Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது Centre For Policy Research மையத்தின் தலைவராக உள்ளார். ஆழமான பார்வைகளுக்கும் கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது: #டாக்டர் அம்பேத்கர் அதிகாரம்-ஜனநாயகம், பொருளாதார வளம்-வன்முறை, இந்து மதம்-பாரம்பரியம், தேசியம்-நீதி, எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அம்பேத்கர் நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடியாகச் சுட்டெரிக்கிறார். அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சி, இறைநம்பிக்கை குறித்த உறுத்தலைத் தந்துகொண்டே இருக்கிறது.# [quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]டாக்டர் அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால்தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும்.…
வழக்கறிஞர் அருள்மொழி இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது ஜாதி என்னும் குறுகிய எண்ணம். பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லாமல் அந்தத் தீமை எல்லோரையும் சுட்டுப் பொசுக்குகிறது. ஜாதி என்னும் நச்சைப் புரிந்துகொள்ள, விடுபட அம்பேத்கரைப் படிக்க வேண்டும். புகை அதைப் பிடிக்காதவரையும் பாதிப்பது போல ஜாதியின் வீச்சு எல்லோரையும் பாதிக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாகச் சொன்னவர் அம்பேத்கர். தலைவர்கள் மீதான மரியாதை ஆட்களைப் பொருத்து மாறுகிறது, மாற்றப்படுகிறது என்பதற்கு அம்பேத்கர் ஓர் உதாரணம். பாட நூல்களில் வரலாற்றில் தொடர்ந்து மறைக்கப்பட்டு வரும் ஆளுமை அவர். தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர், அரசியல் சாசனத் தந்தை என அவரின் வரலாற்றைச் சுருக்கிவிட்டோம். அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவரை விடப் பெரிய படிப்பாளி கிடையாது. அதிக பட்டங்களை ஆய்வு செய்து பெற்றவர். ஆராய்ச்சி அறிவும், ஆங்கிலப் புலமையும் பெற்றவர். எளிமையால் உயர்ந்தவர். வாழ்க்கையின் அத்தனை செயல்பாடுகளையும் நெறிப்படுத்தத் தலைப்பட்டவர். இந்திய அரசியலமைப்பு, ரேஷன் முறை, தொழிற்சாலை மற்றும்…
அம்பேத்கர் என்றதும், இந்தியச் சட்டங்களை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பைச் செலுத்தியவர் என்ற இரண்டு விஷயங்கள் எல்லோரின் நினைவுக்கும் வரும். இந்த இரண்டு அடையாளங்களைத் தவிர, அம்பேத்கர் தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெண்களின் வாழ்வு பற்றியும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்தும் கவனம் செலுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெண்கள் மதிக்கப்பட்டு, அரசர்கள் முடிசூடும் விழாக்களில் முக்கிய இடம்பிடிப்பதைக் குறிப்பிடுகிறார். பதவியேற்ற அரசர், தனது மனைவிக்கும் பொது அமைப்புகளில் உள்ள பெண் தலைவிக்கும் வணக்கம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டி, உலகின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற நடைமுறை இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். அப்படி பெருமிதத்தோடு வாழ்ந்த பெண்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என அலசுகிறார். மதவாதிகளின் ஆதிக்கமும் அவர்கள் பெண்களை அடிமைப்படுத்தும் செயல்களை உருவாகியதையும் ஆதாரத்தோடு விளக்குகிறார். குறிப்பாக, ‘மநு ஸ்மிருதி’ என்ற நூலில், பெண்கள் பற்றிய…
இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வி இந்திய இட ஒதுக்கீடுக்கு எதிராக வலம் வரும் கேள்வி. பார்த்தவுடன் இட ஒதுக்கீட்டில் படித்து முன்னேறியவர்களுக்கே நியாயமாக படும் ஒரு சூழ்ச்சி பரப்புரை. இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசி வருபவர்கள் இரண்டு வகைப் படுவர், ஒன்று தெரிந்தே இட ஒதுக்கீட்டு முறை கூடாது என சொல்பவர்கள். மற்றவர் இந்த பரப்புரைகளை நம்பி “நியாயம் தானோ?” என வரலாறு, சிஸ்டம் தெரியாத அப்பாவிகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா? இதே கேள்வியை நான் கொஞ்சம் மாற்றி கேட்கிறேன். Reservation இல்லாமல், ஜெனரலில் படித்து, நல்ல மதிப்பெண் எடுத்து, மேற்படிப்பும் ஜெனரலில் கிடைத்து படித்து, மருத்துவ Practice செய்யாமல், படித்து முடித்து நேராக ஆபரேஷன் அறைக்கு வருகிற ஒரு டாக்டர், “நான் படித்து முடித்து நேரடியாக செய்யும் முதல் இதய அறுவை சிகிச்சை இது…
[dropcap bgcolor=”#8224e3″ style=”dropcap1″]2016[/dropcap]ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாபாசாகேப் அம்பேத்கரை நீர்வளத்துறையின் தந்தை என்று அறிவித்தார் மத்திய நீர்வள மற்றும் நதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதி. 1942 முதல் நீர்வள மேம்பாட்டிற்கு அம்பேத்கர் அளித்த பங்களிப்பும் இத்துறையில் பல்வேறு கொள்கைகள் வகுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதாலும் அவருக்கு இந்தப்பட்டம் வழங்கப்படுவது மிகப்பொருத்தமான ஒன்று என்று அப்போது கூறினார். மத்திய நீர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த “அம்பேத்கரின் வழியில் வளர்ச்சிக்கான நீர் வளமேலாண்மை” என்ற கருத்தரங்கில் பேசும்போது அம்பேத்கரின் பிறந்தநாளை நீர் தினமாக அனுசரிக்கும் அரசின் முடிவை அறிவித்தார். அதோடு “நீர்வளமேலாண்மைக்கு அம்பேத்கரின்பங்களிப்பு” என்ற மத்திய நீர் ஆணையத்தின் ஆய்வு ஒன்றை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் துவக்கும் முடிவையும்அறிவித்தார். டாக்டர் அம்பேத்கரை முன்னிலைப்படுத்தும் அரசின் இந்த முடிவு பல தரப்பிலும் எதிர்ப்பார்பை உருவாக்கியது. நீர்வளம் குறித்தான டாக்டர் அம்பேத்கரின் உண்மையான கவலைகளையும் தண்ணீருக்கான அவரின் நீண்ட…
நேற்று மர்மமான முறையில் இறந்த முத்துக்கிருஷ்ணன், ரோஹித் வெமுலாவைப் பற்றி சென்ற ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். அது மதியம் 2 மணி. நான் எப்போதும் போல நூலகத்தில் இருந்தேன். அன்று நான் என் சகோதரர்கள் மிர் மற்றும் ஜானுடன் விரதத்தில் இருந்தேன். என் பேராசிரியர்கள் ரத்தினம் மற்றும் தத்தாகடா ஆகியோர் வெளிவாடாவில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தார்கள். நான் அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் ராதிகா அம்மா (ரோஹித் வெமுலாவின் தாய்) கலந்துகொள்ளப் போவதாக அர்பிட்டா என்னிடம் கூறினார். ஏன் என்று காரணம் தெரியவில்லை. ஆனால், எனக்கு அன்று ராதிகா அம்மாவை சந்திக்க வேண்டுமென்ற பேராவல் உண்டானது. ராதிகா அம்மா கடந்த ஆறு மாதங்களாக அனைத்துவிதமான பிரச்னைகளையும் எதிர்கொண்டிருந்தார். ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள், அரசும் அதிகாரமும் தந்த பிரச்னை, என ரோஹித் வெமுலா இறந்ததிலிருந்து ஆளுங்கட்சி அனைத்து இடையூறுகளையும் ராதிகாம்மாவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. ரோஹித்தின் மரணம் என் தூக்கத்தையும் சிதைத்துவிட்டிருந்தது. நான் சரியாக…
பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக் கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் இருந்ததையும் கண்டோம். அந்தப் பௌத்த ஆசிரியர் பாலிமொழியில் பல நூல்களை இயற்றி வைத்தனர் என்பதையும் அறிந்தோம். ஈண்டு, பௌத்த ஆசிரியர் தமிழ்மொழியில் என்னென்ன நூல் இயற்றியுள்ளார் என்பதை ஆராய்வோம். இப்போது தமிழில் உள்ள பௌத்த நூல்கள் மிகச் சில. இலக்கியத்தில் ஒன்றும் இலக்கணத்தில் ஒன்றும், ஆக இரண்டு நூல்களே இப்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன. ஏனைய நாலைந்து நூல்களின் பெயர்மட்டும் வழங்கப்படுகின்றனவேயன்றி நூல் முழுவதும் கிடைக்கப் பெற்றிலம். ஜைனரும், பௌத்தரும் தத்தம் மதக் கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழி வாயிலாகப் பரவச் செய்தனர் என்று ‘பௌத்தரும் தமிழும்’ என்னும் அதிகாரத்தில் கூறினோம். அங்ஙனமாயின், தமிழ்மொழியிலும் அவர்கள் பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதில் யாதோர் ஐயமுமில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில்…
