Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு – புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?. ‘பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின் உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும். ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா, அதுதவிர அம்பேத்கரின்…
தீண்டப்படாதவர்கள் குறித்தும், அரசியல் சட்டப்பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி காட்டிய மனப்பான்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கை, 19 செப்டம்பர் 1932 மகாத்மா காந்தி, சர் சாமுவேல் ஹோர், மற்றும் பிரதமர் ஆகியோரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அண்மையில் பத்திரிகைகளில் படித்தேன். பிரிட்டிஷ் அரசாங்கம் தானாகவே முன்வந்தோ அல்லது பொதுஜன அபிப்பிராயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டோ தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையேல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று திரு. காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் படித்துத் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். சாகும்வரை உண்ணாவிரதம் என்ற மகாத்மாவின் அறிவிப்பு என்னை எந்த அளவுக்கு இக்கட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். வட்டமேசை மாநாட்டில் திரு. காந்தி பேசும்போது வகுப்புப் பிரச்சினை அத்தனை முக்கியத்துவமில்லாத ஒரு சிறு பிரச்சினை என்றே குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்சினைக்காக அவர் தம் உயிரைப் பணயம் வைப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.…
இந்த நாடகத்தின் முதல் காட்சி, காவல் நிலையத்துக்குள் தொடங்குகிறது. நிஜத்தில் என்றால், உள்பாகங்கள் முழுவதும் திருடப்பட்டு, துருவேறிய வெறுங்கூடுகளாக நிறைய வண்டி வாகனங்கள் நிற்கும் இடம் எதுவோ, அதைக் காவல் நிலையம் என்று எளிதாக அடையாளம் காட்டிவிடலாம். ஆனால், நாடக மேடையில் அப்படிக் காட்ட முடியாது. இருந்தாலும் நாடகத்துக்காக மேடையில் காவல் நிலையம் ஒன்றை உருவாக்கத்தான் வேண்டும். காய்ந்த ரத்தத்தின் நிறத்தில் செஞ்சாந்து பூசி, அதில் இடைக்கிடை வெள்ளைக்கோடுகள் வரையப்பட்ட ஒரு கித்தானை அல்லது தட்டியை வைத்தால், காவல் நிலையம் போன்ற தோற்றம் மேடைக்குக் கிடைத்துவிடும். மேடையின் முன்புறத்தில் அரைவட்ட வடிவிலான நுழைவாயில் வளைவு ஒன்று தேவை. அதில் `காவல் நிலையம்’என மறக்காமல் எழுத வேண்டும். ஒருவேளை கா‘வள்’ நிலையம் என எழுதப்படுமானால், அது எழுத்துப் பிழைதானே தவிர, அர்த்தப் பிழை அல்ல என்பதறிக. வேண்டாதவர்கள் மீது வழக்குப் போடுவதற்காக ஒடுங்கிய சொம்புகள், சில கஞ்சாச்செடிகள், கஞ்சாப் பொட்டலம் ஒன்றிரண்டு மேடையின்…
தொழிலாளர் நல அதிகாரிகளிடம், முதலாளிகள் சங்கத்திடம், முதலாளிகளிடம் பேச்சுவார்த்தைக்கென்று சலிக்காமல் நடந்திருக்கின்றார், ஜெ.ஜெ. தாஸ். கூலி உயர்வு கேட்டும், போனஸ், பஞ்சப்படி போன்ற பிற நலன்களுக்காகவும் இடையறாது போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1943 ஆம் ஆண்டில் மாஜிஸ்ட்ரேட் தலைமையிலான குழுவிடம் பேசி, முதன் முதலாக இரண்டு ரூபாயை பஞ்சப்படியாகப் பெற்றுத் தந்திருக்கிறார் ஜெ.ஜெ. தாஸ். ன்று அணா என்ற அளவில் அதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த கூலி உயர்வு தொடர்பான உடன்படிக்கையும் அப்போது ஏற்பட்டிருக்கிறது. அவர் பெற்றுத் தந்த கூலி உயர்வுக்கு நன்றி கூறும் வகையில், தொழிலாளர்கள் எல்லோரும் சேர்ந்து அய்ந்து ரூபாயைத் திரட்டி வெகுமதியாக அளித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஜெ.ஜெ. தாஸ் அவர்களின் தலைமையில் வார விடுமுறைகள், தேசிய விடுமுறைகள் ஆகியவற்றையும் தொழிலாளர்களின் பணியையும் முறைப்படுத்தும்படிபோராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஜெ.ஜெ. தாஸ், தொழிலாளர் போராட்டங்களின்போது சிறை சென்றிருக்கிறார். நூல் ‘கோட்டா’ உரிமத்தை அவர் பெற்றிருந்ததால் அவ்வப்போது மாவட்ட…
எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன் பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை அவர்களால் பத்திரப்படுத்த முடியாது அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு அவளிடத்தில் வேறொருவருமில்லை அதற்காகவே நான் மரித்துப்போகிறேன் நான் வாளொன்றையும் எடுத்துச் செல்லவில்லை குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன் புழு துளையிட்ட பழத்தின் விதையாக நான் நிச்சயம் திரும்பி வருவேன் காதலித்ததற்காகவும் முத்தமிட்டதற்காகவும் கொலை செய்யப்பட்ட நான் நிறையக் கிளைகளையுடைய கனிகளையுடைய அத்திமரமாய் முளைத்தெழுவதற்கும் அனேக வாய்ப்பிருக்கிறது என் கிளைகளை வந்தடையும் பறவைகள் என் கனிகளைக் கொத்தித் தின்பதைப்போல எனது கழுத்தறுத்துக் கொன்றவர்களும்கூட என்னில் வந்து இளைப்பாறலாம் நிச்சயமாக நிழல் தருவேன் நான் அணில் குஞ்சுகள் வந்து முத்தமிட்டாலென்ன நீங்கள் வந்து முத்தமிட்டாலென்ன மீண்டும் முத்தத்திற்காகவே முட்டி முளைக்கப்போகும் மரம் நான் தைரியமாக வந்து என்னை முத்தமிடுங்கள் அப்படியொரு முத்தத்தில் நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு வேறொருவருமில்லையென்று.
சின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் கைப்பிடியளவு எஞ்சியிருந்த அரிசியை அம்மா தன் மூத்த மகளுக்குக் கொடுக்க, அவள் சாப்பிடாமல் சின்னிக்குக் கொடுக்க, சின்னி அதை அப்படியே தம்பிக்குக் கொடுத்துவிடுகிறாள். இந்த நிலையிலும் தன் பிள்ளைகளை நினைத்து அந்த அம்மாவுக்குப் பெருமிதம். பசியே அன்றாடமாக இருக்கும் சின்னியின் வாழ்க்கையில் ஓராண்டுக்கு முன்பு ஒரு வசந்த காலம் வந்தது. அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு விபத்தால். சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது லாரியில் சின்னி அடிபட்டுவிட, லாரியின் உரிமையாளர் சின்னியை ஒரு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறார். தினமும் சின்னிக்குப் பழங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறார். அவள் குணமாகி வீட்டுக்குச் சென்ற பின்னும் மாதாமாதம் அவள் வீட்டுக்கு…
ஊர் ரட்சைக் கல்லருகிலே பூங்குளமே குழுமியிருந்தது. கோல்காரன் எல்லோரையும் அடக்கிக்கொண்டிருந்தான். ஊரிலிருக்கிற எல்லாத் தலைக்கட்டுகளும் வந்தானதா எனப் பார்த்துவிட்டுப் பேசினார் நாட்டாண்மை முனியப்பன். “இது ஒரு அவசரக் கூட்டம். ஆனா முக்கியமான கூட்டம். நாமும் குடியானவங்க கணக்கா மாறணும். மானம்-மரியாதையோட வாழணும். இங்கக்கீற பெருசுங்க தலமொறயப் போல, வளந்து வர்றதுங்களும் கையில தண்ணியையும் கூழையும் களியையும் வாங்கித் தின்னுனு, சேவகம் புரியணும்னு அவசியமில்ல. பெரியவங்க சொல்ற