Author: Sridhar Kannan

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 33 பொருளடக்கம் பக்கம் பிரிவு 1 1947 நவம்பர் 20 முதல் 1949 மார்ச் 31 வரை 1. அந்நிய செலாவணி ஒழுங்கமைப்பு (திருத்த மசோதா) 5 2. சட்ட மறுசீரமைப்புக் குழுவை நியமித்தல் 7 3. இந்திய செவிலியர் மன்ற மசோதா 19 4. கூடுதல் மாகாண சட்ட அதிகார மசோதா 21 5. சமஷ்டி நீதிமன்றம் (அதிகார வரம்பை விரிவுபடுத்தும் மசோதா) 35 6. மாகாண நொடிப்பு நிலை (திருத்த) மசோதா 51 7. 1946, இந்தியா சட்டத்தின் (மத்திய அரசு மற்றும் சட்டபேரவை) 2 மற்றும் 3-வது பிரிவுகளின் கூறப்பட்டுள்ள காலத்தை விரிவு படுத்துவது பற்றிய தீர்மானம் 62

Read More

காலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலாந்தில் நடத்தி வந்தது. இந்தியர்கள் இந்த தேர்வில் பங்கேற்கும் வண்ணம் இந்தியாவிலும் இந்த தேர்வினை நடத்த வேண்டும் என தாதாபாய் நவ்ரோஜி போன்ற தலைவர்கள் குரலெழுப்பினர். அதற்காக பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் தீர்மானம் ஒன்றையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர். ஆனால் இந்த தேர்வை இந்தியாவில் நடத்தக் கூடாதென ரெட்டைமலை சீனிவாசன் கடுமையாக எதிர்த்தார் . இந்த தேர்வு இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் மட்டுமே தேர்வாகி அதிகாரிகளாக வரக்கூடும். ஏனென்றால் பிற சமூகங்கள் இன்னமும் உயர்கல்வியை எட்டாத நிலையில் பிராமணர்கள் அதிகாரிகளாக வந்தால் சாதி பாகுபாட்டால் ஒடுக்கப்பட்டோரின் நிலை இன்னமும் மோசமாகும் என்று கருதினார். அவரின் பறையர் மகாஜன சபா ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த விண்ணப்பம் செய்தது.காங்கிரஸ் அளித்த விண்ணப்பத்திற்கு மாற்றாக 112 அடி நீளமுள்ள 3412 பேர் கையொப்பம் கொண்ட மனுவை சபா 23 December 1893 அன்று…

Read More

தமிழகத்தைச் சேர்ந்தவரும், 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் காடுகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆதிவாசி சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு, உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி தனது 84 வயதில்  இன்று காலமானார்.அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது நடவடிக்கையின் மூலம், இந்தியாவிலேயே பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அதிக வயதுடைய செயல்பாட்டாளர்களில் முதன்மையானவராக ஸ்டேன் சுவாமி கருதப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த மே 28 அன்று, மும்பை உயர்நீதிமன்றம் ஸ்டான் ஸ்வாமியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும், அதற்கான தொகையை அவரே செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த மே 30 அன்று கொரோனத் தொற்று உறுதிபடுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில், சில நாட்களாக அவர் உடல்நிலை…

Read More

Dalit elders are forced to prostrate before an extra-constitutional body consisting of caste Hindus for conducting a temple festival without their permission in a Tamil Nadu village. Caste-based intimidation and humiliation has once again raised its ugly head in Tamil Nadu, a State that prides itself in upholding the social reformer ‘Periyar’ E.V. Ramasamy’s principles of self-respect and social justice. On May 14, three Dalits in their seventies were made to prostrate before the caste Hindu-dominated “oor panchayat” at Ottanendal village near Tiruvennainallur in Villupuram district. “Oor panchayats”, unlike the democratically elected village panchayats, are extra-constitutional bodies operating in the rural…

Read More

சென்னை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் பெரும்பாலும் சிலை வடிவமைப்பு சிற்பி சிவா என்ற இவர் பெயரைக் காணலாம். ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது ராணிப்பேட்டை மாவட்டம்) வாலாஜாப்பேட்டை வட்டம் காரை மாநகரில் (காரை காலனி என்பதை அந்த ஊர் மக்கள் அவ்வாறு தான் அழைக்கின்றனர்) ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரில் உள்ள ஆதி-திராவிடர் நலத்துறை பள்ளியில் படித்தவர். பிறகு ராணிப்பேட்டையில் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிமிடெட் என்ற பீங்கான் பொருட்கள் மற்றும் உரம் உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையில் மோல்டிங் பிரிவில் பணியாற்றினார். அங்கு பீங்கான் பொருட்கள் அச்சு எடுக்கும் போது தோன்றிய ஒரு சிந்தனை வாழ்நாள் முழுவதும் அவரை ஒரு இலட்சிய வாதியாக மாற்றியது. அந்த மோல்டிங் கலையை பயன்படுத்தி தான் தெய்வமாக போற்றும் இலட்சிய தலைவர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக தோன்றிய…

Read More

டி.பி. ஜெயின் கல்லூரி வரலாற்றிலேயே முதன் முறையாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு விழா எடுத்து அந்த விழாவில் முதல் விருந்தினாராக என்னை அழைத்து எனக்குப் பெருமை சேர்த்திருக்கிற கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் கல்லூரி தாலாளர் அவர்களுக்கும் கல்லூரி பேராசிரியர் அவர்களுக்கும் முதல்வர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாபெரும் தலைவர் உலகப் புகழ் பெற்றத் தலைவர் அவருக்கு விழா எடுப்பதில் எங்களுக்குப் பெருமை என்று  என்னிடத்தில் சொன்னார்கள். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இந்த கல்லூரிக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் நான் விளக்கிச் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு மாபெரும் தலைவர். மாமேதை உலகப் புகழ்ப்பெற்ற சிந்தனையாளர், எழுத்தாளர் இவையெல்லாம் நாமறிந்த ஒன்றுதான். இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப்படுகிற மகாத்மா அவர்களின் பேச்சுக்கூட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும்…

