Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டில், சாதி வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் 2வது இடத்திலும் உள்ளதாக ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி சாதி அடிப்படையிலான வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், தமிழகத்தின் கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரையைச் சேர்ந்த தி ஃபேக்ட் அமைப்பின் திட்ட இயக்குநர் எஸ் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், மாவட்டம் தோறும் எத்தனை கிராமங்கள் சாதி வன்கொடுமைகள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடத்திய தீண்டமை ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் எத்தனை என்று கேட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கூடுதல் காவல்துறை…
கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்டோரின் இதயங்களில் ஒளிவிளக்காக வாழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த விளக்குக்குத் தன்னையே எண்ணெயாக உருக்கிக்கொண்டவர் அவரின் மனைவி ரமாபாய். தீராத வறுமையிலும், நெடிய பிணியிலும், அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிகொடுத்த நிலையிலும், தன் மரணவேளையிலும்கூட ‘அம்பேத்கர்’ என்ற லட்சியவாதிக்குத் தடையாக இருக்காமல், அவருக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்திருக்கிறார். அதனால்தான் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ என்ற நூலை ரமாபாய்க்குச் சமர்ப்பித்து, ‘பீம்ராவாக இருந்த என்னை டாக்டர் அம்பேத்கராக மாற்றியவர்’ என்று நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கிறார். தான் வாசிக்கும் அறைக்கும் அவரின் பெயரையே சூட்டியிருக்கிறார். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் ரமாபாய் குறித்த தகவல்கள் அரிதாகவே கிடைக்கும் நிலையில், தலித் பேந்தர்ஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜே.வி.பவாரும் (தமிழில் பா.பிரபாகரன்), மராட்டிய எழுத்தாளர் பேபி காம்ப்ளேவும் (தமிழில் இறையடியான்) எழுதிய நூல்கள் சற்று விரிவான தகவல்களை அளிக்கின்றன. வறுமையே வாழ்வு மஹாராஷ்டிரத்தில் உள்ள வனாட் கிராமத்தில் 7.2.1897 அன்று ரமாபாய் பிறந்தார். நிலமற்ற…
ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் புதியதாக 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதில் அமலாபுரத்தினை மாவட்ட தலைநகராக கொண்டு கோனசீமா என்ற மாவட்டம் உருவாக்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், அம்மாவட்டத்திற்கு “டாக்டர்.அம்பேத்கர் கோனசீமா” என பெயரிட தீர்மானிக்கப்பட்டது. டாக்டர்.அம்பேத்கரின் பெயரினை மாவட்டத்திற்கு வைக்க கூடாது என ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. வன்முறைக்காரர்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் கார்களுக்கு தீவைத்து கொளுத்தினர். அம்பேத்கரின் பெயரினை இரவோடு இரவாக மாவட்டத்திற்கு வைக்கவில்லை. கடந்த 15 நாட்கள் அனைத்து கட்சியினருடனும் கலந்து ஆலோசித்த பிறகுதான் இம்முடிவினை அரசு அறிவித்துள்ளது. கண்டிப்பாக அம்பேத்கரின் பெயரினை மாவட்டத்திற்கு சூட்டுவோம்; பெயரை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் விஸ்வரூப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜமைக்கா சென்று, அதன் தலைநகரில் அமைந்துள்ள தெரு…
An Indian-origin politician from the UK’s Opposition Labour Party, Councillor Mohinder K Midha, has been elected mayor of Ealing Council in west London, becoming the first female mayor of a local London council belonging to the Dalit community. Midha was elected for the next year’s term of 2022-23 at a council meeting on Tuesday. We are so proud that Cllr Mohinder Midha has been elected Mayor of Ealing for the next year, the Labour Party in Ealing said in a statement. The election is being celebrated by the British Dalit community as a proud moment. The first ever Dalit woman…
Vows of Dr. Ambedkar Dr. B.R. Ambedkar prescribhed 22 vows to his followers during the historic religious re-embracing to Buddhism on 14th October 1956 at Deeksha Bhoomi, Nagpur in India. The re-embracing to Buddhism by 10,00,000 people was histroic because it ewas the largest religious conversion, the world has ever witnessed. He prescribed these oaths so that there may be complete severance of bond with hinduism. Yes from this time onwards we are not hindus, and we will never be hindus!. These 22 vows struck a blow at the roots of hindu beliefs and practices. These vows could serve as…
விக்கிரவாண்டி அருகே புதைக்க இடம் இல்லாத நிலையில், பட்டியல் சமூகத்தை சார்ந்தவரின் உடலைத் தங்கள் கோயில் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இறந்த மூன்றாம் நாளே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றாக வேறு இடம் வேண்டும் என்ற உறுதியை அரசு அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இடத்தைக் கொடுத்துள்ளார். என்ன நடந்தது? தங்களுக்கென சுடுகாடு கூட இல்லாத பட்டியலின மக்கள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எட்டு குடும்பங்களும், 500க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு நிலையான சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்ற பகுதிகளில் எரிப்பதும், புதைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி…
I அயோத்திதாச பண்டிதர் (20/05/1845-05/05/1914) அவர்கள் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் தமிழ்ப்பேரறிஞரும் அரசியல் சீர்திருத்தவாதியும் ஆவார். அவர் தனது பன்முகப்பட்ட திறமைகளாலும் பன்முகப்பட்ட செயல் முறைகளாலும் காலம் கடந்தும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீதும் தனது தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளார். அவர் நடத்தி இருக்கின்ற பண்பாட்டுப் புரட்சிகளைப் பின்வரும் உள் தலைப்புகளில் காண்பது நலம். 1. பண்பாட்டு புரட்சி 2. இந்திய வரலாறு குறித்த அணுகுமுறை 3. இந்தியாவில் தொடர்ந்து வரும் கருத்தியல் முரண்பாடுகள். 4. பண்டிதரின் பார்வையில் தேசமும் அரசும். 5. சுரண்டலின் வடிவங்கள் (சமய, சமூக ஒடுக்குமுறைகள் பொருளாதார ஒடுக்குமுறைகளாக மாறுகின்ற தன்மை). 6. தமிழ் இலக்கிய, இலக்கணங்களை அவர் கண்ட பௌத்த அணுகுமுறை. 7. நவீன கால ஒளியைத் தந்த மேற்கத்திய அணுகு முறைகளில் இருந்து வேறுபட்ட நிலை. 8. பண்டித அயோத்திதாசரின் தீர்க்கமான முடிவுகள். 9. இட ஒதுக்கீடு…
AMARAVATI: The state government has decided to rename Konaseema district as Dr BR Ambedkar Konaseema district. The government has issued a preliminary notification on Wednesday seeking public objections/suggestions. The final notification will be issued after 30 days. Dalit organisations had demanded naming of the district after Ambedkar prior to the reorganization of the districts. They held rallies during the bifurcation of the district. The government initially ignored the demands and went ahead to name it as Konaseema district. The government realized the significance of naming the district after Ambedkar almost 45 days after the new district came into existence. Konaseema…
தமிழ் நாட்டில் முதன் முதலில் பார்ப்பனக் கருத்தாக்க சாதியச் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சமநீதி இயக்கம், அறிவாசான் அயோத்திதாசரிடம் இருந்தான் தொடக்கம் பெற்றது அவர்தான் சாதிய மனிதர்களாக ஆக்கப்பட்டிருந்தஒட்டுமொத்த பார்ப்பனரல்லாதாருக்கும் “தமிழன்’ “திராவிடன்’ என அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்தவர். தமிழ்த் தேசியத்தின் முன்னோடியான அயோத்திதாசரின் சமகாலத்திலேயே – அடங்காத கனலுடன் பார்ப்பனியத்தால் இழிவுக்கும் இயலாமைக்கும் ஆளாக்கப்பட்ட தொல்தமிழர்களின் அடியாழக் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒன்றுதிரட்டி வழிகாட்டுகிற சமூகக்காவலராய் முற்றும் பொருந்தியவரே டி. ஜான்ரத்தினம் ஆவார். 1846இல் பிறந்த – ஜான் ரத்தினம் அவர்கள், அயோத்திதாசருக்கு ஒரு சில மாதங்களே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜான் ரத்தினம், கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினூடே, கிறித்துவ மத நிறுவனப் பின்புலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினைப்பெற்றார். 1862இல் உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லமை பெற்ற அவர், சென்னை மாநகரில் புகழ்பெற்ற “ஸ்பென்சர் கம்பெனி’யில் 1863ஆம் ஆண்டு பணியில் அமர்ந்தார். சமூக…
கிங்ஸ்டன்: ஜமைக்காவில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு அவர் ஜமைக்கா கவர்னர் ஜெனரல் பேட்ரிக்குடன் தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு, கல்வி, சுற்றுலா துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், அந்நாட்டில் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ள சாலையை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “பாபாசாகேப் அம்பேத்கரின் பெயர் கடல் கடந்து பரவி இருப்பதை பார்த்து பெருமை கொள்கிறேன். அம்பேத்கர், மார்கஸ் கார்வே போன்றவர்களை ஒரு தேசத்துக்குரியவர்களாகவோ அல்லது சமூகத்துக்க உரியவர்களாகவோ வரையறுக்க முடியாது. அனைவருக்கும் சம உரிமை என்று அவர்கள் கொடுத்த குரலும், அனைத்து பாகுபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வர அவர்கள் எடுத்த முயற்சியும் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,’ என்று கூறினார். ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற…