Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
[highlight bgcolor=”#1e73be” txtcolor=”#81d742″] சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தரம் – அன்னபூரணி அம்மாள் இணையருக்கு மகனாக 1922 சூலை 13 ஆம் நாள் சுந்தர சண்முகனார் பிறந்தார். இவரது இயற்பெயர் சண்முகம். பின்னாளில் தன் தந்தையின் பெயரை தன் பெயருக்கு முன்னர் இணைத்து சுந்தர சண்முகனார் ஆனார். தமிழ்நூல் தொகுப்புக்கலை என்னும் நூலின் வழியே தமிழ்நூல் தொகுப்பு முறையியலை சுந்தர சண்முகனார் வரையறுத்திருந்தார். அதனைக் கண்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்…
அயோத்திதாசர் ஆய்வு நடுவத்தின் க.அயோத்திதாசர் ஆவணப்படம் தயாரிப்பு – இயக்கம் பாரி செழியன்
Mumbai: In 2012, when Riya was pursuing her Masters at Tata Institute of Social Sciences (TISS), Mumbai, she had an assignment to write about her experience with caste discrimination. She scored four out of 10. “I don’t understand how I could get my own experience wrong. So I applied for revaluation and my score changed to 4.5,” said Riya, who now works as a research and advocacy officer at Dalit Women Fight, a group led by Dalit women for supporting survivors of caste atrocities. “The forms of caste discrimination we see now are more subtle and largely of everyday nature.…
உமது உருவப்படம் பார்க்கையிலும் ஊற்றெடுக்கும் எமது அறிவின் தாகம். வானம் வழுக்கி விழுந்ததென வகையாய் பொய்யுரைத்த புராணப்புரட்டுகளால் காலமெல்லாம் குனிந்தே சுமந்தவரின் முதுகை நிமிர்த்தியது உனது அறிவு தம் சாதி உயர்வென்று காட்ட வரலாற்றை திரிக்கும் பேதைகள் மத்தியில் எல்லோரும் சமமென்று வரலாற்றை சான்றுடன் மீட்டதால் நீ மேதை. ஆயிரம் ஆண்டுகளாய் பெண்களுக்கு மதம் சொத்துரிமை மறுத்ததை எதிர்த்து சட்டம் கண்டாய் அதை ஏற்க மறுத்தவர் நாண பதவியை தூக்கி எறிந்தாய். சமத்துவத்தை சகோதரத்துவத்தை அரசியல் சாசன முகப்புரையிலேயே பதித்தாய். ஆனாலும் என்ன ஒற்றை செல்பெருகி உயிர் வளர்ந்த உண்மை சொல்லும் அறிவியலை தொல்ப்பொருளாளர்கள் தோண்டியெடுத்து கண்ணில் காட்டும் ஆதாரத்தை கண்டப்பின்னும் பேதமையால் சிலபேர் இன்னும் திரிகின்றார் சாதிப்பெருமை பேசி. மனநோயால் பிறழ்ந்தவன் அம்மணமாய் நின்றுக்கொண்டு வீதியில் தம்மை வீரனென்று பிதற்றுவதைப் போல சாதித்திமிர் பேசி திரிகின்ற கிறுக்கர்கள் மத்தியில் உனதுருவம் சிலையாய்தான் நிற்கின்றது இன்றும். -திலகேஸ்வரன்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட குருவராஜாபேட்டை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 14 எதிரிகள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 07.05.2021-ம் தேதி 7 எதிரிகள் மீது இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு. R.சிவக்குமார், இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. A.R.கிளாஸ்டன் புஷ்பராஜ் இ.ஆ.ப., அவர்களின் உத்திரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் சரசுவதி படுகொலை – காதலிக்க மறுத்ததால் நடந்த கொலையல்ல, கொலையில் உள்ள மர்மமுடிச்சுகளை- உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்திட சிபிசிஐடி விசாரணை தேவை – கள ஆய்வறிக்கை 15.4.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தேவியாநந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற இளம்பெண் (19,) அதே ஊரில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் சரசுவதி காதலிக்க மறுத்ததால் கொலைசெய்துவிட்டார் என்ற செய்தி வெளிவந்தது. கொலைசெய்ததாக ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் பார்க்கவும், சரஸ்வதி கொலைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறியவும் கடந்த 22.4.21 அன்று தேவியாநந்தல் கிராமத்திற்கு சென்றோம். உண்மை நிலவரத்தை இரு தரப்பு மக்களிடமும் விசாரித்தோம். உண்மை தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். பழைய விழுப்புரம் மாவட்டம் இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்திலிருந்து பண்ருட்டி செல்லும் பாதையில் தேவியாநந்தல் என்கிற கிராமம் உள்ளது. ஊரின் தொடக்கத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. தேவியாநந்தல் கிராமத்தில் சுமார் 200…
