Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

[dropcap bgcolor=”#dd3333″ style=”dropcap2″]ச[/dropcap]ரிந்துருளாத ஒரு பெரும்பாறையின் ஆசுவாசத்தைப்போல நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் இரைதேடி நீரருந்தி எச்சமிட்டு வேண்டும்பொழுதினில் பறக்கும் ஒரு பறவையாய் நீள்கிறது என் காலம் சூரியனின் பிளவுபடாத கதிர் என் குருதியில் பாய எலும்புகளும் ஒளிர்கின்ற உன்னதம் என்னுடையது கையால் நிலவை இழுத்து முத்தமிடும் தருணம் யாருக்காவது கிட்டுமா முறிந்து வீழும் அலைகளின் கடலை வீட்டின் முற்றம் வரை நீட்டிக்க இயலுமா ஒருபோதும் இல்லையென்றாலும் நான் அவற்றை வரைந்திருக்கிறேன் கவிதையாய் எழுதியிருக்கிறேன் இப்போதும் நள்ளிரவில் வீதிகளில் திரிகிறேன் பூக்களை மலரும்போதே பார்க்கிறேன் அன்பும் ஒளியும் காற்றும் மரத்தின் தண்டுகளிலிருந்து நீரும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன நான் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் ஆங்காங்கே வன்புணர்ந்து வீசப்படும் எனதுடலுக்குள் அரைகுறையாய்ப் போடப்படும் பச்சைத் தையல்கள்தாம் குத்துகின்றன விரும்பியவண்ணம் சிறுநீர் கழிக்க. – சுகிர்தராணி

Read More

Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 1 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 2 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 3 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 4 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 5 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 6 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 7 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 8 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 9 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 10 [PDF] Dr. Babasaheb Ambedkar : Writings & Speeches Vol. 11 [PDF] Dr.…

Read More

வள்ளுவன் புரண்ட வயிற்று மேடு அவதானிகளின் ஆட்சி பீடம் ஆறறிவுகளின் அரியாசனம் அடடே… அதிசய போதிவனம் தமிழைத் தரித்த தொப்பூழ்க்கொடி முதலாம் இரண்டாம் மூன்றாம் சங்கம் உலகை சோடித்த ஒற்றை விளக்கு ஒளிரும் சிந்தனை தாங்கிய மாடம் மமதை இல்லா மாளிகை புரம் மனித உரிமைக் காவல் நிலையம் சத்திய தர்மப் பாடசாலை மானுடநேய சிகிச்சைப் பிரிவு விசுவாசங்களின் சுவாச மண்டலம் பிரளய உடலின் மூளைப்பகுதி ஐந்திணைக் கைகளின் ஆயுள் ரேகை ஆதிக்கம் அடித்து தூற்றும் களம் அழுக்கு மூட்டைகள் வெளுக்கும் படித்துறை ஆதித் தமிழ்நில அறிவியல் வகுப்பறை வெண்ணிலவன்

Read More

வேட்டைக்காரர்களால் எழுதப்பட்ட சிங்கத்தின் கதை மதுரை வீரன் திரைப்படம் சில குறிப்புகள் – குமரன்தாஸ் எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை, அவர்களது கருத்தின் மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை, அவர்கள் தமது சொந்த முடிவிற்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு, அவர்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம் இதுதான், எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாக இருப்பது தான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம் ஆகும். பி.ஆர். அம்பேத்கர் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி சமூகத்தை நகர்த்திச் செல்லும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக ஆங்கிலேயரின் வருகைக்கு முன் தமிழகத்தில் உரைநடை இலக்கியம் என்பது அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. உரைநடைக் கட்டுரை மட்டுமல்லாது புதினம், சிறுகதை, புதுக்கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் அனைத்துமே ஆங்கிலேயரால் நமக்கு வழங்கப் பட்டவையே ஆகும். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு என்பவர் 1709-இல் தமிழகம்…

Read More

[quotes quotes_style=”bquotes” quotes_pos=”left”] பரந்து விரிந்த என் தேசத்திற்குக் கூட இல்லை புள்ளியாய் இருக்கும் ஒரு ஊருக்கு நான் தலைவனானால் சூத்தெரிகிறது உன் சாமிக்கும் – ரகசியன் [/quotes]

Read More

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின், அதைத் தங்கள் நலன்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், இரண்டு செயல்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக, தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதைத் தனது லட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு, ஒரு தொழிலாளர் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி, தொழிற்சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் அய்யமில்லை. ஆனால், இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட, உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும், தொழிலாளர்களின் இந்தக் கட்சி,…

Read More

அமைதியின் பேருருவத்தை உருவாக்கி முடிக்கும் அத்தருணம் உன்னதமானது சுரண்டல்களற்ற பொழுதொன்று வரும் வானம் எல்லாருக்குமானது போரின்றி கைகள் தழுவும் அந்த நொடி மனிதம் முளைக்கவுமானது அடிமைகள் என்று யாருமில்லா சமூகம் அப்பட்டமானது யாரும் கேட்க முடியாத அதிகாரத்தின் குரல் வீணானது புறக்கணிப்பின் வலியறியா மக்கள் சூழ்ந்த வாழ்வு சகோதரத்துவமானது மேடுகள் சமனுறும் செதுக்கல்கள் சமத்துவமானது பிணைகளற்று வீசி நடக்கும் கைகளும் கால்களும் சுதந்திரமானது ஆயினும் இவற்றை அடைய எளியோர் வெல்லும் போரே தேவையானது.

Read More