Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉன்னப்பாவின் பெயருக்குப்பின்சாதியைத் தொங்கவிட்டுக் கொண்டு – அபிமானி
மூங்கில் குழாய் வழியேகொட்டாங்குச்சியில்தேநீர் தந்தவன்;சானிப்பால் குடிக்கச் செய்துசவுக்கால் அடித்தவனளல்லவா நீ, நடவு நேரத்தில்குழந்தைக்குப் பால் கொடுத்ததற்காய்என் தாயின் மார்பை அறுத்தவன் நீ. என் ஆலய நுழைவின்போதுநாயென விரட்டிக்கொலை பாதகம் செய்ததாய்தீட்டுக் கழித்தவன் நீ இன்றுநீயும் நானும் ‘இந்து’ என்கிறாய் – இராஜமுருகுபாண்டியன்
உலக கவி ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானிகள் சர் ஜே. சி. போஸ், பி சி ரே போன்ற புகழ்பெற்ற மேதைகளின் வரிசையில் வைத்து எண்ணக்கூடிய பெரியார் பேராசிரியர் பாகாலா லட்சுமி நரசு அவர்கள் 1860ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் பிறந்த நூறாவது ஆண்டு நெருங்கி வருகிறது. அவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் திருச்சியிலும், பெரும்பாலும் சென்னை கல்லூரிகளிலும் விஞ்ஞான ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். பழைய மாநிலத்தில் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களில் 50 சதவிகிதமாவது அவர் மாணாக்கராயிருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. அக்காலத்திலும், அவர் 1934ஆண்டில் இறக்கும் வரையிலும் சென்னையில் அவரைத் தெரியாத பட்டதாரியோ, அதிகாரியோ இருந்தார் என்றால், அவர் அறிவு உலகத்தில் வாழவில்லையென்று தான் கருதவேண்டும். பேராசிரியர் பரிநிர்வாணமடைந்து 24 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆயினும், தென்னாடு அப்பெரியாருக்கு யாதொரு ஞாபகச் சின்னமும் ஏற்படுத்தாதது ஒரு துர அதிஷ்டமே. ஆனால் பௌத்தம் அவரை மறக்காது. பி. இலக்ஷ்மி நரசு ஒரு நடுத்தர குடும்பத்தில்…
A man reportedly entered the premises of Rajgruh Tuesday night and smashed flower pots, damaged plants, CCTV camera and pelted stones at a window before fleeing. Mumbai: The police on Wednesday detained a suspect after a man vandalised `Rajgruh’, Dr Babasaheb Ambedkar’s residence in Dadar in central Mumbai. The incident, which took place on Tuesday night, evoked condemnation from political leaders including Maharashtra Chief Minister Uddhav Thackeray who said strict action will be taken against those involved. As per the complaint lodged by Ambedkar’s grandson Bhimrao Ambedkar at Matunga Police Station, the unidentified accused who was captured in CCTV seemed to…
புத்தர் குறித்து வாசிப்பனுபவம் வாய்க்காதவர்களிடம் பேசினால், அவர்கள் உரைக்கும் முதல் வார்த்தை, “புத்தர் எதற்கும் ஆசைப்படக் கூடாதென்றார்”. இன்னும் தெளிவாக பேசுவோர், “புத்தர், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்” என்பர். அறிவுஜீவி கவிஞர்கள் சிலர், “புத்தனும் கூட ஆசைப்பட்டான் ஆசை ஒழிய வேண்டும் என்று” என எழுதிக்கொண்டிருப்பார்கள். இப்படி புத்தர் ஆசைப்படக் கூடாது என்று மட்டும் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்த சாமியார் அளவுக்கு சாமானியர்களுக்கு ஒரு பிம்பத்தைக் கடத்திவிட்டார்கள். புத்தரை ஆழ்ந்து வாசிக்கத் துவங்கினால் புத்தர், ஆசை என்பதாக எதை எதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறார் என்பதை கண்டடையலாம். புத்தர் பிறந்து வாழ்ந்த காலம், சமூக மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்த மிக முக்கியமான காலகட்டம். மன்னராட்சி முறையை பிரிட்டீஷ் அரசு முடிவுக்கு கொண்டுவந்து ஜமீன்தார் முறைகளின் மேல் கைவைக்க துவங்கிய வரலாற்றையே இங்கு நாம் தப்பும் தவறுமாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். இன்று ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அதன் நீட்சி ஆங்காங்கே எட்டிப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.…
சாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்துவத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இந்தியாவின் மிக நீண்டதும் நெடியதுமான சிக்கல்களில் ஒன்று சாதி. கி.மு. 1700 – 1500 க்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய ஆசியாவில் வாழ்ந்த ‘தொல் நோர்த்’ இனத்தவரான ஆரியர், இந்தியாவின் சிந்து மற்றும் கங்கைச் சமவெளிகளில் குடியேறினர். ஆரியக் குடியேற்றங்கள் தொடர்ந்து குழுக் குழுவாக நீண்ட காலத்திற்கு நடைபெற்றன. இக்குடியேற்றங்களை ஊடுறுவல் என்று அழைப்பதைவிடவும் படையெடுப்பு என்றே சொல்ல வேண்டும். இப்படிச் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. “ஆரியர்களின் வெற்றி, சிந்து சமவெளி நாகரிக மக்களை கூட்டங் கூட்டமாகக் கொன்று ஒழித்ததிலேயே சாத்தியமாகியுள்ளது. உலகின் மாபெரும் நாகரிகங்களில் ஒன்றை அழித்தொழித்து உருவானதுதான் ரிக் வேதம்” என்கிறார் சர். லெனார்டு உல்லி. பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புக் கூடுகளைக் கொண்ட குவியல்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக, ஆய்வாளர்கள் தங்களது அகழ்வாய்வு அறிக்கையில் எழுதியுள்ளனர் (‘இந்தியாவின் அரசியல் வரலாற்றை வாசித்தல்’, ஆர்.சி. மஜும்தார், 1976). ஆரியப்…