தலைசாய்த்து நீரருந்தும் சிறு பட்சியைப் போல வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அப்பாவிடம் கேட்கிறேன் நீர்நாயின் நனையாத தோலென மினுமினுக்கின்றன அவர் கண்கள் உள்ளுக்குள் உடைப்பெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல் நிற்கின்றேன் உடலின் குப்பியில் விஷத்தை இட்டாற்போல் வலி பெருகுகிறது உள்ளங்கையை முறமாக்கி சலித்தெடுத்த மண்ணை ருசிபார்த்த காலந்தொட்டே கேட்டுக் கொண்டிருக்கிறேன் பதில் சொல்வாரில்லை. ஒட்டுப்போட்ட சக்கரமென தும்பியைப் பிடித்துக் களித்த பருவத்திற்கு உருண்டோடுகிறது அவர் மனம் வலி பிசகாமல் அவரும் அவரப்பாவிடம் கேட்டது நினைவிலாடும் போலிருக்கிறது அப்பாவும் அழுகிறார் நானும் அழுகிறேன் இதயத்தின் ஒற்றைக் கப்பியில் கட்டப்பட்ட கேள்வியின் ஊஞ்சல் காலத்தின் இருபுறமும் சென்று வருகிறது பதிலின்றி பதில் சொல்வார் எவருமின்றி சற்று தொலைவில் சொப்பு வைத்து தனியே விளையாடும் என் மகள் உதட்டின் விளிம்புக்குள் துக்கத்தை மடித்து அதே கேள்வியைக் கேட்கிறாள் என்னிடம் சேரி ஊராகாதா அம்மா?
கடந்த நவம்பர் 11,12,13 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இந்திய பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் 12ஆவது தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தியா முழுவதிலுமிருந்து முக்கியமான பெண் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர். ‘எல்லோருக்குமான ஊடகங்கள், ஊடகங்களில் பெண், மோதல் பகுதிகளில் செய்தி சேகரிப்பு, ஊடகங்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்கள், தெலங்கானா’ என்று பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றி வரும் கல்பனா ஷர்மா, அம்மு ஜோசப் போன்ற சீனியர்கள், சர்வதேச கவனிப்புக்குட்பட்ட அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் ரோஹினி மோகன், நேஹா தீக்ஷித் போன்ற ஊடகவியலாளர்களும் பங்கேற்று சிறப்புரை வழங்கினர். நிகழ்வின் தொடக்க அமர்வில் எல்லோருக்குமான ஊடகங்கள் தலைப்பில் சிறுபான்மையினர், சாதியம் (தலித்), ஆதிவாசிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸின் சுதிப்தோ மோண்டல் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார். இந்த அமர்வில் ‘இந்திய ஊடகங்களில் சாதியம்’ குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெயராணி…
அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டியை இந்திய அரசு தன் முதலில் 1965 ஆம் ஆண்டு அமைத்தபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் எல். இளையபெருமாள். இவர், சிதம்பரத்திற்கு அருகில் உள்ள காட்டுமன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சோதிடத்தில் வல்லுநராக இருந்த தன் தந்தையிடம் சோதிடம் பார்ப்பதற்காக வீட்டிற்கு வரும் பார்ப்பனர்கள், உள்ளே வராமல் தோட்டத்திலேயே நிற்பதைப் பார்த்த இளைய பெருமாள், ஏன் அவர்கள் உள்ளே வர மறுக்கிறார்கள் என தனது தந்தையிடம் தொடக்கக் கல்வி பருவத்திலேயே கேள்வி கேட்கத் தொடங்கினார். சாதிய வேறுபாட்டை நேரில் பார்த்து அதன் பொருளைப் புரிந்து கொண்டதுதான் பின்னாளில் அவரைப் போராளியாக மாற்றியிருக்கிறது. இந்திய அளவில் தெரியக்கூடிய ஒரு தலைவராகவும், அரசியல் முன்னோடியாகவும் அவரை அடையாளப்படுத்தியது. காட்டுமன்னார்குடி ம. குளக்குடியில் இருந்த தொழிலாளர் நலப்பள்ளியில், 1930 இல் தன் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், பிறகு காட்டுமன்னார்குடி கழக நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.…