்க முயலும்வன்முறை பயங்கரமானது மதமெனினும் மார்க்கமெனினும்மயக்கத்தின் மருந்துகளையே அவைபுசிக்கத் தருகின்றன கருத்துக்களின் மீது கவனத்தை வீசுங்கள்கற்களை அல்ல நாகரீகமும் சுதந்திரமும்நாளுக்கு நாள் வளர்வது காலத்தின் மீது கறைகளை எறிகிறீர்கள்காலம் புத்தகத்தைப் போன்றே புரட்டப்படுவதுநாளை கறைகளாய் நீங்கள் வாசிக்கப்படுவீர்கள்

Read More

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற்றிருப்பது தலைப்புச் செய்தியாக ஒளிர்ந்த வண்ணம் இருக்கிறது. பலர் முன்மாதிரி என்றும், இப்படி இருந்துவிட்டால் நம் தமிழ்ச் சமூகம் எங்கேயோ போய் விடாதா என்கிற தொனியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களைக் கூறுபோடும் அடையாளங்களை, அவர்களைப் பாகுபடுத்தும் பிரிவுகளைத் தாண்டி ‘ஒரு மனிதர், ஒரு மதிப்பு’ என்கிற கனவை எட்ட பலரும் விரும்புவது புரிகிறது. மேற்குறிப்பிட்ட வழக்கறிஞரின் செயலைத் தனிப்பட்ட ரீதியில் கேள்வி கேட்கப்போவதில்லை. மனிதராக உணர்வதற்கான முன்னெடுப்பை தன்னுடைய அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துகிற முயற்சியாகவே அதனைக் கணக்கில் கொள்ளலாம். ‘நரகத்திற்கான பாதை நல்ல நோக்கங்களோடுதான் வழிகோலப்படுகிறது’ என்றொரு வாசகம் உண்டு. அதைப்போன்றதுதான் இதுவும். இந்தியாவில் affirmative action எனப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட செயல்திட்டங்கள், தனி மனிதரை அளவுகோலாகக் கொண்டவை அல்ல. குழுவாக, சாதியாகப் பாகுபடுத்தப்படுவதால் அதன் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பது நெடுநாள்…

Read More

அரசியல் நிர்ணய சபை டிசம்பர் 9, 1946 அன்று முதன் முதலாகக் கூடிய நாளிலிருந்து கணக்கிட்டால் அது தனது செயல்பாடுகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆகிவிட்டன. இக்காலகட்டத்தில் அரசியல் நிர்ணய சபை இதுவரை பதினோரு முறை கூடியுள்ளது. இந்த பதினோரு கூட்டங்களில் ஆறு கூட்டங்கள், நோக்கங்கள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவும், அடிப்படை உரிமைகள், கூட்டாட்சி அரசமைப்புச் சட்டங்கள், கூட்டாட்சி அதிகாரங்கள் மற்றும் மாநிலங்களின் அரசமைப்புச் சட்டங்கள், சிறுபான்மையினர், பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் ஆகியவை குறித்த ஆய்வுக் குழுக்களின் ஆய்வறிக்கையை விவாதிக்கவும் செலவிடப்பட்டது. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்றாவது கூட்டங்கள் வரைவு அரசமைப்புச் சட்டத்தை விவாதிக்க ஒதுக்கப்பட்டன. இந்த பதினோரு கூட்டங்கள் மட்டுமே ஏறத்தாழ 165 நாட்களை எடுத்துக் கொண்டன. இவற்றில் 114 நாட்களை வரைவு அரசமைப்புச் சட்டத்தை விவாதிக்க அரசியல் நிர்ணய சபை செலவிட்டது. வரைவுக் குழுவை எடுத்துக் கொண்டால் அது…

Read More