Read More

‘மனம் எதைச் செய்ததோ அதை மனமே நீக்கவும் முடியும். மனிதனை அடிமை நிலைக்கு ஆளாக்கியது மனமே எனில், சரியாக வழி நடத்தப்படு மாயின், அதுவே அவருக்கு விடுதலையைக் கொணரவும் முடியும்.” ‘நற்பேச்சு போதிப்பதாவது : (1) எது வாய்மையோ அதை மட்டுமே ஒருவர் பேசுதல் வேண்டும்; (2) எது பொய்மையோ அதை ஒருவர் பேசாதிருத்தல் வேண்டும்; (3) ஒருவர் பிறரைப் புறங்கூறிப் பேசலாகாது; (4) இகழ்ந்துரைத் தலினின்று ஒருவர் தவிர்ந்திருக்க வேண்டும்; (5) அடுத்தவர் எவரையும் நோக்கி ஒருவர் சினச் சொல்லோ, இன்னாச் சொல்லோ பயன்படுத் தாதிருக்க வேண்டும். (6) அனைவரிடமும் ஒருவர் அன்புடனும், கனிவுடனும் பேசுதல் வேண்டும்; (7) கருத்தற்ற, பயனில் சொல் பேசாதவராய், கருத்துள்ள பயனுள்ள சொல் மட்டுமே பேசுபவ ராய் இருத்தல் வேண்டும்.” ‘நல்லொழுக்கப் பாதையென்று (1) சீலம் (2) தானம்; (3) உபேக்கம்; (4) நெக்கமம்; (5) வீரியம்; (6) காந்தி; (7) சுச்சும்;…

Read More

சாதி அமைப்புமுறை தொடரும் வரை தான் பிராமண வகுப்பு உயர் வகுப்பாக இருக்கும். எவ்வொருவரும் தம் கைகளில் உள்ள அதிகாரத்தைத் தாமே விரும்பி ஒருபோதும் கைவிட மாட்டார்கள். பிராமணர்கள் பலநூற்றாண்டுகளாக மற்ற சாதிகளின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள். அவர்கள் தாமே விரும்பி அதே அதிகாரத்தை கைவிட்டு பிறரைத் தமக்கு சமமாக நடத்துவார்கள் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. ஜப்பானிய சமுராய்களுக்கு இருந்த தேசப்பற்று பிராமணர்களுக்கு கிடையாது. புதிய சமத்துவத்தின் மீதான தேச ஒற்றுமைக்காக சமுராய்கள் தங்கள் தனிச் சலுகைகளை தியாகம் செய்ததுபோல பிராமணர்கள் தியாகம் செய்வார்கள் என்று எதிர் பார்ப்பது பயனற்ற செயலாகும். பிற சாதி இந்துக்கள் இதுபோன்ற காரியத்தைச் செய்வார்கள் என்றும் நாம் ஒருபோதும் எதிர்பார்க்க இயலாது. மராத்தியர்கள் போன்ற மற்ற சாதியினர்களாகிய சாதி இந்துக்கள் சலுகை பெற்ற வகுப்பினருக்கும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பினருக்கும் இடைநிலையில் உள்ளவர்கள் ஆவார்கள். – புரட்சியாளர் அம்பேத்கர்

Read More

அன்பினால் சினத்தை வெல்க; அறத்தினால் மறத்தை வெல்க; நன்பினால் பகையை வெல்க; நல்கலால் வறுமை வெல்க: இன்பினால் துன்பம் வெல்க; என்றுமே வற்றா மெய்மைப் பண்பினால் பொய்மை வெல்க; பாருளோர் போற்ற வாழ்க [btn btnsize=”small” bgcolor=”#1e73be” txtcolor=”#ffffff” btnnewt=”1″ nofollow=”1″]ஆசிரியர் குறிப்பு[/btn] [dropcap bgcolor=”#60d3e5″ style=”dropcap1″] சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார்.…

Read More

புதிர் எண் 2 வேதங்களின் தோற்றம்: பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப்பேசும் தன்மை வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனிதமான நூல் என்று கருதாத இந்து எவரும் இல்லை எனலாம். ஆயினும் எந்த ஒரு இந்துவிடமேனும் வேதங்கள் எவ்வாறு தோன்றின என்று கேட்டுப் பாருங்கள். இந்த எளிய கேள்விக்குத் தெளிவான திட்ட வட்டமான விடை கூறக்கூடியவரைக் காண்பது கடினமாயிருக்கும். இந்தக் கேள்வியை ஒரு வைதிக. பிராமணரிடம் கேட்டால் அவர், வேதங்கள் சனாதனமானவை என்பார். ஆனால் இது கேள்விக்கு விடை ஆகாது, முதலில் ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள் என்ன? சனாதனம்’ என்ற சொல்லுக்கு மிகச் சிறந்த விளக்கம் மனு ஸ்மிருதி அதிகாரம் 1. சுலோகம் 22-23க்கு குல்லுக பட்டர் எழுதியுள்ள உரையில் காணப்படுகிறது. குல்லுக பட்டர் ‘சனாதனம்’ என்ற சொல்லுக்கு இவ்வாறு விளக்கமளிக்கிறார்.[footnote type=”numeric”]1[/footnote] “சனாதனம்” என்ற சொல் ‘என்றென்றும் முன்பே இருந்துவருவது’ எனப் பொருள்படும் என்று அவர் கூறுகிறார். வேதங்களின்…

Read More