Sometimes, it is the moral force that draws attention to it. This moral force helped India win its independence from British brutality. The cold-blooded murder of African-American George Floyd on May 25 has sparked a revolution in the United States. Floyd was kneed by a white police official in Minneapolis while his colleague, of Asian origin, stood as abettor. This brutality was recorded on mobile phone cameras by onlookers who protested but to no avail. The video galvanised global communities to demand justice for George Floyd and call for an end to America’s mistreatment of its black and brown citizens by…
பொய், புரட்டுகள் சமூக வரலாற்றில் காலம் காலமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் காலம் துவங்கி என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அப்படியான பொய்களில் பெயர் மீதான பொய்கள் பிரபலமானவை. நாட்டுப்புற தெய்வங்களையெல்லாம் பெருங்கடவுள்களின் அவதாரப் பெயர்களாக மாற்றுவது என்பது அதில் முக்கியமானது. இந்த பெயர் அழுக்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. பள்ளிக்காலங்களில் அம்பேத்கர் குறித்த பாடத் திட்டங்களில் பொதுவான ஒரு சம்பவம் விவரிக்கப்படும். அண்ணல் தனது பால்ய வயதில் படிக்க வாய்ப்பில்லாமல் இருந்த போது, அம்பேத்கர் என்கிற பெயருடைய ஆசிரியர் அவருடைய கல்விக்கு பேருதவி செய்ததாகவும் அதன் காரணத்தினாலேயே அவருடைய பெயரை அண்ணல் தனக்குச் சூட்டிக் கொண்டதாகவும் முடியும் அந்த கதை. 2018-ல் அம்பேத்கர் பிறந்தநாளில் நியூஸ்-18 தமிழ்நாடு செய்தி அம்பேத்கருடைய ஆவண படம் ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதிலும் கூட இதே புரட்டு தொடர்ந்திருந்தது. இன்னும் அந்த தகவலை ஆழமாக உள் நுழைந்து பார்த்தால், அந்த ஆசிரியர்…
‘பரியேறும் பெருமாள்,’ ‘அசுரன்’ ஸ்டைலில் ஒரு படம் எடுத்து ஒட்டுமொத்தத் தெலுங்குத் திரையுலகின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் கருணா குமார். வழக்கமான தெலுங்கு சினிமாக்களில் இருந்து வேறுபட்டு தனித்த அடையாளத்துடன், லாக்டெளனுக்கு முன் களமிறங்கியது ‘பலாசா 1978.’ இன்று ஆந்திராவின் மெகா ஸ்டார்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை அதுதான் ஹாட் டாப்பிக். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் கருணாகுமார், பத்து வருடங்களுக்கும் மேலாக சென்னையில் இருந்ததால், ‘`தமிழ் பேச மட்டுமல்லாமல், எழுதக்கூடத் தெரியும்’’ என்கிறார். அவரிடம் பேசினேன். “முதலில் உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க…’’ “என் சொந்த ஊர் ஆந்திராவுல 200 குடும்பங்கள் மட்டுமே வாழுற ஒரு குக்கிராமம். அதனால, நான் பத்தாவது படிச்சு முடிச்சவுடனே சென்னைக்கு ஓடிவந்துட்டேன். ஹோட்டல் வேலையில தொடங்கி, சென்னையில நான் பார்க்காத வேலைகளே இல்லை. அதேநேரம். இலக்கியம் மீதிருந்த ஆர்வத்தால தெலுங்குல சிறுகதைகள் எழுதிட்டிருந்தேன். அங்கே எனக்கு நல்ல…
I 1870 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் குடிமதிப்பு புள்ளி விவர அறிக்கைகளை (சென்சஸ்) குடிமதிப்பு ஆணையர் வெளியிட்டுவருகிறார். இந்திய மக்களின் சமூக, சமய வாழ்க்கை பற்றிய ஏராளமான விவரங்கள், வேறு எங்கும் பெற முடியாத தகவல்கள் இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ளன. 1910 ஆம் வருட குடிமதிப்புக் கணக்குக்கு முன்னர் சென்சஸ் ஆணையர் “மத அடிப்படையில் மக்கட்தொகை” என்னும் ஒரு பத்தியை வெளியிட்டு வந்தார். இந்தத் தலைப்பில் மக்கட்தொகை பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தது: 1.முஸ்லீம்கள் 2.இந்துக்கள் 3.கிறித்தவர்கள் மற்றும் பிறர். ஆனால் 1910ஆம் வருட சென்சஸ் அறிக்கை அதுவரை பின்பற்றப்பட்டுவந்த நடைமுறையிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. முதல் தடவையாக இந்துக்கள் மூன்று தனி வகையினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர்: i. இந்துக்கள் ii. ஆவி உலகக் கோட்பாட்டாளர்களும் பழங்குடியினரும் iii. தாழ்த்தப்பட்ட மக்கள் அல்லது தீண்டப்படாதவர்கள். அப்போது முதல் இந்தப் புதிய வகைபாடு முறையே பின்பற்றப்பட்டுவருகிறது. II முந்தைய சென்சஸ்…