Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Sridhar Kannan
The section of Tower Street between Church Street and Lower South Camp Road is to be renamed Dr B R Ambedkar Avenue in honour of the Indian jurist and economist who played a key role in the writing of the Indian Constitution granting equal rights to all citizens. That decision was taken in a resolution passed by the Kingston and St Andrew Municipal Corporation (KSAMC) two Fridays ago, and was described as “historic” by Kingston’s Deputy Mayor Winston Ennis at Tuesday’s KSAMC council meeting. “Colleagues, we are all aware of the immense value that the Republic of India brings to Jamaica…
உன்னத மகிழ்வான வாழ்க்கை (மகா மங்கள சுத்தம்) பகவன் புத்தர். பகவன் புத்தர் உன்னதமான மங்களங்கள் என்று வகுத்துரைத்த மங்கல உரையின் செய்திகள்: 1. தீயோரின் உறவை விடுத்தல் (Not associating with fools) 2.நல்லோரின் நட்பை வளர்த்தல். (Associating with wise) 3..தகுதிவாய்ந்த பெரியவர்களைப் போற்றல். (Reverencing those worth of respect) 4. தக்கப் பிரதேசத்தில் வாழ்தல். (Residence in a suitable locality) 5. நற்பலன் தருகின்ற செயல்களை புரிந்து இருத்தல். (Having made merit in the past) 6.நேர்மையான வழியில் தன்னை நடத்தி வருதல். (Once mind properly directed) 7. ஆழமான ஞானம், (Profound learning) 8.நேர்மையான தொழில்திறன், ( proficiency in once work) 9.கற்றறிந்த விநயம், (The learned moral discipline) 10.இனிய வாக்குடைமை (Gracious kindly speech) 11. தாய் தந்தையரைக் காப்பாற்றுதல் . (Giving support to…
தண்ணீர் எல்லோருக்குமானது: அம்பேத்கரின் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஒருபார்வை நவீன இந்தியாவின் புதிய கோயில்கள் என்றே ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள் புகழப்பட்டு வருகின்றன. அத்தகைய ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்களுக்கு முன்னோடி திட்டமாக , முதல் பல்நோக்குத் திட்டமாக இருப்பது தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம்! அப்போதைய பிகார் மாநிலத்தில் (தற்போதைய ஜார்கண்டில்) உற்பத்தியாகி வங்க தேசத்தில் இருக்கும் ஹூக்ளி ஆற்றில் கலக்கும் தாமோதர் நதி, மழைக்காலங்களில் கடுமையான சேதங்களை விளைவித்தது. ஆற்றை சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள் , கிராமங்கள் அதனை சார்ந்த தொழில்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து மக்கள் மீண்டும் வர மிகவும் சிரமப்பட்டன்ர். ஒவ்வொரு மழை காலத்திலும் அங்குள்ள மக்கள் கடுமையான சேதங்களை சந்தித்து வந்ததால் தாமோதர் ஆறு, ‘வங்காளத்தின் துக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலேயர்களின் பல் முயற்சிகள் , அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தன. வெள்ளப்பெருக்கை தடுக்கும் திட்டமாக, பள்ளத்தாக்கு திட்டத்தின்…
நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம் , வெள்ளி , மண் தைலம் , புகையிலை என் நான்கின் பெயரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு சீர்கேட்டை உண்டுசெய்யும் சாராயம், புகையிலை இவ்விரண்டிற்கும் வரிகளை அதிகப்படுத்துவது சுகமேயாம். மநுக்களுக்கு உபகாரமாக விளங்கும் வெள்ளியின் பேரிலும், மண்தைலத்தின் பேரிலும் வரிகளை அதிகப்படுத்தாமலிப்பது சுகமாம். எவ்வகையிலென்னில், தற்காலம் வெள்ளி சகாயமாகக் கிடைக்கின்ற படியால் ஒருரூபா, அரைரூபா. கால்ரூபா வென்னும் வெள்ளி நாணயங்கள் சேதமில்லாமல் வழங்கிவருகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியால் கார்க்கப்பட்டக் குடிகளும் வெள்ளிப் பாத்திரங்களையும் நகைகளையும் விசேஷமாகக் கையாடிவருகின்றார்கள். வெள்ளிப்பாத்திரங்களும், வெள்ளி நகைகளும் சகலவகுப்பார் வீடுகளிலும் விசேஷமாகப் பரவிவருவதினால் பிரிட்டிஷ் ராஜநீதியின் சிறப்பும், அவர்களது கருணையும் தெள்ளற விளங்குகின்றது. மநுக்களின் சிறந்த வாழ்க்கையே இராஜாங்க சிறப்பாதலின் வெள்ளி நாணயத்தின்மீது வரி விதிக்காமலிருக்க வேண்டுகிறோம். மண்தைலத்தின் சுகமோ தினேதினே ஓரணா சம்பாதிக்கும் கூலியாளும் ஒருகாசு தைலமேனும் வாங்கிக் குடுக்கையில் வைத்துத் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்து சுகித்து…