உனது மயிரை உனக்கு சிரைக்கத் தெரியாது உனது செருப்பை உனக்கு தைக்கத்தெரியாது உனது நெல்லை உனக்கு விதைக்கத் தெரியாது உனது பானையை உனக்கு வனையத் தெரியாது உனது பிணத்தை உனக்கு புதைக்கத் தெரியாது என்றாலும் சொல்கிறாய் நீ என்னை தீண்டத்தகாதவன் என்று என்னை தீண்டாமல் வாழுமுன் கீர்த்தியை பார்க்க நான் காத்திருக்கிறேன்.. நீ வாழவும் நான் வேண்டும் நீ செத்தாலும் நான் வேண்டும் சொல் நீ என்னை தீண்டாமல் உன் நூலை பிடித்தபடி எத்தனை காலம் பட்டினி கிடப்பாய்? உன் மனு என் மயிர் -உதயகுமார் கருணாநிதி
ஓதியுயர் மெய்ஞா னங்கள் உலகினிலே புத்தர் தந்தார்! போதிமரம் அமர்ந்த காலை புத்தரெனும் அறிவன் கண்ட ஆதிவேதம் தமிழ்தா னென்றே அயோத்திதாசர் எடுத்து ரைத்தார்! பாதியிலே மாற்றி வைத்த பார்ப்பனியம் வேசம் என்றார்! அறிவினிலே உயர்ந்து நின்றார்! ஆக்கங்கள் போதம் செய்தார்! செறிவுறுமச் சேதி எல்லாம் செந்தமிழில் உள்ள தென்றார்! திறமெல்லாம் ‘தமிழன்’* தொண்டால் திக்கெட்டும் பரவச் செய்தார்! அறமொன்றே உலகோர் வாழ்வாம்; அயோத்திதாசர் அறமாய் நின்றார்! தமிழ்பௌத்த மறும லர்ச்சி தமிழர்க்கு மீட்சி என்றார்! அமிழ்தெனவே குறளைத் தந்த ஆசானை அரசன் என்றார்! அமிழ்தான ஆத்திச் சூடி அவ்வையே அம்மன் என்றார்! தமிழொன்றே தீர்வாய்ச் சொன்ன தமிழ்த்தாத்தா (பண்டிதர் க. அயோத்திதாசர் அவர்களின் 107 ஆவது நினைவு நாள் இன்று) முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.
Being born a woman comes with its host of struggles. Being born a Dalit woman and subjected to many forms of discrimination only adds to these struggles by leaps and bounds. By Kannalmozhi Kabilan Express News Service CHENNAI: Being born a woman comes with its host of struggles. Being born a Dalit woman and subjected to many forms of discrimination only adds to these struggles by leaps and bounds. But, all this adversity only serves to make us stronger, said Semmalar Jebaraj, offering a lived-in perspective about the life of an average Dalit woman and particularly, that of a Dalit…
பாலிவுட்டின் கவன ஈர்ப்புக்குரிய இளம் இயக்குநர். முதல் படமான ‘மஸான்’ மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது, 2 கேன்ஸ் விருதுகள் என பாலிவுட்டில் பலரின் புருவங்களை உயர வைத்தவர். இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பாசறையைச் சேர்ந்தவர். ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டடித்த ‘சேக்ரெட் கேம்ஸ்’ வெப் சீரிஸின் சிக்கலான 8 அத்தியாயங்களை இயக்கி அசத்தியவர். ‘சோர்’, ‘எபிபோனி’, ‘ஜூஸ்’ என்ற 3 குறும்படங்கள் மூலம் சர்வதேச அங்கீகாரங்களை வென்றவர். சமீபத்திய நெட்ஃபிளிக்ஸ் டாப் சார்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜி படத்தில் இவர் இயக்கிய ‘கீலி புச்சி’ பலத்த வரவேற்பைக் குவித்திருக்கிறது. “தலித் இயக்குநராக உங்களைப் பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? பாலிவுட்டில் அதற்கு எதிர்வினைகள் இருக்குமே?’’ “என் முதல் படம் ‘மஸான்’ ஒரு தலித் இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான கதை. பிணங்களை எரியூட்டும் குலத்தொழில்…