சீர்த்திருத்தக் கருத்துகள எடுத்துனு நம்ம பூங்குளம் இனிமே சீர்த்திருத்த பஞ்சாயத்தா இருக்கணுமின்னு சொல்லிக்கிறேன்.” நாட்டாண்மையின் பீடிகைக்கு சலசலப்பு எழும்பியது. கோல்காரன் மறுபடியும் கத்தினான். திருவேங்கடம் பேசவும் கூட்டம் அமைதியானது. “யாரோ ஒருசிலரின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜாதிமுறை காலாகாலமாக வழங்கி வர்றதினாலேயே சரியாயிடுமா? அதை அப்படியே ஏத்துக்கணுமா? உனக்கும் எனக்கும் இந்த ஜாதிமுறை அவமானத்தையும் இழிவையும் தந்ததில்லாம வேற எதை தந்தது? இந்த முறையை கடவுள் ஏற்படுத்தினார் என்றால் அப்படிப்பட்ட ஓரவஞ்சனை கொண்ட கடவுளே…
வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்.வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். தன் நலனைவிட, பொது நலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation), பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனிவரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் திட்டங்கள், பிற அரசியல் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்த அடிப்படைகள் ஆகியவற்றை விளக்க முற்பட்டிருக்கிறோம். கட்சியின் கோட்பாடுகள் சென்ற பகுதியின் தொடர்ச்சி…… II – புதிய பிரச்சினைகள் 20. இதுவரை, ஆங்கிலேயர் இந்தியாவில் விட்டுச்சென்ற பழைய பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பது குறித்துப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கண்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு புதிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன.…
பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் ஷெட்யூல்டு வகுப்பினரின் குறைகளை எடுத்துக்கூறி, அவற்றிற்கு தீர்வுகாண அவசியப்படும் நடவடிக்கைகள் பற்றி யோசனைகளை வழங்குகிறது இந்த கோரிக்கை மனு. குறைகளைப் பட்டியலிட்டுக் கூறும்போது, மத்திய சர்க்காரால் மட்டுமே தீர்வு காணக்கூடிய குறைகளை மட்டுமே நான் கவனத்தில் கொண்டேன். இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள குறைகள் மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியாக விவாதிக்கப்பட்டுள்ளன: (1)அரசியல் ரீதியான குறைகள் (2) கல்வி சார்ந்த குறைகள் (3)மற்ற குறைகள் அரசியல் குறைகளை பகுதி I பரிசீலிக்கிறது; பகுதி II கல்வி சார்ந்த குறைகளையும்: பகுதி III பிற குறைகளையும் எடுத்துரைக்கின்றன. இத்துடன் பகுதி IV ஐயும் சேர்ந்துள்ளேன்; அதில் இடைவிடாத துன்பகரமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருப்பவர்பால் ஒவ்வொரு சர்க்காரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய கடமை பற்றி துணிவுடன் பேச முற்பட்டுள்ளேன். இதை இந்திய சர்க்கார் அங்கீகரிப்பர், ஷெட்யூல்டு வகுப்பினர்களுக்கு அவர்கள் ஆற்ற வேண்டியதை ஆற்றுவர் என்ற நம்பிக்கையில் இதைச் செய்திருக்கிறேன். சில பகுதிகளைக்…
ஆசிய ஜோதி கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை Asiya Jothi Kavimani Desiga Vinayagam Pillai Translations from “Light of Asia” by Sir Edwin Arnold 1879 முன்னுரை 2015 Preface 1. புத்தர் அவதாரம் 2. அருள் உரிமை 3. காதல் பிறந்த கதை 4. சித்தார்த்தன் கேட்ட தேவகீதம் 5. சித்தார்த்தன் துறவு 6. புத்தரும் ஏழைச் சிறுவனும் 7. கருணைக் கடல் 8. புத்தரும் சுஜாதையும் 9. புத்தரும் மகனிழந்த தாயும்