கனம் தங்கிய ரெவரண்ட் சி.எப். ஆன்று(Charles Freer Andrews)அவர்களும் சென்சஸ் உத்தேசமும். பண்டித அயோத்திதாசர் “இந்து சாதியோருக்குள்ள வகுப்புகளை விவரமாகக் கண்டறியவேண்டு மென்னும் ஆலோசனைக் கொண்டுள்ள சென்செஸ் கமிஷனரவர்களின் உத்தேசத்திற்கு மாறுதலாக ரெவரெண்டு ஆன்று அவர்கள் தோன்றி தனதபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளார். அவை யாதெனில் இந்துக் கோவிலுக்குள் போகாதவர்களாய் இருப்பினும் , இந்துவென்று கூறுவோர்களை யாதொரு மறுப்புமின்றி இந்துவென்றே எழுதிக் கொள்ளவேண்டும் என்கின்றார். இவற்றுள் இந்துக்களென்போர் பெருந்தொகையோரெனக் காட்டி தங்கள் சுகத்தைப் பெருக்கிக்கொள்ளுவதற்கு சகலரையும் இந்துக்களென்றே அபிநயித்து தங்கள் காரியம் முடிந்தவுடன், அப்பா நீங்கள் இந்துக்களென்றால் உங்கள் உட்பிரிவுகளென்ன, இந்துக்களுக்குள் தீண்டாதவர்களுமிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் சமரச ஆட்சி கொடுக்கலாமா, அது சாதியாசாரத்திற்கு முறணாச்சுதே என்று கழித்துவிட்டு ஏழைகளை முன்னேறவிடாதுச் செய்துக்கொள்ளுவார்கள். அப்போது நமது ரெவரெண்டு ஆன்று அவர்கள் தவிக்கு முயலை அடிப்பதுபோல் ஏழைகளை தமது மதத்திற் சேர்த்துக்கொண்டு தங்கள் கூட்டத்தைப் பெருக்கத்தக்க சுயப்பிரயோசனத்தை நாடி வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பதுபோல தமதபிப்பிராயத்தைக் கொடுத்துவிட்டார். இந்துக்களென்போரை இந்துக்களென்றே…
தென்னிந்திய ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றிப் பாபாசாகேப் அம்பேத்கர். (கேரளாவின் குருவாயூர் ஆலய நுழைவுப்போராட்டம்) “ஆலய பிரவேச பிரச்சனையை ஒரு விந்தையான, விபரீதமான அரசியல் செப்படி வித்தை என்றே கூற வேண்டும்” “உங்கள் கோவில்களைத் திறப்பதோ திறக்காம லிருப்பதோ உங்கள் இஷ்டம் ; அது நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விஷயம் ; அதற்காக நாங்கள் கிளர்ச்சி எதுவும் செய்யப் போவதில்லை . மனித ஆளுமையின் புனிதத்தை , தூய்மையை மதிக் காதிருப்பது சரியல்ல , முறையல்ல என்று நீங்கள் கருதினால் உங்கள் கோவில்களைத் திறந்து விட்டுப் பண்பாளர்களாக, பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாக, பெருந்தன்மையுடையோராக நடந்து கொள்ளுங்கள். அப்படியில்லை நாங்கள் பண்பாளர்களாக இருப்பதைவிட இந்துக்களாகத்தான் இருப்போம் என்றால் கதவுகளை அடைத்துவிட்டு எக்கேடாவது கெட்டுப்போங்கள். ஏனென்றால் கோவில்களுக்கு வரவேண்டும் என்று நாங்கள் ஒன்றும் துடித்துக் கொண்டிருக்க வில்லை” என்பது உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூக விடுதலையும் நாட்டமுள்ள பகுத்தறிவுள்ள மனிதர்களின்…
1922 இல் பதிப்பு கண்ட தமது “சாதி குறித்தஆய்வு” நூலுக்கு பேராசிரியர் இலட்சுமி நரசு(Pokala Lakshmi narasu) எழுதிய முன்னுரையின் தமிழாக்கம். முன்னுரை. இந்த புத்தகம் சமூக சீர்திருத்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சென்னை(மெட்ராஸ்) வார இதழில் முதலில் வெளியான கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. அக்கட்டுரைகள் தோன்றிய நேரத்தில், ஒரு புத்தகமாக விரிவுபடுத்துவதன் மூலம் இன்னும் நிரந்தர வடிவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் வெளிப்படுத்தப்பட்டது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அந்தக் கட்டுரைகளைத் திருத்தி மேலும் கூடுதல் விஷயங்களுடன் பெரிதாக்கினேன். புத்திசாலித்தனம் அல்லது அசல் தன்மை பற்றிய பாசாங்குகளை (pretetions) புத்தகம் செய்யவில்லை. நான் குறிப்புகளைத் தரவில்லை என்றாலும், சாதியைப் பற்றிய இலக்கியத்தின் பெரும்பகுதியை நான் பங்களித்துள்ளேன். இப்புத்தகம் கற்றறிந்த அறிவாளிகளுக்கு அல்ல, ஆனால் சாதியின் கேள்விகளைக் கருத்தில் கொள்ள வரையப்பட்ட பொது அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே. . சமூக சகிப்பின்மை, அடிமைத்தனம் மற்றும் அநீதியை எதிர்த்துப் போராடுபவர், மாற்றீடு அல்லது ஆக்கபூர்வமான…
தீண்டப்படாதவர்கள் குறித்தும், அரசியல் சட்டப்பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி காட்டிய மனப்பான்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கை, 19 செப்டம்பர் 1932 மகாத்மா காந்தி, சர் சாமுவேல் ஹோர், மற்றும் பிரதமர் ஆகியோரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அண்மையில் பத்திரிகைகளில் படித்தேன். பிரிட்டிஷ் அரசாங்கம் தானாகவே முன்வந்தோ அல்லது பொதுஜன அபிப்பிராயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டோ தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையேல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று திரு. காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் படித்துத் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். சாகும்வரை உண்ணாவிரதம் என்ற மகாத்மாவின் அறிவிப்பு என்னை எந்த அளவுக்கு இக்கட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். வட்டமேசை மாநாட்டில் திரு. காந்தி பேசும்போது வகுப்புப் பிரச்சினை அத்தனை முக்கியத்துவமில்லாத ஒரு சிறு பிரச்சினை என்றே குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்சினைக்காக அவர் தம் உயிரைப் பணயம் வைப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.…
புரட்சிப்பாடகர் தலித் சுப்பையா அவர்கள், சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையடைந்துள்ளார் என்கிற துயர்மிக்கச் செய்தி வந்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டி எனும் சிற்றூர்ச் சேரியில் கருப்பன் என்னும் நாட்டு வைத்தியருக்கு மகனாகப் பிறந்தவர் பிச்சை. தமிழகத்தில் உள்ள சாதிய கொடுமைகள் நிறைந்த கிராமங்களைப் போன்ற கிராமம்தான் முனியாண்டிப்பட்டி. சாதி இந்துக்களே நிலவுடைமையாளர்கள். குறிப்பாக, கள்ளர்களின் ஆதிக்கம் உள்ள கிராமம். வேளாண் தொழிலாளியாகவும், சிறு வைத்தியங்களை செய்து வந்தவருமாகவும் இருந்த கருப்பனின் வீட்டிற்கு மாலை நேரத்தில் மக்கள் வருவதுண்டு. அப்படி வருபவர்கள் அமர்வதற்காக, இரண்டடி அகலமும் ஐந்தடி நீளமும் உடைய பாறை ஒன்றை வாசலில் வைத்திருந்தார் கருப்பன். தாங்கள் அந்த வழியாக வரும்போது அந்த பாறையில் சேரிக்காரர்கள் உட்கார்ந்திருப்பதா என்று கோவப்பட்டார்கள் கள்ளர்கள். வேறு வழியின்றி அந்த பாறையை அகற்றினார் கருப்பன். இப்படி பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கொண்டிருந்த அந்த கிராமத்தில்…
சாதியொழிப்பில் அம்பேத்கர் பயன்படுத்திய கருத்தியல் ஆயுதங்கள்பற்றி ஒரு பார்வை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாபெரும் போராளியாக இருக்கும் அதே நேரத்தில், உலகெங்கும் மதிக்கப்படும் மகத்தான அறிஞராகவும் இருப்பது டாக்டர் அம்பேத்கரின் தனிச்சிறப்பு. சாதிக்கு எதிரான யுத்தத்தில் அம்பேத்கரின் கைகளில் இரண்டு ஆயுதங்கள் இருந்தன. ஒன்று, இடைவிடாத களச்செயல்பாடு. இன்னொன்று, கருத்தியல் ஆயுதம். இந்த இரண்டு ஆயுதங்களையும் தன் வாழ்நாள் முழுவதும் கூர்மையாகத் தீட்டிக்கொண்டும், லாவகமாகப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார் அவர். கருத்தியலைப் பொறுத்தவரை அவரது வலுவான ஆயுதங்களுள் ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையும், ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலும் அடங்கும். ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம் தோற்றம் வளர்ச்சி என்கிற ஆய்வுக் கட்டுரை’ மே 9, 1916-ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்த மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது. அம்பேத்கர் தனக்கு முன்னதான ஆய்வாளர் களின் கருத்துகளை ஏற்றும் எதிர்த்தும் இதில் தெளிவாக்குகிறார். சாதியும் அகமண வழக்கமும் ஒன்றே!…