Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
பகுதி 1 சமயத் தொடர்புடையது. [btn btnsize=”large” bgcolor=”#dd3333″ txtcolor=”#ffffff” btnnewt=”1″ nofollow=”1″]புதிர்1[/btn] ஒருவர் இந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு இந்தியா பல்வேறு சமுதாயங்களின் தொகுதி ஆகும். இதில் பார்சிகள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், இந்துக்கள் இருக்கிறார்கள். இந்தச் சமுதாயங்களுக்கு அடிப்படையாக இருப்பது இனம் அல்ல. மதமே இவற்றின் அடிப்படையாகும். இது ஒரு மேற்போக்கான கருத்தேயாகும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான விஷயம் ஒரு பார்சி தம்மைப் பார்சி என்றும், ஒரு கிறிஸ்தவர் தம்மை ஒரு கிறிஸ்தவர் என்றும், ஒரு இந்து தம்மை இந்து என்றும் ஏன் கூறிக்கொள்கின்றனர் என்பதேயாகும். பார்சி, கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியோரைப் பொறுத்த மட்டில் இதற்கு விடை காண்பது எளிது. ஒரு பார்சி தம்மைப் பார்சி என்று கூறுவது ஏன் என்று அவரிடம்கேட்டால், இந்தக் கேள்விக்கு விடை கூறுவது அவருக்குக் கடினமாயிராது. தாம் ஜொராஸ்டரைப் பின்பற்றுவதால் தாம் ஒரு பார்சி என்று…
The scheme was launched in 2008 to try and ensure that Dalit and tribal girls finished school and were not married off before they turned 18 A government study has questioned the implementation and relevance of a scholarship programme for Scheduled Caste and Scheduled Tribe schoolgirls, raising concern among social activists that the education ministry might now discard the scheme. The activists believe that the government should come up with more scholarship schemes for students from the deprived sections, especially with the second wave of Covid leaving many children orphaned in these communities. What has compounded the activists’ fears…
முன்னுரை இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண இந்து மக்களுக்காக எழுதப் பட்டுள்ள நூல். பிராமணர்கள் அவர்களை எத்தகைய புதை சேற்றில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும், பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில் அவர்களை இட்டுச் செல்வதற்காகவும் இது எழுதப்பட்டுள்ளது. பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள்: இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து பல ஐரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். இது தொடர்பாக இந்தப் புத்தகத்தில்…
//களஆய்வு செய்து தான் நம்முடைய கிராம அமைப்பின் பிரச்சினைகளை சொல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை. எனினும் ஒட்டனந்தல் பிரச்சினை பற்றிய விரிவான புரிதலை கொடுக்கிறது இந்த களஆய்வு. இதன் மூலம் அப்பிரச்சினை பற்றிய சில அடிப்படையான செய்திகளை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ஊரில் ஒடுக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். அதேவேளையில் அவர்கள் சாதி இந்துகளை சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு நிலம் உள்ளிட்ட தற்சார்புக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அந்த தற்சார்பு சாதி இந்துக்களால் கடுமையாக வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்காக தங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சிவில் உரிமைகளை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து தடைகளை எழுப்பி வந்துள்ளனர். ரேஷன் கடை, அங்கன்வாடி, நீர்த்தேக்கத் தொட்டி, பள்ளிக்கூடம் போன்றவை சாதி இந்துக்கள் பகுதியிலேயே இருக்கின்றன. அதற்காக செல்லும்போது இம்மக்கள் பலவகைகளில் அவமானப்படுத்தப்படுள்ளனர். அதோடு தங்களை பண்பாட்டு அதிகாரத்தை காட்டியும் இம்மக்களை இழிவுபடுத்தி வந்துள்ளனர். காலில் விழுந்த பிரச்சினையை பற்றி மட்டும் திரும்ப…
தாழ்த்தப்பட்ட சாதியினர் சம்மேளனம் (Scheduled Castes Federation) கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியிடைந்தது.* அதன் தோல்வியைத் தொடர்ந்து சிலர் அதைவிட்டு வெளியேறினர். சிலர் அதில் நம்பிக்கையிழந்தனர். எனக்கு இந்தத் தோல்வி மனப்பான்மை இல்லை. தேர்தலில் இடங்களை வெல்வது சம்மேளனத்தின் இலட்சியமல்ல. சம்மேளனத்திற்கு இடங்களை வெல்வது ஒரு லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமேயாகும். லட்சிய மானது, யாருக்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டதோ, அந்த மக்களுக்கு சேவை செய்வதற்கேயாகும். பிரச்சினை இருக்கின்ற வரையில் சம்மேளனம் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து இருந்து வரும். சம்மேளனத்தின் தோல்வி வரவேற்புக்குரியதே. ஏனெனில் சம்மேளனத்தில் புகுந்த மிகவும் விரும்பத்தகாத கூறை வெளியேற்று வதற்கு அது உதவியுள்ளது. சம்மேளனத்தில் நீடிப்பவர்கள் மீது கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தோல்விக்குப் பின்னர் சம்மே ளனம் காலநிலையால் பட்டுப்போன மரமாகத் தோன்றக்கூடும்.. ஆனால் அதன் வேர்கள் நிச்சயமாகக் காய்ந்துவிடவில்லை. (ஒப்பம்) பி.ஆர். அம்பேத்கர்’ *1946-ல்நடைபெற்றது 1. ஜெய்பீம்,மார்ச்18,1946 மறு அச்சு ; கைர்மோட், தொகுதி…
Does Caste Discrimination Exist in Silicon Valley Firms? Indian Americans Divided Over Issue at Santa Clara County Human Rights Commission Hearing By SUNITA SOHRABJI/India-West Staff Reporter More than 462 people, the majority Indian Americans, provided testimony over seven hours April 29 evening, as the Santa Clara County (California) Human Rights Commission, held a hearing on the divisive issue of caste discrimination and whether it exists in the U.S., particularly in Silicon Valley’s technology companies. Protima Pandey, director of the Office of Women’s Policy at the County of Santa Clara, kicked off the hearing, stating: “Covid 19 has exposed the inequalities…
Telugu author Manasa Yendluri is challenging mainstream perceptions of gender, sexuality and religion Dalit feminist writer Manasa Yendluri has won the Sahitya Akademi Yuva Puraskar 2020 for her collection of Telugu short stories, Milinda. Bold and honest, the stories talk of being a minority in India, whether by virtue of gender, sexuality or religion. While Milinda is Yendluri’s debut fiction, she has also translated Sharan Kumar Limbale’s Marathi novel, O, into Telugu. Excerpts from an interview with the 34-year-old Hyderabad-based author who is changing the Telugu literary landscape. Both your parents are literary figures. Can you tell us something about them? My mother, late…
தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம்; பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது. தம்மபதம் [புத்தர் பெருமான் அருளிய அறநெறி] தமிழாக்கம் : ப.இராமஸ்வாமி
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட தலித் பணியாளர்கள் மீது கொடும் சித்ரவதைகளை செய்வதாக கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் பேப்ஸ் அமைப்புக்கு எதிராக அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்து கோயில் கட்டுமான பொறுப்பை பொச்சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாரயண் சன்ஸ்தா (பேப்ஸ்) என்னும் இந்து அமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செய்துவருகிறது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சம் பேர் வசிக்கும் நியூ ஜெர்சியில், அமெரிக்க நாட்டிலேயே மிகப் பெரிய இந்து கோயிலை கட்டும் நோக்கோடு அக்கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்குப் பணி புரிய இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை (பெரும்பான்மை தலித்துகள்) இந்த அமைப்பு பணி அமர்த்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளது. நியூஜெர்சியில் குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு…
மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது, பொழுது போக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை எப்படிப் புரிந்து கொண்டாலும், தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை…